Body

டயலொக் 105வது ‘மலையக நீலச்சமர் (Hill Country Battle of the Blues)’இற்கு அனுசரணை

2024 மார்ச் 12         கொழும்பு

 

Dr. Hans Wijayasuriya Receives GSMA Chairman's Award

படத்தில் இ - வ: பிறயன் சேனாரத்ன - கண்டி திருத்துவக் கல்லூரியின் பொறுப்பாசிரியர், மனுல குலரத்ன - கண்டி திருத்துவக் கல்லூரியின் அணித்தலைவர், வண. அருட்தந்தை. அரலிய ஜயசுந்தர, கண்டி திருத்துவக் கல்லூரியின் அதிபர், பிரஷான் கொஸ்டா, சிரேஷ்ட முகாமையாளர், சந்தைப்படுத்தல் தொழிற்பாடுகள், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, வண. அருட்தந்தை. கிறகரி பெர்னாண்டோ - கண்டி புனித அந்தோனியார் கல்லூரியின் உப அதிபர், திசர ஏக்கநாயக்க, கண்டி புனித அந்தோனியார் கல்லூரியின் அணித்தலைவர், நாளக்க சஞ்சீவ - கண்டி புனித அந்தோனியார் கல்லூரியின் விளையாட்டுத்தலைவர்

அமைதிசூழ் மலைகளின் நடுவே அமைந்திருக்கும் கண்டி நகரில் திருத்துவக் கல்லூரிக்கும் புனித அந்தோனியார் கல்லூரிக்கும் பெருஞ்சமர் முழக்கம் முழங்கிட, நாளைய வெற்றியாளர்களுக்கு வலுவூட்டிடும் அயராத அர்ப்பணிப்பின் வெளிப்பாடாக டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, 105வது ‘மலையக நீலச்சமருக்கு அனுசரணை வழங்குகிறது. இப்போட்டிகள் மார்ச் 15ம் மற்றும் 16ம் திகதிகளில் அஸ்கிரியவில் அமைந்துள்ள திருத்துவக் கல்லூரி கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறும்.

பிரதான அனுசரணையாளரான டயலொக் ஆசிஆட்டா, பெருஞ்சமர் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் ஆட்டங்களை நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளது. Dialog Television - ThePapare TV HD (அலைவரிசை இலக்கம் 126) மற்றும் ThePapare.com இணையதளம் மற்றும் Dialog ViU App ஆகியவற்றில் ஆட்டத்தை நேரடி ஒளிபரப்பாகக் காணலாம்.

1914ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட பாரம்பரிய போட்டியான ஜான் ஹலங்கோட ஞாபகார்த்த கிண்ணத்திற்கான இரண்டு நாள் போட்டியில், இந்த ஆண்டு திருத்துவக்கல்லூரி அணியின் தலைவராக மனுல குலரத்னவும், புனித அந்தோனியார் கல்லூரி அணியின் தலைவராக திசர ஏக்கநாயக்கவும் பங்கேற்பர்.

104 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் கண்டி திருத்துவக்கல்லூரி 23 வெற்றிகளைப் பெற்றுள்ளது, அதே நேரத்தில் புனித அந்தோனியார் கல்லூரி 11 வெற்றிகளைப் பெற்றுள்ளது, 70 போட்டிகள் முடிவு இல்லாமல் சமநிலையில் முடிவடைந்துள்ளன. 1992 ஆம் ஆண்டில் உமேஷ் டி அல்விஸ் தலைமையில் புனித அந்தோனியார் கல்லூரி இறுதியாக வெற்றியை சுவைத்திருந்த அதேவேளை, 2012 ஆம் ஆண்டில் நிரோஷன் திக்வெல்ல தலைமையில் திருத்துவக் கல்லூரி வெற்றிவாகை சூடியிருந்தது. 2023 ஆம் ஆண்டில் புனித அந்தோனியார் கல்லூரி அணியை 110 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தி மழையால் பாதிக்கப்பட்ட போட்டியில் 221 ஓட்டங்கள் எடுத்து முதல் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற கண்டி திருத்துவக் கல்லூரி தற்சமயம் வெற்றிக்கிண்ணத்தை தன்வசம் வைத்துள்ளது.

இதனை தொடர்ந்து சேர் ரிச்சார்ட் அளுவிகார கிண்ணத்திற்காக நடைபெறும் 42வது மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் ஆட்டம் மார்ச் 23ம் திகதி அன்று அரங்கேறும். இதுவரை ஒருநாள் ஆட்டங்களில் திருத்துவக் கல்லூரி 19 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கும் நிலையில் புனித அந்தோனியார் கல்லூரி 17 வெற்றிகளை பெற்றுள்ளது. 41வது ஆட்டம் உட்பட 4 ஆட்டங்கள் முடிவேதுமின்றி நிறைவடைந்த நிலையில் ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

திருத்துவக் கல்லூரியிலிருந்து குமார் சங்கக்கார, கௌஷல்ய வீரரத்ன, சச்சித் பத்திரன, நிரோஷன் திக்வெல்ல, லஹிரு குமார, மதீஷ பத்திரன ஆகிய வீரர்களும் புனித அந்தோனியார் கல்லூரியிலிருந்து முத்தையா முரளிதரன், ருவன் கல்பகே, பியல் விஜேதுங்க ஆகிய பல தேசிய கிரிக்கெட் வீரர்கள் நாட்டுக்காக ஆடி பெருமை சேர்த்துள்ளனர்.

டயலொக் ஆசிஆட்டா இலங்கை தேசிய கிரிக்கெட், கரப்பந்து, வலைப்பந்து மற்றும் ஈஸ்போர்ட்ஸ் அணிகளுக்கான பெருமைமிகு அனுசரணையாளராக செயற்பட்டு வருவதுடன், இலங்கை பகிரங்க கொல்ஃபிற்கு பிரதான அனுசரணையாளராக திகழ்வதுடன், பராலிம்பிக் விளையாட்டுகளில் தேசிய பரா விளையாட்டுகளுக்கும் உலக பரா விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் இலங்கை அணிக்கும் அனுசரணை அளிக்கிறது. இவற்றுடன் நாளைய வெற்றியாளர்களை வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம், தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட வலைப்பந்து போட்டிகள், பாடசாலை ரக்பி ஆகியவற்றிற்கு தொடர்ந்து அனுசரணை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.