“Dialog Power Plan” இலங்கையின் முதற்தர வலையமைப்பிடமிருந்து புதிய வரையறையற்ற பிற்கொடுப்பனவு பக்கேஜ்கள்
2019 செப்டெம்பர் 6 கொழும்பு
இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி “Dialog Power Plan” இனை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக பாவனையாளர்களுக்கு சிறந்த அழைப்பு, SMS, இன்டர்நெட் மற்றும் வீடியோ அனுபவத்தை முழுமையாக மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த மொபைல் பிற்கொடுப்பனவு திட்டங்கள் பிரத்தியேக சலுகைகள் இணையற்ற நன்மைகளுக்கு உத்தரவாதம் அளிக்கின்றது.
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் தடையற்ற மற்றும் தொந்தரவுகள் இல்லாத மொபைல் இணைப்பினை பராமரித்தல் பாவனையாளர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். இது மாணவர்கள், டிஜிட்டல் ஆர்வம் கொண்ட இளைஞர்கள், தொழில் முனைவோர் அல்லது தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Dialog Power Plans இலங்கை தனிநபரின் தகவல் தொடர்பு தேவைகளை சிறந்த முறையில் கவனிக்கின்றது. மாதம் முழுவதும் அழைப்பு நேரம், SMS, அல்லது டேட்டா இன்றி சிரமப்பட வேண்டிய அவசியமின்றி, ரீலோட் செய்ய வேண்டிய தொந்தரவுகள் அற்ற வெளிப்படைத்தன்மையினையும் கட்டுப்பாட்டினையும் பராமரிக்கின்றது.
அழைப்பு, SMS, மற்றும் டேட்டா ஆகியவற்றுக்கு மேலதிகமாக பல சலுகைகளை Dialog Power Plans வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. இது 14 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் மிக குறைந்த கட்டணத்திற்கு அழைப்புக்களை மேற்கொள்ளும் வாய்ப்பினையும், SMS களை அனுப்பும் வாய்ப்பினையும் வழங்குகின்றது. நாட்டின் மிகச்சிறந்த 4G வலையமைப்பில் மிகக்குறைந்த கட்டணத்திற்கு மாதத்திற்கு 50GB வரையில் வரையறையற்ற டேட்டாவினை வழங்குகின்றது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு priority முன்பதிவுகள், பிரத்தியேக சலுகைகள் மற்றும் புத்தம் புதிய Apple, Samsung, Huawei போன்ற இன்னும் அதிகளவான ஸ்மார்ட்ஃபோன்களுக்கு 40% வரை விலைக்கழிவினையும் வழங்குகின்றது.
மேலதிகமாக வாடிக்கையாளர்கள் வெளிநாடுகளுக்கு பிரயாணங்களை மேற்கொள்ளும் போது விமானத்திலும் தரையிலும் 20% மேலதிக சலுகைகளையும் வரையறையற்ற டேட்டா ரோமிங் கொடுப்பனவினையும் பெற்றுக்கொள்ள முடியும். வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்ஃபோனினை கொள்வனவு செய்யும் போது தங்களுடைய மாதாந்த பில் பட்டியலுடன் இணைத்து கட்டணத்தை செலுத்தும் வசதியினையும், வைத்தியர்களை இலகுவாக செனல் செய்துக்கொள்ளும் வசதியினையும் அல்லது Dialog Netflix இனை பதிவு செய்து மிகச்சிறந்த அனுபவத்தினையும் பெற்றுக்கொள்ள முடியும். வாடிக்கையாளர்கள் அவர்களின் பாவனையினை முழுமையாக தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும். MyDialog App இன் ஊடாக வாடிக்கையாளர்கள் தங்களின் குரல் மற்றும் டேட்டா பாவனையினை கண்காணித்தி;ட முடிவதுடன் தினசரி YouTube பாவனையின் போது டேட்டா பயன்பாட்டினையும் உங்களால் பார்வையிட முடியும். மேலும் வாடிக்கையாளர்கள் கடன் எல்லையினையும் தங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்துக்கொள்ள முடிவதுடன் இதே பிற்கொடுப்பனவு இலக்கத்தில் முற்கொடுப்பனவு Top-up களையும் மேற்கொள்ள முடியும். மேலும் டேட்டாவினை கொள்வனவு செய்துக்கொள்ளவும், பெறுமதி சேர் சேவைகளை செயற்படுத்திக்கொள்ளவும் முடியும்.
Dialog Power Plan ஆனது பாவனையாளர்களின் தேவைகளுக்கு அமைய வடிவமைக்கப்பட்டுள்ளது. வரையறையற்ற மொபைல் பிற்கொடுப்பனவு திட்டங்கள் ரூ.1000 முதல் காணப்படுகின்றது. இது வரையறையற்ற D2D அழைப்புகள், SMS மற்றும் 8GB டேட்டாவினையும் கொண்டுள்ளதுடன், ரூ.3300 மொபைல் பிற்கொடுப்பனவு இணைப்பு வரையறையற்ற D2D அழைப்புக்களையும் SMS இனையும், D2ND (ஏனைய வலையமைப்புகளுக்கு) 1000 நிமிட அழைப்பு நேரத்தினையும் மற்றும் 50GB டேட்டாவினையும் கொண்டுள்ளது. மேலதிகமாக நிலையான மொபைல் பிற்கொடுப்பனவு திட்டங்கள் ரூ.395 முதல் ஆரம்பமாவதுடன் இது D2D 1000 நிமிடங்களையும், D2D 1000 SMS களையும் 6GB வரையிலான டேட்டாவினையும் கொண்டுள்ளது. முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் இருவரும் தங்களுடைய தற்போதைய திட்டங்களை Dialog Power Plan க்கு மாற்றிக்கொள்ள முடியும். இலங்கையின் முதன்மையான MyDialog App இல் ஒரு முறை க்ளிக் செய்வதன் மூலம் இலகுவான மாற்றிக்கொள்ள முடியும்.
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை இயக்க அதிகாரி கலாநிதி ரெய்னர் டாய்ச்மென் கருத்து தெரிவிக்கையில் எங்களுடைய புதிய Dialog Power Plan உடன் இலங்கையின் மொபைல் பிற்கொடுப்பனவு அனுபவத்தை மிகச்சிறந்த முறையில் நாங்கள் வழங்குகின்றோம். பாவனையாளர்களின் அனுபவங்களை 6 முக்கிய நன்மைகளுடன் கவலையற்ற அனுபவத்துடன் மேம்படுத்துகின்றோம். வரையறையற்ற அழைப்பு இலங்கையின் மிகப்பெரிய மற்றும் சிறந்த வலையமைப்பில் அதிகளவான டேட்டா, பிரத்தியேகமான ஸ்மார்ட்ஃபோன் சலுகைகள், வெளிநாட்டு பிரயாணங்களின் போது வரையறையற்ற டேட்டா ரோமிங், Netflix ஆகிய சேவைகளை வெளிப்படைத்தன்மையுடன் மதிப்பு மிக்கதாக வழங்குகின்றது. புதிய மொபைல் பிற்கொடுப்பனவு அனுபவத்தை பெற்;றுக்கொள்ள புதிய வாடிக்கையாளர்களையும் தற்போதைய வாடிக்கையாளர்களையும் வரவேற்கின்றோம்.
இந்த Dialog Power Plan மொபைல் பிற்கொடுப்பனவு திட்டங்களை அனைத்து டயலொக் வாடிக்கையாளர் சேவை நிலையங்களில், நாடளாவிய ரீதியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட விற்பனை முகவர்களிடம் அல்லது www.dialog.lk இல் பெற்றுக்கொள்ள முடியும். உங்களுடைய தற்போதைய பக்கேஜினை ஏதேனுமொரு Dialog Power Plan மொபைல் பிற்கொடுப்பனவு திட்டத்திற்கு மாற்றிக்கொள்ள #678# டயல் செய்யுங்கள் அல்லது MyDialog App இனை பயன்படுத்துங்கள். இவை தொடர்பாக உங்களுக்கு மேலதிக விபரங்கள் தேவைப்படின் www.dialog.lk/mobile-postpaid க்கு விஜயம் செய்யுங்கள் அல்லது 1777 க்கு அழையுங்கள்.