டயலொக், BrandFinance இடமிருந்து இலங்கையில் மதிப்பு மிக்க வர்த்தக நாமத்திற்கான விருதினைவென்றுள்ளது.
2019 மே 3
இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கையில் அதிக மதிப்பு மிக்க வர்த்தக நாமத்திற்கான விருதிற்காக Brand Finance Lanka நிறுவனத்தினால் மதிப்பிடப்பட்டது. டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் பிரதாக குழும நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹே மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி அமலி நாணயக்கார ஆகியோர் Brand Finance Lanka நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ருசி குணவர்தனே அவர்களிடமிருந்து விருதினை பெற்றுக்கொண்டார்கள்.
இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இலங்கையின் மதிப்பு வாய்ந்த BrandFinance 2019 என்ற விருதினை வென்றுள்ளது. இது உலகின் முன்னணி சுயாதீன வர்த்தக மதிப்பீட்டு ஆலோசனையான BrandFinance இன் வருடாந்த விருதுகளின் 16வது பதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. டயலொக் BrandFinance மூலம் 10 வருடங்களாக சிறந்த தொலைத்தொடர்பு கொடுப்பனவு என்பதையும் இலங்கையுடனான ஒரு இணைந்த எதிர்காலத்தை தொடர்ச்சியாக உறுதிப்படுத்துவதற்கான பண்புகளை கொண்டுள்ளது.
இலங்கையின் டிஜிட்டல் உருமாற்றத்தின் பிரதான வழங்குனராக தன்னை நிலை நிறுத்தவதில் வெற்றி பெற்றதன் காரணமாக ஒரு வர்த்தக குறியீடாக டயலொக் மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளதுடன் இலங்கையர்களின் மனங்களில் நீங்கா இடத்தினையும் கொண்டுள்ளது. மக்கள் சாதனங்கள் உள்ளடக்கம் மற்றும் சேவைகள் ஆகியவற்றை இணைக்கும் பாவனையாளர் அனுபவங்களை கொண்ட தொழில்நுட்பத்தினை கொண்டுள்ள டயலொக் வர்த்தகத்தின் வளர்ச்சியின் மூலம் நாட்டிலும் பிராந்தியத்திலும் புதிய தொழில்நுட்பங்களான 3G, 4G மற்றும் 5G தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 2018ஆம் ஆண்டின் தெற்காசியாவின் முதல் 5G சோதனையினையும் 2019ம் ஆண்டில் வெற்றிகரமான 5G Pilot Transmission இனையும் மற்றும் 2019ஆம் ஆண்டில் 5G மொபைல் அடிப்படையிலான சேவை மற்றும் நேரடி காட்சிப்படுத்தலினையும் வெற்றிகரமாக நடாத்தியது.
Brand Finance பிஎல்சி நிறுவனத்தின் இங்கிலாந்து நாட்டின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ஹைக் டயலொக்கின் செயற்றிறன் பற்றி குறிப்பிடுகையில் வர்த்தக நாமம் பல ஆண்டுகளாக மிக பலமான ஒன்றாக இருந்து வருகின்றது. இலங்கையில் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் தருணமாக இது அமைந்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்ற முன்னணி இணைப்பு வழங்குனருடன் அதன் வர்த்தகத்திற்கு மிகப்பெரிய மதிப்பை உருவாக்கும் அதே வேளை இலங்கையில் உலகின் ஏனைய பகுதிகளுடன் இணைந்திருக்கும் இந்த தொழில்நுட்பம் தற்போது மிகவும் மதிப்பு வாய்ந்ததாக காணப்படுகின்றது.
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்ஹே கருத்து தெரிவிக்கையில் 2019ஆம் ஆண்டின் மிகவும் பெறுமதி வாய்ந்த நுகர்வோர் வர்த்தக நாமத்திற்கும் 10 வருடங்களுக்கான சிறந்த தொலைத்தொடர்பு வர்த்தக நாமத்திற்கும் விருது கிடைத்துள்ளது. இந்த விருதானது 14 மில்லியன் டயலொக் வாடிக்கையாளர்கள் எங்களின் வர்த்தகத்தில் கொண்டுள்ள நம்பிக்கையும் நம்பிக்கையின் பிரதிநிதித்துவப்படுத்தலுமே இந்த விருது கிடைக்கப்பெற்றமைக்கான காரணமாகும். அவர் மேலும் இந்த அங்கீகாரம் எதிர்காலத்தை இன்றே வழங்கும் வர்த்தகத்திற்கான ஒரு சான்றாகும். இன்று இலங்கையிலுள்ள வீடுகளிலும் நிறுவனங்களுடனும் தொழில்நுட்பம் ரீதியாகவும் இணைப்பிலும் மிகவும் நவினத்தவத்pதனை வழங்குவதற்காகவும் எங்கள் வர்த்தக குறியிடு இணைந்து செயற்படுகின்றது என தெரிவித்தார்.
BrandFinance® மிகவும் மதிப்பு மிக்க வர்த்கநாமமாகும். கொழும்பு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இலங்கையின் 100 வர்த்தகங்களின் மதிப்பையும் பலத்தையும் அளிக்கும் Brand Finance உலகளாவிய ரீதியில் பயன்படுத்தும் வெகுமதி நிவாரண பொறிமுறையின் அடிப்படையில் ஒரு முறையை பயன்படுத்துகின்றது. Brand Finance பிஎல்சி ஆனது உலகின் முன்னணி சுயாதீன வர்த்தக மதிப்பீட்டினை கொண்டுள்ளது. இது அவர்களின் வர்தக நாமத்தின் திறமையினையும் மற்றும் அவர்களது வர்த்தக நாமத்தின் மதிப்பையும் அதிகரிக்கும் விதமாக நிறுவனங்களுக்கு ஆலோசனை கூறுகின்றது. லண்டனில் தலைமை அலுவலகத்தை கொண்டுள்ள Brand Finance கொழும்பு உட்பட பல நாடுகளில் அலுவலகங்களை கொண்டுள்ளது