Body

டயலொக்கின் புதிய மொபைல் பாதுகாப்பு சாதனமான Suraksha உங்களுடைய பிள்ளைகளின் உலகை பாதுகாக்க உதவுகின்றது.

2020 ஜனவரி 24        

 

news-1

 

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, Suraksha எனும் புதிய மொபைல் பாதுகாப்பு சாதனத்தினை அறிமுகம் செய்துள்ளது. இது பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பெற்றோரின் கட்டுப்பாடுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்களுடன், பெற்றோருக்கு ஒரு தீர்வாக காணப்படுவதுடன் எந்தவொரு நேரத்திலும் எங்கிருந்தும் தங்களுடைய பிள்ளைகளை எளிதாக கண்காணிக்க முடியும்.

எந்தவொரு நேரத்திலும் தங்களுடைய பிள்ளைகளுடன் தொடர்ந்து இணைந்திருக்க விரும்பும் பெற்றோருக்கு, பிள்ளைகள் இருக்கும் இடத்தினை கண்காணிக்க டயலொக் Suraksha மொபைல் பாதுகாப்பு சாதனம், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதனை ஒரு அழைப்பின் ஊடாக உறுதிசெய்வதற்கான சரியான ஒரு துணையாக காணப்படுகின்றது.

Suraksha மொபைல் பாதுகாப்பு சாதனம் பிள்ளைகளின் பாதுகாப்பு செயற்பாடுகளை கருத்திற் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. எளிதில் அணுகக்கூடிய விரைவான அழைப்பு பட்டன், அனுமதிக்கப்பட்ட இலக்கங்களுக்கு மட்டும் அழைப்புக்களை மேற்கொள்ளும் மற்றும் பெற்றுக்கொள்ளும் திறன் உள்ளிட்ட மேம்பட்ட அம்சங்களை கொண்டுள்ளது. ஸ்மார்ட் SOS பட்டனை அழுத்தும் போது சுழற்சி முறையில் முன்பு வரையறுக்கப்பட்ட 4 இலக்கங்களுக்கு அவசர அழைப்புக்களை மேற்கொள்ளல், GPS/Geo-Fencing (தேவைக்கேற்ப இடத்தினை அறிதல்) ஊடாக பிள்ளைகளை கண்காணிக்கும் வசதி, Amber 360 app ஊடாக பெற்றோர் சாதனத்தினை கட்டுப்படுத்தும் வசதி, தன்னியக்க அறிவிப்புக்கள் (உ-ம்: பட்டறி குறைவு) Out of Zone alert வசதி (பெற்றோர்களுக்கு மொபைல் App இன் ஊடாக பாதுகாப்பான இடங்களை குறிப்பிட்டு அதிலிருந்து வெளியேறும் போது அறிவிப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும்) பெற்றோர்கள் சாதனத்தினை Off செய்யக்கூடிய வசதி மற்றும் மேலும் பல வசதிகளை கொண்டுள்ளது.

சாதனத்தின் முதன்மை செயற்பாடு என்னவெனில் ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் பெற்றோருடன் எளிதாக தகவல் தொடர்புகளை பேணுவதும் பெற்றோர் தங்களுடைய பிள்ளையை எந்தவொரு நேரத்திலும் App இன் ஊடாக எளிதாக கண்காணிப்பதும் ஆகும்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை செயற்பாட்டு அதிகாரி கலாநிதி ரெய்னர் டாய்ச்மென் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் Suraksha எனும் புதிய மொபைல் பாதுகாப்பு சாதனம் டயலொக்கினால் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை வடிவமைக்கும் போது பெற்றோரின் கட்டுப்பாடுகள், உறுதித்தன்மை, செயல்பாடுகள், GPS கண்காணிப்பு மற்றும் செலவு ஆகிய முக்கிய அம்சங்களில் நாங்கள் கூடிய கவனம் செலுத்தியுள்ளோம். பெற்றோர்களின் கட்டுப்பாடுகளை கொண்ட ஒரு சாதனத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் பெற்றோருக்கு உறுதியளிக்க விரும்பினோம். இது பிள்ளைகள் எங்கு இருக்கின்றார்கள் எவ்வகையான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது போன்ற அனைத்து விடங்களையும் கண்காணிக்க உதவுகின்றது என தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து டயலொக் வாடிக்கையாளர் சேவை நிலையங்களிலும் Suraksha பாதுகாப்பு சாதனத்தினை ரூ.4,990/- க்கு பெற்றுக்கொள்ள முடியும். மேலதிக விபரங்களுக்கு வாடிக்கையாளர்கள் www.dialog.lk/suraksha எனும் இணையத்தளத்திற்கு விஜயம் செய்யுங்கள்