Body

டயலொக் ஆசிஆட்டா உத்தியோகப்பூர்வ இணைப்பு வழங்குனராக அனைத்து பொது சுகாதார அதிகாரிகளின் துறைக்கு அதிகாரம் அளிக்கிறது

மார்ச் 19, 2021        கொழும்பு

 

news-1

படத்தில் இடமிருந்து வலமாக : டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் பெறு நிறுவன சிரேஷ்ட துறை முகாமையாளர் சுமேத ஹெரத், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் பெறு நிறுவன பொது முகாமையாளர் ரோஷன் சில்வா, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாக அதிகாரி, சுபுன் வீரசிங்ஹ, கௌரவ சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன, மற்றும் சுகாதார அமைச்சரின் தனியார் செயலாளர் காஞ்சன ஜெயரத்னே.

தொற்றுநோயை எதிர்ப்பதில் திறம்பட செயற்படுவதற்கான அவசியத்தால் தூண்டப்பட்ட டயலொக் ஆசிஆட்டா, (டயலொக்) அனைத்து பொது சுகாதார அதிகாரிகளின் துறைக்கும் உத்தியோகப்பூர்வ இணைப்பு வழங்குனராக திகழ்கின்றதுடன் இதில் நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார சேவைகளின் பிராந்திய இயக்குனர்கள், பிராந்திய சுகாதார இயக்குனர்கள், தொற்றுநோயியல் நிபுணர்கள், சுகாதார மருத்துவ அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார ஆய்வாளர்கள் உள்ளடங்குகின்றார்கள். பொது சுகாதார ஊழியர்களின் முழு தேசிய அமைப்பிற்கும் வலையமைப்பிற்குள் இலவச இணைப்பு வசதிகளை வழங்கும் உத்தியோகப்பூர்வ இணைப்புகளை டயலொக் நீட்டித்துள்ளது. நியமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொது சுகாதார அதிகாரிகளின் இந்த உத்தியோகபூர்வ இலக்கங்களை https://alt.army.lk/phi2/ ஊடாக எளிதாக அணுக முடிவதுடன் மேலும் ஒரு அதிகாரி மாறினாலும் அல்லது இடமாற்றம் செய்யப்பட்டாலும் அந்த பகுதிக்கு ஏற்ப மாற்றங்கள் எதுவும் இடம்பெற மாட்டாது.

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரால் விரிவாக்கப்பட்ட இணைப்புத் தீர்வுகள், முழுமையாக இணைக்கப்பட்ட பராமரிப்பு குழுக்களின் வலையமைப்பை எளிதாக்குவதற்கும், சுகாதார அமைச்சுக்கு அதன் பொது சுகாதார ஊழியர்களின் வலையமைப்பை பாதுகாப்பாக திறம்பட அணிதிரட்டுவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன. டயலொக், சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து, இந்த இணைப்புத் தீர்வுகளுடன் எண்ணற்ற அம்சங்களை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் இதில் முக்கியமான தகவல்களை நிகழ்நேரத்தில் வெளியிடுவது உட்பட, சிறந்த முடிவுகளை மேற்கொள்வதற்கும் இது உதவும் என நம்பப்படுகின்றது. இந்த தீர்வுகள் தற்போதைய அமைப்புகளுக்குள் ஒருங்கிணைக்கப்படலாம் மற்றும் வலையமைப்பில் உள்ள இலவச இணைப்பு வசதிகளை பேரழிவு மேலாண்மை மையங்கள், முத்தரப்பு படைகள், பொது நிர்வாக ஊழியர்கள் மற்றும் பலவற்றிற்கு விரிவாக்க திட்டமிட்டுள்ளன.

இந்நிகழ்வின் போது கருத்து தெரிவித்த, கௌரவ சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, (வழக்கறிஞர்) இலங்கையில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான நமது தேசிய முயற்சிகளில் சுகாதார அமைச்சுக்கு ஒரு நிலையான தூணாக செயற்படுகின்ற டயலொக் ஆசிஆட்டாவிற்கு நன்றி கூற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்த இணைப்புத் தீர்வுகள் பொது சுகாதார ஊழியர்களின் சுகாதாரப் பாதுகாப்பு முயற்சிகளை திறம்பட மற்றும் பாதுகாப்பாக அணிதிரட்டுவதற்கான அதிகாரத்தை வழங்குகின்றது. டயலொக் இன் ஆதரவுடன் பிற செயல்பாட்டு அரசாங்க நிறுவனங்களில் இந்த தீர்வுகளை அளவிட நாங்கள் எதிர்நோக்கியுள்ளதுடன் இதன் மூலம் முழுமையாக இணைக்கப்பட்ட மற்றும் நெறிப்படுத்தப்பட்ட தேசிய பராமரிப்பு விநியோக முறையை நிறுவுகிறோம்.

இந்த மைல்கல் சாதனை குறித்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்ஹ கருத்து தெரிவிக்கையில். “ஒரு வருட நெருக்கடிகளுக்கு மத்தியில், ஒரு புதிய இயல்பை எதிர்கொண்டு சுகாதாரத்தின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்காக டயலொக்கின் இணைப்பின் சக்தியைப் பயன்படுத்துவதில் எங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பிற்கு நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம். இந்த இணைப்புத் தீர்வுகளை ஏற்றுக்கொள்வதன் மூலமும், சுகாதார அமைச்சின் ஆதரவோடு, சுகாதாரத் துறையில் தடையின்றி விரைவாக முடிவுகளை மேற்கொள்வதற்காக முக்கியமான தேவையை மேம்படுத்த அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைவதுடன், அதே நேரத்தில் அவற்றின் செயல்முறைகளில் அதிக இயக்கம் மற்றும் எளிமைக்கு மேலும் உதவுவோம்" என தெரிவத்தார்.