Body

டயலொக் ஆசிஆட்டா, நவீனமய உள்ளிணைக்கையை சுயமேம்பாடடையச் செய்யும் பொருட்டு GSMAவின் Connected Women Commitment முன்னெடுப்பின் மீதான தன் உறுதிப்பாட்டை புதுப்பித்துள்ளது

May 08th, 2024        Colombo

 

Dialog Axiata Renews Pledge to GSMA's Connected Women Commitment Initiative

Photographed left to right - Gagandeep Manchanda, Sr. Market Engagement Manager, GSMA, Supun Weerasinghe, Group Chief Executive, Dialog Axiata PLC, Mats Granryd, Director General, GSMA, and Claire Sibthorpe, Head of Digital Inclusion, GSMA

இலங்கையின் #1 இணைப்பு வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, பாலின சமத்துவத்திற்கும் நவீனமய சுயமேம்பாட்டிற்குமான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது, GSMAவின் Connected Women Commitment முன்னெடுப்பின் மீது தான் அளித்த உறுதிப்பாட்டை புதுப்பித்தது. இந்த உறுதிப்பாடு, நவீனமய பிரிவினைகளை ஒழிப்பதற்கும், மொபைல் இணையம் மற்றும் மொபைல் பண சேவைகளுக்கான மேம்படுத்தப்பட்ட அணுகல் மூலம் இலங்கை பெண்களை சுயமேம்பாடடையச் செய்வதற்காக டயலொக் நிறுவனம் காட்டும் அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறது.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட வீடுகளில் தொலைபேசி உரிமை மற்றும் பயன்பாட்டில் நிலவும், நவீனமய உலகில் பெண்களின் பங்கேற்பை தடுக்கும் பாலின இடைவெளிக்கு இந்த முன்னெடுப்பு ஒரு பதிலாகும். நவீனமய கருவிகளைப் பயன்படுத்தி பெண்களை சுயமேம்பாடடையச் செய்வது பாலின சமத்துவத்தை மட்டுமல்லாமல், கைத்தொழில்துறைகளுக்கான குறிப்பிடத்தக்க வளர்ச்சி பாதைகளையும் திறக்கிறது என்பதை உணர்ந்து, 2018 இல் டயலொக், GSMAவின் Connected Women Commitment முன்னெடுப்புடன் இணைந்தது.

"இலங்கையின் நவீனமய வெளியில் உள்ளிணைக்கை மற்றும் பேண்தகுநிலையை வளர்ப்பதற்கு டயலொக் ஆசிஆட்டா உறுதிபூண்டுள்ளது" என டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க அவர்கள் தெரிவித்தார். "GSMAவின் Connected Women Commitment முன்னெடுப்புக்கான எங்கள் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு இணைப்பின் மாற்றும் சக்தியில் எங்களின் நம்பிக்கைக்கு ஒரு சான்றாகும். பெண்களை மேம்படுத்துவதன் மூலம், அவர்களின் நவீனமய மற்றும் நிதிச் சேர்க்கையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், பரந்த சமூக-பொருளாதார நலன்களை மேம்படுத்துகிறோம், மேலும் சமத்துவமான சமூகத்தை நோக்கி முன்னேறுகின்றோம்" என்றார்.

GSMAவின் நவீனமய உள்ளிணைக்கையின் தலைவர் Claire Sibthorpe அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், "GSMA Connected Women Commitment இல் கையெழுத்திட்டதன் மூலம், டயலொக் ஆசிஆட்டா மேலும் உள்ளிணைக்கைமிக்க சமூகத்தை கட்டியெழுப்புவதில் தங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. பெண்களை இணைப்பது அவர்களுக்கு சுயமேம்பாட்டை அளிப்பது மட்டுமல்லாமல் சமூகங்களை வளப்படுத்துகிறது. வளர்ச்சி, மேலும் சமத்துவமான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும் டயலொக் ஆசிஆட்டா, அவர்களின் தலைமைத்துவத்திற்காகவும், இலங்கையில் பாலின இடைவெளியைக் குறைக்கும் அர்ப்பணிப்பிற்காகவும் நாங்கள் பாராட்டுகிறோம்" என்றார்.

இந்த கூட்டாண்மையானது, டயலொக் ஆசிஆட்டாவின் பேண்தகுநிலை மற்றும் பாலின சமத்துவத்திற்கான பரந்த அர்ப்பணிப்புடன், குறிப்பாக ஐக்கிய நாடுகளின் பேண்தகுநிலை அபிவிருத்தி இலக்கு 5 (பாலின சமத்துவம்) உடன் இணைகிறது, மேலும் அதன் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை, பேண்தகுநிலை மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கான நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும். Yeheli.lk போன்ற முன்னெடுப்புகள் மூலம், டயலொக் பெண்களின் வலுவூட்டலைத் தொடர்கிறது, இலங்கை முழுவதிலும் உள்ள பெண்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஊக்குவிப்பதையும் எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் சமூகங்கள், வணிகங்கள் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் செழிப்புக்கு பங்களிக்கிறது.