டயலொக் கிளப் விஷன் அங்கத்தவர்களுக்கான ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்திற்கான பிரத்தியேக திரையிடலுக்கான அணுகல்
மார்ச் 28, 2022 கொழும்பு
டயலொக் கிளப் விஷன் அங்கத்தவர்களும் அவர்களது அன்புக்குரியவர்களும் மார்ச் 18 அன்று யாழ்ப்பாணம் Majestic Cineplex திரையரங்கில் அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் அதிரடி திரில்லர் திரைப்படமான ‘எதற்கும் துணிந்தவன்’திரைப்படத்தின் பிரத்தியேக திரையிடலுக்கான சிறப்பு அனுமதியினை பெற்றுக்கொண்டார்கள்.
‘எதற்கும் துணிந்தவன்’ 2021 இல் அதன் தயாரிப்பு அறிவிப்பு முதல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம். இந்த திரைப்படம் மார்ச் 10ஆம் திகதி வெளியிடப்பட்டதுடன், ஒரு சில நாட்களுக்கு பிறகு,கிளப் விஷன் அங்கத்தவர்களும் அவர்களது அன்புக்குரியவர்களும் இந்த மறக்க முடியாத சினிமா அனுபவத்தின் பிரத்தியேக திரையிடலை பார்ப்பதற்கான அனுமதியினை பெற்றுக்கொண்டார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுடன் இந்த திரையிடலானது இடம்பெற்றது.
அங்கத்தவர்களின் நலன்களை கருத்திற் கொண்டு டயலொக் கிளப் விஷன் அதன் பெறுமதி மிக்க அங்கத்தவர்களுக்கும் மற்றும் அவர்களது அன்புக்குரியவர்களுக்கும் தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்பு பிரத்தியேக விலைக்கழிவுகள் மற்றும் வாழ்க்கை முறை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகள் போன்ற மேலும் பல சலுகைளை தொடர்ந்து வழங்குகிறது. டயலொக் கிளப் விஷன் அங்கத்தவர்களுக்கு கிடைக்கும் அற்புதமான சலுகைகளை தெரிந்து கொள்ளவும், இலங்கையின் முதன்மையான விசுவாசத் திட்டத்தை பற்றிய மேலதிக விபரங்களை அறியவும், வாடிக்கையாளர்கள் MyDialog App க்கு அல்லது dialog.lk/club-vision க்கு செல்லுங்கள்