டயலொக் உழவர் தோழன் பரிசுப்புதையல் நாடளாவிய ரீதியில் நிகழ்ச்சி திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி மிக்க வெகுமதிகளை வழங்கி வருகிறது
2022 செப்டெம்பர் 01 கொழும்பு
இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் புரட்சிகர விவசாய சேவையான உழவர் தோழன் தனது சேவையில் இணைந்துள்ள வாடிக்கையாளர்களுக்கு பரிசுகளை வழங்குவதற்காக உழவர் தோழன் பரிசுப்புதையல் போட்டியின் 5வது கட்டத்தை ஆரம்பித்துள்ளது.
நகர்ப்புற மற்றும் கிராமப்புற விவசாய சமூகங்களை ஊக்குவித்து இந்த ஆண்டு வெகுமதிகளை அளிப்பதையும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் மேம்படுத்துவதையும் கௌரவப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில், நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட போட்டிகள் மூலம் 46 வாடிக்கையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன, மேலும் வழங்கப்பட்ட சூப்பர் பரிசுகளில் தங்க நாணயங்கள், மொபைல் போன்கள் மற்றும் தையல் இயந்திரங்கள் ஆகியவை அடங்கும்.
இலங்கையில் கையடக்கத் தொலைபேசி அடிப்படையிலான விவசாய ஆலோசனை சேவையான உழவர் தோழன் சேவையானது நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பத்தின் மூலம் பயிர் பாதுகாப்பையும் வருமானத்தையும் அதிகரிக்க சிறந்த ஆலோசனைகளை வழங்குகின்றது. விவசாயத் துறைக்கு வழிகாட்டுதலுடன் அறிமுகப்படுத்தப்பட்ட உழவர் தோழன் அழைப்புச் சேவையானது, சேவையை பயன்படுத்தும் அனைவருக்கும் சிறந்த விவசாய நடைமுறைகள் பயிர் விலை மற்றும் எதிர்கால பயிர்த் திட்டங்கள் குறித்த சான்றளிக்கப்பட்ட (GAP) ஆலோசனைகளை வழங்குகிறது.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவையின் மூலம், 30 வகையான பயிர்கள், இயற்கை விவசாயம் மற்றும் வீட்டு தோட்டம் தொடர்பான விவசாய ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. மேலும் சாதாரண மொபைல் தொலைபேசியினை பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்கள் இந்த சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும். உழவர் தோழன் மொபைல் App ஐ ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதனால் விவசாயிகள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப தற்போதைய தகவல்களைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்கள். உழவர் தோழன் App ஐ Google Play Store மூலம் டவுன்லோட் செய்துக்கொள்ள முடியும். மேலும் டயலொக் மொபைல் வாடிக்கையாளர்கள் டேட்டா கட்டணங்களின்றி App இனை பயன்படுத்தலாம். இதற்கு, ஒரு நாளைக்கு ரூ.2/- மற்றும் பொருத்தமான வரிகள் அறவிடப்படும். புதிய வாடிக்கையாளர்கள் இந்தச் சேவையை பரீட்சாத்த காலமாக 90 நாட்களுக்கு எந்தவித சேவைக் கட்டணமும் இன்றி பெற்றுக்கொள்ளலாம். எந்தவொரு டயலொக் அல்லது Hutch கையடக்கத் தொலைபேசியில் இருந்தும் 616க்கு அழைக்கலாம் மற்றும் உழவர் தோழன் அழைப்பு சேவையுடன் தினமும் ஒரு ரூபாய் மற்றும் வரியுடன் இணைந்துக்கொள்ள முடியும்.