டயலொக் அனுசரணையில் 142 வது ராயல்-தோமியன் ‘Battle of the Blues’
2021 மே 6 முதல் 8 வரை சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்
ஏப்ரல் 23, 2021 கொழும்பு
படத்தில் இடமிருந்து வலம்: ரோயல்-தோமியன் கூட்டு போட்டிக் குழு இணைத் தலைவர் பிரசன்ன பெர்னாண்டோ, ரோயல் கல்லூரியின் அதிபர் வி.எம்.எஸ் குணதிலகே, புனித தோமஸ் கல்லூரியின் அதிபர் வணக்கத்திற்குரிய மார்க் பிலிமோரியா, டயலொக் ஆசிஆட்டா பி.எல்.சி நிறுவனத்தின் குழு தலைமை வாடிக்கையாளர் சேவை அதிகாரி சாண்ட்ரா டி சோய்சா, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் எண்டர்பிரைஸ் பிசினஸ் மற்றும் பெறு நிறுவன விற்பனை பிரிவு உப தலைவர் நவின் பீரீஸ் மற்றும் ரோயல்-தோமியன் கூட்டு போட்டிக் குழு உப தலைவர் ரோஷன் ஆடம்ஸ்
இலங்கை பாடசாலை கிரிக்கெட் வரலாற்றில் முன்னணி பெரும் போட்டியாக இரு பாடசாலைகளான கொழும்பின் ராயல் கல்லூரி மற்றும் கல்கிஸ்சை புனித தோமஸ் கல்லூரிகளுக்கு இடையில் டி.எஸ். சேனநாயக்க நினைவு கிண்ணத்திற்காக நடைபெரும் பிரபலமான 'Battle of the Blues' இன் தொடர்ச்சியான 142 வது மோதல்இ 2021 மே மாதம் 6 ம் திகதி முதல் 8 ம் திகதி வரை ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற உள்ளது.
கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பார்வையாளர்களின் பங்கேற்புயின்றி, இம் முறை 'Battle of the Blues' போட்டிகள் நடைபெருவதுடன், சுகாதார அமைச்சினால் பிரப்பித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விளையாட்டு நிலைமைகள் குறித்த விதிமுறைகளுக்கும் உட்பட்டு நடைபெறவுள்ளது. 142 வது Battle of the Blues கிரிக்கெட் போட்டியினை டயலொக் டெலிவிஷன் அலைவரிசை இலக்கம் 72 இல் நேரடியாக பார்வையிடக்கூடியதுடன், மேலும் ThePapare.com மற்றும் Dialog ViU App இல் லைவ் ஸ்ட்ரீம் வழியாகவும் பார்வையிட முடியும். மஸ்டாங் கிண்ணத்திற்காக இரு பள்ளிகளுக்கும் இடையில் நடைபெறும் வருடாந்திர ஒருநாள் வரையறுக்கப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டி இம் முறை 20 ஓவர் போட்டியாக 2021 மே மாதம் 10 ம் திகதி நடைபெறும்.
தொற்றுநோய் நிலமைகளுக்கு மத்தியில், இலங்கையின் முதன்மையான இக் கிரிக்கெட் மோதல் 142 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக கொழும்புக்கு வெளியே உள்ள சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. பங்கேற்கும் அணிகள், பயிற்சியாளர்கள், ஆதரவு ஊழியர்களுடன் நடுவர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் தெற்கு மாகாண மற்றும் ஹம்பாந்தோட்டை சுகாதார சேவைகளின் மேற்பார்வையின் கீழ் கோவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்கள் உயிரியல் பாதுகாப்பு சூழல்களின் கீழ் போட்டிகளில் கலந்துக் கொள்வார்கள்.
‘Battle of the Blues’ 2021 ம் ஆண்டு போட்டிக்கு இலங்கையின் முன்னணி தொலைத் தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனம் இம்முறையும் அனுசரனை வழங்குவதுடன் கல்கிஸ்சை புனித தோமஸ் அணியை ஆல்-ரவுண்டர் ஷலீன் டி மெல் மற்றும் ராயல்ஸ் அணியை அதன் சிறந்த போட்டியாளரான அஹான் விக்ரமசிங்கவும் வழிநடத்தவுள்ளனர்.
ராயல்- புனித தாமஸ் அணிகளுக்கிடையிலான போட்டி 142 ஆண்டுகளாக வண்ணமயமான வரலாற்றைக் கொண்டுள்ளது. இது உலகின் மிக நீண்ட காலமாக நடைப்பெற்ற இரண்டாவது கிரிக்கெட் போட்டியாகுவதுடன், இவை இரண்டாவது இடத்தில் இருப்பது ஆஸ்திரேலியா அடிலெய்டில் உள்ள புனித பீட்டர்ஸ் கல்லூரி மற்றும் புனித தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான வருடாந்திர கிரிக்கெட் போட்டியில் மாத்திரமே. இது தொடங்கியிருப்பது ராயல்- புனித தோமஸ் போட்டி தொடங்க ஒரு வருடத்திற்கு முன்பே. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கிடையிலான ஆஷஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆரம்பமாவது ராயல்- புனித தோமஸ் பெரும் போட்டி தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு பின்னரே.
இரண்டு பள்ளிகளுக்கிடையிலான முதல் போட்டி 1880 ஆம் ஆண்டில் கால்பேஸ் மைதானத்தின் தற்போது தாஜ் சமுத்ரா ஹோட்டல் அமைந்துள்ள பகுதியில் நடந்ததுடன் நூற்றாண்டுக்கும் மேலாக நடந்து கொண்டிருந்த வருடாந்திர போரின் ஆரம்பத்தை நோக்கி அன்று இரு அணிகளும் படகில் பேரே ஏரியைக் கடந்து, மைதானத்திற்கு வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராயல்- புனித தோமஸின் போட்டியின் போது வெளிவந்த கிரிக்கெட் வீரர்களில் சிலருக்கு, பின்னர் நாட்டை ஆட்சி செய்யவும் வாய்ப்பு கிடைத்தது. தேசத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மறைந்த டி.எஸ். சேனாநாயக்க (1901-1902) மற்றும் அவரது மகன் மறைந்த டட்லி சேனநாயக்க (1927-1929) ஆகியோர் புனித தாமஸ் கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். முன்னாள் பிரதமர் சர் ஜான் கோத்தலாவல (1914-1915) மற்றும் முதல் நிர்வாக ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன (1925) ஆகியோர் ராயல் கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவ் ஆண்டுகளில் இந்த வரலாற்றுப் போட்டியில் விளையாடினர்.
1885 ஆம் ஆண்டு மிகவும் விவாதிக்கப்பட்ட நிலையில், இரு அணிகளும் ‘Battle of the Blues’ போட்டி வரலாற்றில் 35 வெற்றிகள் விதம் பதிவு செய்துள்ளன. முதல் நாளில் ராயல் கல்லூரி 09 ரன்களுக்கு ஆட்டமிழந்து, இரண்டாவது நாளில் விளையாடப்படாத 1885 ஆண்டு போட்டி தான் வெற்றிப்பெற்ற போட்டியாக புனித தோமஸ் கல்லூரியின் சரித்திரத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், இது ஒரு வெற்றி தோல்வியின்றி முடிந்த போட்டியாக ராயல் கல்லூரி நினைவுச்சின்னத்தில் பதியப்பட்டுள்ளது. இறுதியாக ‘Battle of the Blues’ போட்டியை வென்று புனித தாமஸ் கல்லூரி தற்போது கோப்பையை வைத்திருக்கிறது. கோப்பையை கைப்பற்றுவதற்காக, கோவிட்-19 சவால் மத்தியிலும் கூட இம்முறை குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பதிவு செய்துள்ள ராயல்ஸ் அணி சவால்களுக்கு தயாராக உள்ளது. கடைசியாக ராயல்ஸ் ‘Battle of the Blues’ போட்டியை 2016 இல் கீஷாந்த் பண்டிதரத்னவின் தலைமையில் வென்றது.
2019 அம் ஆண்டு நடைபெற்ற 140 வது ராயல்-புனித தாமஸ் போட்டியின் போதும், இந் நாட்டு முதன்மையான போட்டியுடன் டயலொக் அதன் வெற்றிகரமான மற்றும் நீண்டகால தொடர்ப்பினை மீண்டும் முன் கொண்டு சென்றுள்ளது. 142 வது ராயல்-புனித தாமஸ் போட்டியாகும். இது டயலொக் அனுசரனையளிக்கும் 13 வது ஆண்டாகும். இப் போட்டியின் மூலம் Play for a Cause என்ற நன்கொடை நிதியத்திற்கு நன்கொடை அளிக்க டயலொக் நடவடிக்கை மேற்கொள்வதுடன், இப் போட்டியில் சேகரிக்கப்படும் ஒரு ஓட்டத்திற்கு ரூபா 1000 வையம் வீழ்த்தப்படும் ஒவ்வொரு விக்கெட்டிற்கும் டயலொக் ரூ .10,000 வையும் வழங்கும். கடந்த ஆண்டு ‘Battle of the Blues’ போட்டியின் போது Play for a Cause நிதியத்திற்கு டயலொக் ரூ .1,008,000 ஐ நன்கொடையாக வழங்கியது. ராயல் கல்லூரி மற்றும் புனித தோமஸ் கல்லூரியின் அதிபர்களின் மேற்பார்வைலும் வழிகாட்டுதலிலும் உதவி தேவைப்படும் பாடசாலைகளுக்கு உதவுவதற்கும் அவை வளம்பெற செய்யவும் நிதி வழங்கப்படுகிறது. Play for a Cause நிதியம் இதுவரை ரூ .6,151,000 மதிப்புள்ள கிரிக்கெட் உபகரணங்களை தேவைப்படும் 10 பாடசாலைகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
சிறந்து விளங்கும் மிக உயர்ந்த பாரம்பரியத்துக்கு அமைய நடைபெறும் இந்த போட்டியின் போது இரு பாடசாலைகளகளுக்கு இடையில் பரஸ்பர மரியாதை, நட்புறவு, விளையாட்டுத்திறன், மற்றும் ஒன்றரை நூற்றாண்டுக்கும் மேலாக களத்தில் மற்றும் வெளியே நட்பு போட்டி ஆகியவற்றின் நீண்ட வரலாறு உள்ளது. ராயல் கல்லூரியின் முன்னாள் அதிபர் ஒருமுறை கூறியது போல், புனித தோமஸ் கல்லூரி இல்லாமல் ராயல் கல்லூரி இல்லை, என்ற சொல்லில் அவை அத்தாற்சிப்படுகிறது.
தேசிய கிரிக்கெட், ரக்பி, கைப்பந்து மற்றும் நெட்பால் அணிகளின் உத்தியேகப்பூர்வ ஆதரவாளராகவும் டயலொக் ஆசிஆட்டா செயல்படுகிறது. ஜனாதிபதி தங்கக் கோப்பை கைப்பந்து போட்டியை வலுப்படுத்துவதற்கு மேலதிகமாக, தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட நெட்பால் போட்டி, ரக்பி களகங்கள், பிரீமியர் கால்பந்து போட்டி, பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் மற்றும் பாடசாலை ரக்பி போட்டி, இராணுவ பாரா விளையாட்டு போட்டி, தேசிய பாரா விளையாட்டு போட்டி உலக பராலிம்பிக் போட்டியில் கலந்துக்கொள்ளும் இலங்கை பரா குழுவையும் ஆதரிக்கின்றது.