Body

4G Broadband ஐ விரிவுபடுத்துவதற்காக அதிக Spectrum திறனை வழங்க டயலொக் அதன் 3G வலையமைப்பை நிறுத்தவுள்ளது

December 22nd, 2022         Colombo

 

 

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இந்த 2023 ஆம் ஆண்டில் அதன் 4G Broadband வலையமைப்பின் திறனை அதிகரிக்கும் நோக்கில் தனது 3G டேட்டா வலையமைப்பை துண்டிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. டயலொக் ஆசிஆட்டா தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மொபைல் அனுபவத்தை வழங்குவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது; மேலும் இலங்கை பாவனையாளர்களுக்கு சிறந்த தரத்தில் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகவும் இது அமைந்துள்ளது.

டயலொக்கின் 3G வலையமைப்பின் டேட்டா நெரிசல் 1%க்கும் குறைவாகவே காணப்படுகின்றது மற்றும் 4G Broadband ஐ மேம்படுத்த 3G அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்வதன் மூலம், Dialog 4G Broadband வாடிக்கையாளர்களுக்கு அதிக திறனுடன் கூடிய சேவையை வழங்கக்கூடியதாக இருக்கும். 3G வலையமைப்பின் நிறுத்தத்தை மேற்கொள்ளும் முன்னோடி முயற்சியின் ஒரு பகுதியாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம், புதிய 3G இணைப்புகளை வழங்குவதை நிறுத்துவதற்கு நிறுவனம் எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மொபைல் Broadband சேவைகளை அணுகுவதற்கு ஏற்கனவே உள்ள 4G சாதனங்களில் 4G டேட்டா சேவைகளை செயல்படுத்துவதுடன் 3G வலையமைப்பு வாடிக்கையாளர்களை 4G வலையமைப்பிற்கு மாறும் படி டயலொக் கேட்டுக்கொள்கின்றது. தற்போதைய 3G வலையமைப்பு வாடிக்கையாளர்கள் 4G க்கு மாறுவதை ஆதரிக்கும் நோக்கில் டயலொக் அதன் சேவை வலையமைப்பின் மூலம் பெறக்கூடிய சிறந்த மதிப்புள்ள 4G ஸ்மார்ட்போன்களை, Dialog Lesi Pay தவணைத் திட்டங்களின் மூலம் கொள்வனவு செய்யும் வாய்ப்பினையும் மற்றும் இலவச 4G சிம் மேம்படுத்தல்களையும் அவர்களுக்கு வழங்குகிறது. 4G வலையமைப்பின் மூலம் வழங்கப்படும் Voice over LTE க்கு மேலதிகமாக குரல் சேவைகளுக்கு அதிகரித்து வருகின்ற தேவைக்கு உபயோகமாக உள்ளதன் காரணமாக 2G GSM வலையமைப்பை டயலொக் தொடர்ந்தும் முன்னெடுக்கும் என்பதையும் தெரிவிக்கின்றது.

டயலொக் ஆசிஆட்டா அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மொபைல் அணுகல் அனுபவத்தை உறுதிசெய்யும் நோக்கில் சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பில் முதலீடு செய்ய உறுதிபூண்டுள்ளதன் காரணமாக இன்றுவரை 3 பில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நமது 3G வலையமைப்பு நிறுத்தப்பட்டதால் ஏற்படும் அசௌகரியங்களுக்காக வருந்துவதுடன், நமது 4G மொபைல் Broadband வலையமைப்பை மேம்படுத்தும் நோக்கில் 3G Spectrum ஐ சீர்படுத்தும் பணிகளின்போது, நமது வாடிக்கையாளர்கள் காட்டுகின்ற பொறுமைக்கும் புரிதலுக்கும் நன்றியை தெரிவிக்கின்றோம்.

4G வலையமைப்பு , 3G சாதன மேம்படுத்தல் தொடர்பான தெரிவுகள் மற்றும் 3G வலையமைப்பு நிறுத்தம் ஆகியன தொடர்பில் மேலதிக விபரங்களை பெறுவதற்கு , நமது வாடிக்கையாளர் சேவை குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது https://dlg.lk/3VqEDb2 க்கு செல்லுங்கள்