டயலொக்கின் உழவர் தோழன் மற்றும் தேயிலை ஆராய்ச்சி நிலையம் ஆகியன தேயிலை பயிர்ச்செய்கையில் விவசாய தனிச்சிறப்பை இயக்குகின்றன
2023 டிசம்பர் 12 கொழும்பு

உழவர் தோழன், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி வழங்கும் இலங்கையின் மாபெரும் கையடக்க தொலைபேசி சார்ந்த விவசாய ஆலோசனை சேவை ஆகும். தேயிலை பயிர்ச்செய்கையில் ஈடுபடும் சமூகத்தை வலுவூட்டுவதன் மூலம் தேயிலை ஆராய்ச்சி நிலையத்துடன் பல்லாண்டு காலமாக பேணிவரும் கூட்டாண்மையோடு அவர்களது திறந்த நாள் நிகழ்வின் போது தரமான விவசாய தீர்வுகளையும் நிறுவனம் அளித்தது.
இந்த கூட்டு முயற்சியானது தேயிலை பயிரிடுவோருக்கு உழவர் தோழன் தளத்தின் மூலம் அத்தியாவசிய ஆலோசனை சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது தேயிலை பயிர்ச்செய்கைக்கு மதிப்புமிக்க வளமாக செயற்படுகிறது. மேலும், தேயிலை ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து, உழவர் தோழன் தேயிலை பயிர்ச்செய்கை நடைமுறைகளை முன்னெடுப்பதற்கு அர்ப்பணிக்கப்பட்ட பரவலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. உழவர் தோழன் மற்றும் தேயிலை ஆராய்ச்சி நிலையம் மூலம் இயக்கப்படும் இந்த முயற்சி, ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு ஏற்ப, குறிப்பாக இலக்கு 1 - எல்லா இடங்களிலும் எல்லாவிதமான வறுமையையும் முடிவுக்குக் கொண்டு வருதல் மற்றும் இலக்கு 9 - நெகிழ்வான உட்கட்டமைப்பு, உள்ளடக்கிய மற்றும் நிலையான தொழில்மயமாக்கலை ஊக்குவித்தல் மற்றும் புதுமைகளை வளர்த்தல் ஆகியவற்றிற்கு ஏற்ப, தேயிலை தொழிற்துறையை புதுமைப்படுத்த அதிநவீன டிஜிட்டல் விவசாய தீர்வுகளை அறிமுகப்படுத்துவதில் உறுதியாக உள்ளது..
தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் திறந்த நாளில், உழவர் தோழன் மற்றும் இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையம் ஆகியவை தேயிலை பயிரிடுவோரை டிஜிட்டல் முறையில் மேம்படுத்துவதற்காக தங்கள் சேவைகளை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களை அறிவித்தன. இன்றுவரை, 35,000 தேயிலை பயிரிடுவோரை இந்த app பதிவு செய்துள்ளது, அவர்கள் தேயிலை பயிர்ச்செய்கை மற்றும் உற்பத்தி குறித்து சரியான நேரத்தில் வழிகாட்டுதலைப் பெறுகின்றனர். இந்த சேவைகள், தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சி, தொழில்நுட்ப அறிவு மற்றும் ஆலோசனை ஆதரவுடன், தேயிலை பயிரிடுவோர் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. தேயிலை பயிரிடுவோரின் தேவைகளை நன்கு புரிந்து கொள்ளவும் அவர்களின் ஆதரவை மேம்படுத்தவும் உழவர் தோழன் மற்றும் தேயிலை ஆராய்ச்சி நிலையத்திற்கு இந்த நிகழ்வு ஒரு மதிப்புமிக்க வாய்ப்பை வழங்கியது.
புரட்சிகரமான, மும்மொழி உழவர் தோழன் சேவையானது, விவசாயிகளின் நெருக்கடியான சவாலை சரிசெய்வதற்கு முயற்சிக்கிறது. விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் துல்லியமான தகவல்களை வழங்குவதன் மூலம், விவசாயிகளுக்கு செயல்திறனை மேம்படுத்தவும், பயிர்களைப் பாதுகாக்கவும், இறுதியில் அறுவடைகளை அதிகரிக்கவும் இந்த தளம் உதவுகிறது. தேயிலை உட்பட 32 பயிர்களுக்கான ஆலோசனை சேவைகள் தற்போது உழவர் தோழன் தளத்தில் வழங்கப்படுகின்றன. பயனர்கள் முழு அளவிலான உழவர் தோழன் சேவைகளை Apps மூலம் அணுகலாம், Google Play Store இலிருந்து நேரடியாக பதிவிறக்கம் (Download) செய்யலாம் அல்லது குரல் சேவைக்கு 616 ஐ டயல் செய்யலாம்.
மேலதிக தகவல்களை அணுகிட https://www.dialog.lk/govi-mithru ஐ பார்வையிடவும்