Body

நியூசிலாந்து Under-85kg அணி இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது

2025 மே 11         கொழும்பு

 

Dialog Customers Contribute to Little Hearts

நியூசிலாந்து Under-85kg ரக்பி அணி தனது முதல் சர்வதேச சுற்றுப்பயணத்தில் இலங்கையை 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் வென்று Sir Graham Henry கோப்பையை கைப்பற்றியது. கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 32-6 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக கண்டி நிட்டவெலவில் நடைபெற்ற முதல் போட்டியில் 50-10 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.

வெப்பமான காலநிலையிலும் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து அணி, பந்து possession-ல் இருந்தபோது வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இலங்கை அணியின் பலமான தற்காப்பு அரணையும் மீறி நியூசிலாந்து 5 ட்ரைகள், 2 கன்வெர்ஷன்கள் மற்றும் ஒரு பெனால்டி கோல் அடித்தது. இலங்கை அணி சார்பில் தரங்க ரத்வத்தே இரண்டு பெனால்டி கோல்கள் மட்டுமே அடித்தார்.

ஆட்டநாயகன் பென் மெக்ஸன் கூறுகையில், "இது ஒரு சிறந்த ஆட்டம். இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. இலங்கை அணி தொடர்ந்து முன்னேறி வருகிறது, அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன" என்றார்.

முதல் பாதியில் அணித்தலைவர் ஜாரெட் பேர்சிவல் இரண்டு ட்ரைகள் அடிக்க, பீட்டர் ஸ்வார்ட்ஸ் ஒரு ட்ரை அடித்தார். இடைவேளைக்கு பின்னும் நியூசிலாந்து ஆதிக்கம் தொடர்ந்தது. ஈமன் ரெயிலி ஒரு பெனால்டி மற்றும் ஒரு கன்வெர்ஷன் செய்தார். டோஷ் கெல்லர்ட் மற்றும் தொடர் நாயகன் பிரான்சிஸ் மோரிசன் ஆகியோரும் தலா ஒரு ட்ரை அடித்தனர்.

வரவிருக்கும் ஆசிய ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராகும் இலங்கை அணிக்கு இந்த அனுபவம் பயனுள்ளதாக இருக்கும். இந்த தொடரில் நியூசிலாந்து மொத்தம் 13 ட்ரைகள் மற்றும் 7 கன்வெர்ஷன்கள் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் இந்த தொடரை அனுசரணை செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தேசிய கிரிக்கெட், கைப்பந்து, வலைப்பந்து மற்றும் eSports அணிகளுக்கும் டயலொக் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. டயலொக் Srilanka Golf Open மற்றும் தேசிய பாரா விளையாட்டுக்கள் மற்றும் உலக பாராலிம்பிக் விளையாட்டுக்களுக்கான இலங்கை அணியை ஊக்குவிப்பதன் மூலம் பாராலிம்பிக் விளையாட்டுக்களின் முதன்மை அனுசரணையாளராகவும் உள்ளது. மேலும், நாளைய சாம்பியன்களை மேம்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டிற்கு இணங்க, நிறுவனம் தொடர்ந்து ஜனாதிபதி தங்கக் கிண்ண கைப்பந்து, தேசிய இளையோர் மற்றும் மூத்தோர் வலைப்பந்து போட்டிகள் மற்றும் பாடசாலை ரக்பி ஆகியவற்றையும் ஊக்குவித்து வருகிறது.