Govi Mithuru
(Uzhavar Thozhan or Farmer’s Friend)
உழவர் தோழன்
T2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உழவர் தோழன் சேவையானது, நிலத்தை தயார்படுத்தல், பயிர்ச்செய்கை, பயிர் பாதுகாப்பு, அறுவடை மற்றும் மேம்பட்ட குடும்ப ஊட்டச்சத்து ஆகியவற்றில் விவசாயிகளுக்கு தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் சரியான நேரத்துக்கு ஏற்ற ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
இந்த சேவையானது GSMA mAgri Challenge நிதியின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டது. இதன் உள்ளடக்க பங்காளர்களாக இலங்கை அரசின் விவசாய அமைச்சும், முக்கிய விவசாய ஆலோசனை சேவைகளை வழங்கும் விவசாய திணைக்களமும் அமைகின்றன.
இந்த சேவையானது விவசாயிகளின் பயிர், அமைவிடம் மற்றும் சாகுபடியின் நிலைக்குத் தகுந்த வண்ணம் அவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப சரியான நேரத்தில் சரியான தகவலை அவர்களுக்கு அனுப்புவதன் மூலம் அவர்களுக்கு உதவுவதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, நாடு முழுவதும் 800,000 விவசாயிகள் இந்தச் சேவையைக் கொண்டு பயனடைகிறார்கள்.
உழவர் தோழன் - குரல்
-
பதிவு செயன்முறை
உங்கள் Dialog மொபைலில் இருந்து 616 ஐ அழைத்து, வழங்கப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி மொழி, பயிர், இருப்பிடம் மற்றும் பிற விவரங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
-
இது எவ்வாறு செயல்படுகிறது
ஒவ்வொரு விவசாயியும் அவரவர் விவசாய-சுற்றுச்சூழல் அமைவிடம், நீராதாரம், விதை வகை மற்றும் நடவு திகதி ஆகியவற்றின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்ட தகவலைப் பெறுவார்கள். விவசாயிகளுக்கு ஆலோசகர்களிடமிருந்து தினசரி அழைப்பு வரும். அழைப்பைத் தவறவிடும் சந்தர்ப்பங்களில், பயனர் அதே எண்ணுக்கு அழைப்பை ஏற்படுத்துவதன் மூலம், தவறவிட்ட ஆலோசனைகள் மற்றும் முன்னர் வழங்கப்பட்ட தகவல்களை அணுகலாம், இவை அனைத்தும் முக்கிய தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டிருக்கும்.
உதாரணமாக, நிலத்தைத் தயாரித்தல், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, உர மேலாண்மை, நீர்ப்பாசனம், அறுவடைக்குப் பின்னரானவை, அவசரச் செய்திகள் மற்றும் பல.
-
நாளொன்றுக்கான கட்டணங்கள்
- 616 க்கு எல்லையற்ற இலவச அழைப்புகள் மூலம் விவசாயிகள் இன்று வரை பெற்றுக் கொண்ட அனைத்து செய்திகளையும் மீள கேட்கலாம்
- ஒரு நாளைக்கு பயிரொன்றுக்கு ரூ 1 [மற்றும் பொருந்தக்கூடிய வரிகள்]
-
பதிவு நீக்க செயன்முறை
சேவையை துண்டிக்க, 616 ஐ அழைத்து பதிவு நீக்க பட்டியலைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் பயிர் வீதமாகவோ அல்லது முழு சேவையையோ துண்டிக்க செய்யலாம்.
உழவர் தோழன் மொபைல் App
இலங்கையின் சனத்தொகையில் 80% ஆனவர்கள் கிராமப்புறங்களில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் பிரதான வாழ்வாதாரம் விவசாயமே. பெரும்பாலான விவசாயிகளிடம் தற்போது கையடக்கத் தொலைபேசிகள் உள்ளது, அதை அவர்கள் பெரும்பாலும் அழைப்புகளை எடுக்கவே பயன்படுத்துகிறார்கள். தேவையான தகவல்களுக்கான அணுகல் பற்றாக்குறையாக இருப்பது இந்தத் துறையில் நீண்ட காலமாக நிலவிவரும் ஒரு முக்கிய பிரச்சினையாகும். ‘கொவி மிதுரு’ என அறியப்படும் உழவர் தோழன் சேவையானது 'பாதுகாப்பான பயிர் மற்றும் குடும்ப ஆரோக்கியம்' என்ற கருப்பொருளின் கீழ் விவசாயிகளுக்கான நடமாடும் ஆலோசனை சேவையாக தொழிலாற்றிவருகிறது, இச்சேவை இந்தத் துறையில் உள்ள தகவல் இடைவெளியை நிவர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டதாகும். புதிய பயிர்ச்செய்கைக்கு செல்ல விரும்பும் விவசாயிகளுக்கு, அதிலும் குறிப்பாக காலநிலை நிலைமைகள் கடுமையாக மாறி வரும் இக்காலத்தில், தங்கள் சாகுபடி பற்றிய நிறைய புதிய தகவல்கள் தேவைப்படுகின்றன.
தற்போது, நாடு முழுவதும் 200,000 விவசாயிகள் இந்தச் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். உழவர் தோழன் செயலியின் அறிமுகம் இந்த சேவையின் அடுத்த விரிவாக்கமாக கட்டமாக அமையும். தற்போதைய IVR சேவையுடன் ஒப்பிடும்போது, இந்த செயலி மேலும் தனிப்பயனாக்கப்பட்ட முறையில் சிறந்த தகவல்களை வழங்க முடியும்.
முக்கிய அம்சங்கள்
ஒவ்வொரு விவசாயியின் தனிப்பட்ட விவசாய முறைகள் மற்றும் ஒவ்வொரு விவசாயி வசிக்கும் அந்தந்த வேளாண்-சுற்றுச்சூழல் பகுதிகள் ஆகியவற்றைப் பொறுத்து தனிப்பயனாக்கப்பட்ட முக்கிய தகவல்களுடன் அறிவிப்புகளை இந்த App வழங்குகிறது. மற்றொரு முக்கிய அம்சம், பீடை தாக்குதல்கள், நோய் தாக்கம் மற்றும் பிற ஆபத்துகள் முதலிய அடிக்கடி மாற்றத்துக்கு உள்ளாகும் விவசாய நிலைமைகள் தொடர்பான அவசர எச்சரிக்கைகளை வழங்குவதாகும். இதன் மூலம் முன்கூட்டியே எச்சரிக்கைகள் கிடைப்பதனால் அவற்றுக்கான தீர்வுகளை முன்னெடுக்க போதுமான நேரம் கிடைக்கிறது.
- டேட்டா கட்டணங்கள் இல்லை.
- ஒரு பயிருக்கு நாளொன்றுக்கு ரூ. 2, மேலும் பயிர்களுக்கு ஏற்றவாறு உரிய வரிகள்.
- ஒவ்வொரு விவசாயியின் இருப்பிடம், பயிர் மற்றும் நீர் ஆதாரத்திற்கு ஏற்ப மிகவும் தனிப்பயனாக்கப்பட்ட தகவல்கள்.
- விவசாயிகள் சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான தகவல்களை தங்களுக்குத் தேவைப்படும் போது ஒரு விரலசைவில் அணுகலாம்.