Body

டயலொக் அனுசரணையில் புனித ஜோசப்ஸ் - பீட்டர்ஸ் கல்லூரிகளின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட 48வது ஒருநாள் போட்டி

2022 ஆகஸ்ட் 03         (கொழும்பு)

 

48th Josephian Peterite Limited Over Encounter Powered by Dialog

கடந்த வருட போட்டியின் போது

இலங்கையில் நீண்ட காலமாக பாடசாலைகளுக்கிடையே நடைபெற்று வருகின்ற வருடாந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுள் புனித ஜோசப் கல்லூரி மற்றும் புனித பீற்றர் கல்லூரிக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற போட்டிகள் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும். அதற்கமைய , இம்முறையும் அருட் தந்தை பீட்டர் ஏ. பிள்ளை ஞாபகார்த்த கிண்ணத்திற்கான மேற்படி போட்டிகள் ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 9.30 மணி முதல் கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

புனிதர்களுக்கிடையிலான வருடாந்த 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டியானது முதன் முதலாக 1975 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் திகதியன்று கொழும்பு டார்லி வீதியில் நடைபெற்றிருந்தது . அன்று தொடக்கம் மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் கொண்ட மேற்படி போட்டியானது திருவிழா கோலம் பூண்டதான ஒரு போட்டியாக இலங்கையில் பாடசாலைகளுக்கிடையேயான வருடாந்த கிரிக்கெட் நாட்காட்டியில் இன்றியமையாத ஒரு போட்டியாக மாறியது.

அந்த வரிசையில் , இந்த வருடம் இரண்டு அணிகளினதும் தலைவர்களாகிய புனித ஜோசப் கல்லூரி அணியின் தலைவர் ஷெவோன் டேனியல் மற்றும் புனித பீட்டர்ஸ் கல்லூரி அணியின் தலைவர் வனுஜ குமார ஆகிய இருவரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைப்பெற்றிருந்த 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ணம் மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற 2022 இற்கான உலகக் கிண்ணம் ஆகிய போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய திறமையான சகலதுறை ஆட்டக்காரர்கள் என்பதுடன், இரண்டு கல்லூரிகளுக்கிடையிலான 50 ஓவர் போட்டி முடிவடைந்தவுடன், 19 வயதுக்குட்பட்டோருக்கான இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை இவர்கள் விரைவில் மேற்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை மற்றும் அதிகரித்து வரும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, மேற்படி ஒரு நாள் போட்டியை அரங்கில் பார்வையாளர்கள் இல்லாமல் விளையாடுவதற்கு இரண்டு கல்லூரிகளும் முடிவு செய்துள்ளன, ஆனால் , இலங்கையிலும் மற்றும் வெளிநாடுகளிலும் உள்ள இவர்களின் பெருமளவு ரசிகர்களின் நலன் கருதி இப்போட்டியானது டயலொக் டெலிவிஷன் செனல் எண் 140 , ThePapare.com மற்றும் Dialog ViU App ஊடாகவும் நேரடியாகக் காண்பிக்கப்படும். கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் புனித ஜோசப் கல்லூரியினர் புனித பீட்டர்ஸ் கல்லூரியை வெற்றியீட்டியிருந்தனர். எனினும், இந்த ஆண்டு சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற மாபெரும் போட்டியில், புனித பீட்டர்ஸ் கல்லூரி அணி புனித ஜோசப் அணியை விட பிரகாசிப்பை வெளிப்படுத்தியிருந்தது. 50 ஓவர்கள் கொண்ட கடைசி 3 போட்டிகளில் புனித ஜோசப் கல்லூரியே தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளதுடன், தொடரில் 24-20 என அக்கல்லூரியே முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இரண்டு போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன.

டயலொக் ஆசிஆட்டா இலங்கை தேசிய கிரிக்கெட், கரப்பந்து , வலைப்பந்து மற்றும் ஈஸ்போர்ட்ஸ் ஆகிய அணிகளுக்கான பெருமைமிகு அனுசரணையாளர்களாக செயற்பட்டு வருவதுடன், ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம், தேசிய ஜூனியர் மற்றும் சீனியர் வலைப்பந்து போட்டிகள், பாடசாலை ரக்பி உட்பட இராணுவ பரா விளையாட்டுக்கள், தேசிய பரா விளையாட்டுகள் மற்றும் உலக பாராலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் இலங்கை அணி ஆகிய அனைத்திற்கும் டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் அனுசரணை வழங்கி நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.