Frequently asked questions
இந்த இணைப்பிற்கான உரிமை ஆவணங்கள் தெளிவாக இல்லை, முழுமையற்றவை அல்லது கணினிகளில் கிடைக்கவில்லை என்பதை Dialog அடையாளம் கண்டுள்ளது. எனவே, இந்த இணைப்பின் தடையற்ற இணைப்பை உறுதிப்படுத்த, உரிமை விவரங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்.
உரிமையாளர் விவரங்களை நீங்களே புதுப்பிக்க www.dialog.lk/ownership-reg ஐ கிளிக் செய்க
தவறான செய்தி |
தெளிவு |
சரியான நடவடிக்கை |
1. மன்னிக்கவும். இந்த தேசிய அடையாள அட்டையின் கீழ் அதிகபட்சம் 5 இணைப்புகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த தேசிய அடையாள அட்டையின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அனைத்து இணைப்புகளையும் சரிபார்க்க அதே தேசிய அடையாள அட்டையின் கீழ் பதிவுசெய்யப்பட்ட மொபைல் இணைப்பிலிருந்து #132#4# ஐ டயல் செய்யுங்கள். பயன்படுத்தாத எண்ணை துண்டிக்க ஏதேனுமொரு Dialog வாடிக்கையாளர் சேவை நிலையத்திற்கு விஜயம் செய்யுங்கள் |
வாடிக்கையாளர் தனது தேசிய அடையாள அட்டையின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்சம் 5 செயற்படும் நிலையில் உள்ள இணைப்புகளை மட்டுமே கொண்டிருக்க முடியும் |
தேசிய அடையாள அட்டையின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள அறியப்படாத எண்களைத் துண்டிக்கவும் அந்தந்த தேசிய அடையாள அட்டையின் கீழ் பிற தரப்பினரால் பயன்படுத்தப்படும் இணைப்புகளை மாற்றவும் |
2. மன்னிக்கவும், தேசிய அடையாள அட்டையினை வைத்திருப்பவர் வயது குறைந்தவர் என்பதால் இந்த தேசிய அடையாள அட்டையின் கீழ் இணைப்பை பதிவு செய்ய முடியாது. முற்கொடுப்பனவு மொபைல் இணைப்பிற்கு பதிவு செய்ய வாடிக்கையாளர் 16 வயதுக்கு மேல் இருக்க வேண்டும் மற்றும் பிற்கொடுப்பனவு மொபைல் இணைப்பிற்கு பதிவு செய்ய 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். |
வாடிக்கையாளர் தனது தேசிய அடையாள அட்டையின் கீழ் ஒரு இணைப்பை பதிவு செய்ய சட்டப்பூர்வ வயதுடையவராக இருக்க வேண்டும் a. பிற்கொடுப்பனவு மொபைல் இணைப்பை வைத்திருக்க வாடிக்கையாளர் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் b. முற்கொடுப்பனவு மொபைல் இணைப்பை வைத்திருக்க வாடிக்கையாளர் 16 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் |
எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இணைப்பைப் பெறுவதற்கு பாவனையாளர் சட்டப்பூர்வ வயது வரையில் இணைப்பு பெற்றோர் / பாதுகாவலரின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். |
3. மன்னிக்கவும், பதிவு செய்ய இணைப்பு எண்ணை இந்த தேசிய அடையாள அட்டை எண்ணின் கீழ் பதிவு செய்ய முடியாது. தயவுசெய்து உதவிக்கு ஏதேனுமொரு Dialog வாடிக்கையாளர் சேவை நிலையத்திற்கு செல்லுங்கள் |
டிஜிட்டல் தளங்கள் வழியாக சுய உதவி சேவைகளை செய்வதிலிருந்து தேசிய அடையாள அட்டை தடுக்கப்பட்டுள்ளது |
ஏதேனுமொரு Dialog வாடிக்கையாளர் சேவை நிலையத்திற்கு சென்று தேசிய அடையாள அட்டை ஏன் தடுப்புப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது என்பதை சரிபார்த்து அதற்கேற்ப சரியான நடவடிக்கைகளை எடுக்கவும். |
- Dialog உங்களுக்கு SMS தகவலை அனுப்பும். இதுபோன்ற செய்தியை நீங்கள் பெற்றிருந்தால், உங்கள் உரிமையாளர் விவரங்களை www.dialog.lk/ownership-reg சென்று புதுப்பிக்க வேண்டும் அல்லது ஊடக அல்லது அருகில் உள்ள விற்பனை முகவரிடம் சென்றும் புதுப்பிக்கலாம்.
- உங்கள் இணைப்பில் இருந்து #132#1# ஐ டயல் செய்து இணைப்புக்கான புதுப்பிக்கப்பட்ட உரிமையாளர் விவரங்களை சரிபார்க்கலாம்.
- உரிமையைப் புதுப்பிப்பதற்கான கோரிக்கை Dialog இனால் வெற்றிகரமாகப் பெறப்பட்டதும், சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் 3 வேலை நாட்களுக்குள் சரிபார்க்கப்படும்.
- வெற்றிகரமாக இருந்தால், உரிமை விவரங்கள் புதுப்பிக்கப்படும், மேலும் #132#1# டயல் செய்வதன் மூலம் இதை உறுதிப்படுத்த முடியும்
- உரிமையாளர் புதுப்பிப்பு தோல்வியுற்றால் அதைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டிய SMS தகவல் அனுப்பப்படும்