Dialog SIM உரிமையாளர் பதிவு


தேசிய பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை தேவைகளுக்கு ஏற்ப, அனைத்து மொபைல் இணைப்புகளும் சரியான உரிமையாளரின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். எனவே, சந்தாதாரர் உரிமை உறுதிப்படுத்தல் என்பது தனிப்பட்ட மற்றும் தேசிய பாதுகாப்பிற்கான சட்டப்பூர்வ தேவை. உங்கள் Dialog மொபைலில் இருந்து #132# டயல் செய்வதன் மூலம் உங்கள் உரிமையாளர் விபரங்களை சரிபார்த்து உறுதிப்படுத்தவும் .

எந்தவொரு ஸ்மார்ட்போன் அல்லது மடிக்கணினி ஊடாக www.dialog.lk/ownership-reg க்கு செல்வதன் மூலம் உங்கள் மொபைல் இணைப்பின் சரியான உரிமை விவரங்கள் /ஆவணங்களை எளிதாக புதுப்பிக்கலாம் (கேமரா அணுகல் தேவை). web portal தவிர பின்வரும் முறைகளின் ஊடாகவும் உரிமையாளர் விவரங்களை நீங்கள் புதுப்பிக்கலாம்;

மொபைல் இணைப்பிற்கான உங்கள் உரிமை விவரங்களை ஏன் புதுப்பிக்க வேண்டும்?
  • சட்ட முன்னோக்கு

  • <சந்தாதாரர் பதிவு வழிகாட்டல்> வர்த்தமானி குறிப்பு '1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்பு சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 2019 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சந்தாதாரர் சிம் கார்டுகள் விதிமுறைகள்' திருத்தப்பட்டபடி, அனைத்து மொபைல் இணைப்புகளும் சரியாக பாவனையாளரின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். இணைப்பு மற்றும் உரிமை புதுப்பிக்கப்பட வேண்டும். TRCSL உத்தரவின் படி முழுமையற்ற உரிமையாளர் விவரங்களுடன் காணப்படும் இணைப்புகள் ஆண்டு இறுதிக்குள் துண்டிக்கப்படும்.

  • தனியுரிமை மற்றும் டேட்டா பாதுகாப்பு

  • மொபைல் இணைப்பு தனிப்பட்டது. இது உங்கள் அன்றாட வாழ்க்கையையும் தனிப்பட்ட தகவல்களையும் வெளி உலகத்துடன் இணைக்கிறது. நிதி கடிதங்கள், சமூக ஊடக கணக்குகள் போன்றவற்றிற்காக உங்கள் எண்ணை நீங்கள் கொடுத்திருக்கலாம்.

  • எனவே, பாவனையாளரின் பெயரில் இணைப்பு பதிவு செய்யப்படாதபோது, ஒரு அமைப்பாக நாங்கள் இணைப்பின் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளருடன் மட்டுமே இணைப்பு விவரங்களை பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

  • உங்கள் அடையாள எண்ணின் கீழ் (உள்ளூர்-தேசிய அடையாள அட்டை எண் / வெளிநாட்டு- கடவுச்சீட்டு எண்) உங்கள் இணைப்பு பதிவு செய்யப்படாதுவிடத்து நிதி மற்றும் சமூக பாதுகாப்பு அபாயத்தை உருவாக்கும். எனவே இணைப்பின் கீழ் உள்ள உரிமையாளர் விவரங்களைத் திருத்துவதன் மூலம் அவரது / அவங்களது தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பை உறுதி செய்வது வாடிக்கையாளரின் பொறுப்பாகும்.

இணைப்புக்கான உரிமையைப் புதுப்பிக்க தேவையான ஆவணங்கள் யாவை?

இலங்கையர்

இணைப்பு தேசிய அடையாள அட்டை எண்ணின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்

  • வாடிக்கையாளரின் தேசிய அடையாள அட்டை எண், முகம், பெயர் மற்றும் முகவரியை தெளிவாகக் காணக்கூடிய அசல் அடையாள ஆவணம்

  • தேசிய அடையாள அட்டை

  • சாரதி அனுமதி பத்திரம்

  • அல்லது கடவுச்சீட்டு

  • கடவுச்சீட்டு அல்லது தேசிய அடையாள அட்டை / சாரதி அனுமதி பத்திரத்தில் உள்ள முகவரி வேறுபட்டதாயின் பில்லிங் / முகவரி உறுதிப்படுத்தல் ஆவணத்தின் சான்று

  • பாவனை பில் (நீர், மின்சாரம், SLT ) கடந்த 6 மாதங்களுக்குள்

  • செயற்படும் நிலையில் உள்ள டயலொக் மொபைல் Dialog Television / Home Broadband இணைப்பு பில்

  • கடந்த 2 மாதங்களுக்குள் அந்த முகவரிக்கு பெறப்பட்ட எந்த வங்கி அறிக்கை / நினைவூட்டல் அறிவிப்பு

  • கிராம சேவகர் சான்றிதழ்

வெளிநாட்டு பிரஜைகள்

கடவுச்சீட்டு எண்ணின் கீழ் இணைப்பு பதிவு செய்யப்படல் வேண்டும்

  • வாடிக்கையாளரின் கடவுச்சீட்டு எண், முகம், பெயர் மற்றும் பிற விவரங்கள் தெளிவாகக் காணக்கூடிய அசல் கடவுச்சீட்டு

  • தற்போதைய வசிப்பிடத்தின் முகவரி (தட்டச்சு செய்ய வேண்டும் அல்லது கோரிக்கையின் பேரில் வழங்கப்பட வேண்டும்)

டயலொக்கின் சுய உதவி முறை வழியாக உரிமையாளர் விவரங்களை புதுப்பிப்பதற்கான செயல்முறை என்ன, அதாவது Web portal?
  • உரிமையாளர் புதுப்பிப்பு தேவைப்படும் மொபைல் எண்ணை உள்ளிடவும் / வழங்கவும்

  • உங்கள் Dialog மொபைலில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிடவும் / வழங்கவும்

  • உள்ளூர் அல்லது வெளிநாட்டு என்பதைத் தேர்ந்தெடுத்து, கோரப்பட்ட அடையாள எண்ணைத் தொடரவும்

  • இலங்கையர் - தேசிய அடையாள அட்டை எண்

  • வெளிநாட்டவர் - கடவுச்சீட்டு எண்

  • அடையாள ஆவணத்தின் படத்தைப் பிடிக்கவும்

  • கோரப்பட்டால் / தேவைப்பட்டால் முகவரி உறுதிப்படுத்தலின் படத்தைப் பிடிக்கவும்

  • ஒரு செல்ஃபி எடுக்கவும் / உங்களைப் படம் பிடிக்க அனுமதிக்கவும்

  • விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், இழப்பீடுகளுக்கு உடன்படுவதாக உங்கள் கையொப்பத்தை இடுக

  • ‘Submit’ என்பதை அழுத்தி, ஆவண சரிபார்ப்பு கோரிக்கையை உறுதிப்படுத்த காத்திருக்கவும்

  • உரிமையாளர் ஆவணங்கள் அதிகபட்சம் 3 வேலை நாட்களுக்குள் சரிபார்க்கப்படும்

  • எந்தவொரு காரணத்தினாலும் உரிமையாளர் புதுப்பிப்பு தோல்வியுற்றது / நிராகரிக்கப்பட்டால், தொடர்புடைய காரணம் மற்றும் திருத்த நடவடிக்கைகள் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும்

  • அந்தந்த இணைப்பின் புதுப்பிக்கப்பட்ட உரிமை விவரங்களை சரிபார்க்க உங்கள் டயலொக் மொபைலில் இருந்து #132#1# ஐ டயல் செய்யுங்கள்

  • தெளிவான மற்றும் படிக்கக்கூடிய படம் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்

  • ஆவணம் அசலாக இருக்க வேண்டும். மற்றுமொரு சாதனத்தில் உள்ள புகைப்பட நகலோ / ஸ்கேன் செய்யப்பட்ட படங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

  • தெளிவான பின்னணியுடன் ஆவணத்தை ஒரு தட்டையான மேற்பரப்பில் வைக்கவும்

  • உங்கள் கேமரா மூலம் ஆவணத்தில் கவனம் செலுத்துங்கள்

  • எடுக்கப்பட்ட படம் மங்கலாக இல்லை என்பதையும் படிக்கக்கூடியதாக இருக்கின்றது என்பதையும் உறுதிசெய்க

  • பில்லிங் (POB) அல்லது முகவரி உறுதிப்படுத்தல் ஆவணத்தின் சான்று என்றால் என்ன?

  • இது உங்கள் தற்போதைய முகவரியை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணம்

  • பில்லிங் (POB) அல்லது முகவரி உறுதிப்படுத்தல் ஆவணம் தேவை என்பதற்கான நிகழ்வுகளின் எடுத்துக்காட்டுகள்

  • கடவுச்சீட்டு அடையாள ஆவணமாக வழங்கப்படும் போது

  • அடையாள ஆவணமாக வழங்கப்பட்ட சாரதி அனுமதி பத்திரத்தில் முகவரி இல்லை என்றால்

  • அடையாள ஆவணத்தில் உள்ள முகவரியிலிருந்து தற்போதைய / அஞ்சல் முகவரி வேறுபட்டால்

  • பில்லிங் (POB) / முகவரி உறுதிப்படுத்தலின் சான்றின் செல்லுபடியாகும் / ஏற்றுக்கொள்ளும்

  • முகவரி உறுதிப்படுத்தல் ஆவணத்தில் உள்ள பெயர் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை / சாரதி அனுமதி பத்திரம் / கடவுச்சீட்டில் உள்ள பெயருடன் பொருந்த வேண்டும்

  • ஆவணம் ஏற்றுக்கொள்ளக்கூடிய செல்லுபடியாகும் காலத்திற்குள் இருக்க வேண்டும்

  • பில்லிங் (POB) / முகவரி உறுதிப்படுத்தல் ஆவணத்தின் சான்றாக வழங்கக்கூடிய ஆவணங்கள்

  • பாவனை பில் பட்டியல் (நீர், மின்சாரம், SLT) கடந்த 6 மாதங்களுக்குள்

  • செயற்படும் நிலையில் உள்ள டயலொக் மொபைல் Dialog Television / Home Broadband இணைப்பு பில்

  • கடந்த 2 மாதங்களுக்குள் அந்த முகவரிக்கு பெறப்பட்ட எந்த வங்கி அறிக்கை / நினைவூட்டல் அறிவிப்பு

  • கிராம சேவகர் சான்றிதழ்

Frequently asked questions

எனது உரிமையாளர் விவரங்களை புதுப்பிக்கக் கோரும் செய்தியை நான் ஏன் பெற்றுக்கொண்டேன்?

இந்த தேசிய அடையாள அட்டை எண்ணின் கீழ் இணைப்பை பதிவு செய்ய முடியாது என்று ஒரு செய்தி எனக்கு ஏன் வந்தது?

எனது உரிமை விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்பதை நான் எவ்வாறு அடையாளம் காண்பது?

எனது உரிமையாளர் விவரங்களை புதுப்பிக்க எவ்வளவு நேரம் ஆகும்?