Call Conferencing
Call Conferencing என்பது, அநேக தொலைபேசிகளில் உட்கட்டமைக்கப்பட்டுள்ள, ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுடன் ஒரே நேரத்தில் உரையாடக்கூடிய வசதியாகும். இந்த வசதியானது, வர்த்தக அலுவல்களை முன்னெடுப்போர் மற்றும் குடும்பத்தினருக்கு எந்தவொரு வேளையிலும் குழுவாக அழைப்பினை மேற்கொள்ள வழிவகுக்கின்றது. இந்த வசதி ஊடாக, (அழைப்பாளர் உட்பட) ஆறு வரையானவர்களுக்கு ஒரே நேரத்தில் இணைப்பினை ஏற்படுத்தலாம். அநேக தொலைபேசிகளில் Call Conferencing வசதி ஏற்கனவே உட்கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரு அழைப்பொன்றை மேற்கொண்டு, அதனைத் தொடர்ந்து, மெனு ஊடாக மற்றுமொரு அழைப்பினை மேற்கொள்வதைப் போன்று மிக இலகுவானது
Activation
செயற்படுத்த தேவையில்லை. இந்த சேவை முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இந்த சேவையை பெறும் இசைவாக்கம் உள்ள தொலைபேசியில் தங்கியுள்ளது
How to use
உங்களால் உங்கள் தொலைபேசி ஊடாக அழைப்பு ஒன்றைக் கட்டமைக்கலாம், பங்கேற்பாளர் ஒருவரை நீக்கலாம், பங்கேற்பாளர் ஒருவரை மாற்றீடு செய்யலாம் மற்றும் தனி ஒருவருடன் அந்தரங்கமாக பேசலாம்.
அழைப்பொன்றை கட்டமைக்க
- அழைப்பொன்றை மேற்கொள்ளுங்கள்
- அழைப்பு இணைக்கப்பட்டதும் அதனை ஹோல்ட் இல் வையுங்கள்,
- புதிய அழைப்பொன்றை மேற்கொள்ளுங்கள்,
- இப்போது உங்கள் தொலைபேசியில் கொன்ஃபரன்ஸ் கோல் என்ற பதம் தென்படும். அதனை தெரிவுசெய்யுங்கள்.
- தேவையேற்படின் இதனை மீண்டும் திரும்பச்செய்யுங்கள்
நீங்கள் அழைப்பை மேற்கொள்வோருடன் அல்லது உங்களுக்கு அழைப்பினை மேற்கொள்வோருடன் நீங்கள் கொன்ஃபரன்ஸ் கோல் முறையில் உரையாடலாம். அதாவது உங்கள் பட்டியலிலுள்ள அனைவருக்கும் நீங்கள் அழைப்பினை மேற்கொள்ளலாம் அல்லது அவர்களை அழைப்பெடுக்குமாறு கோரலாம்.
கட்டண முறைமை
மேலதிக கட்டணங்கள் அல்லது விஷேட கட்டணங்கள் இல்லை. வழமையான பக்கேஜ் கட்டணங்களின் அடிப்படையிலேயே அழைப்பு நேரக் கட்டணங்கள் அறவிடப்படும்