Body

டயலொக் அனுசரணையில் 92வது Battle of the Maroons சமர் – 2022

2022 ஜுலை 08         கொழும்பு

 

டயலொக் அனுசரணையில் 92வது Battle of the Maroons சமர் – 2022

படத்தில் இடமிருந்து வலம்: ஆனந்த கல்லூரியின் அணித்தலைவர் நெத்ம கருணாரத்ன, ஆனந்த கல்லூரியின் “ Battle of the Maroons “ இன் கூட்டுக் குழுத் தலைவர் பிமல் விஜயசிங்க, ஆனந்த கல்லூரியின் அதிபர் லால் திஸாநாயக்க, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும தலைமை தொழில்நுட்ப அதிகாரி பிரதீப் டி அல்மேடா, நாலந்தா கல்லூரியின் அதிபர் திலக் வத்துஹேவ, நாலந்த கல்லூரி "Battle of the Maroons " கூட்டுக் குழுத் தலைவர் வருண ரத்னவீர, நாலந்த கல்லூரியின் அணித்தலைவர் தினேத் ஷெஹான் சமரவீர

இலங்கையின் முதன்மையான பௌத்த ஆண்கள் பாடசாலைகளான ஆனந்த மற்றும் நாலந்த கல்லூரிகளுக்கிடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டி ஜூலை 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் கொழும்பு எஸ்எஸ்ஸி மைதானத்தில் நடைபெறவுள்ளது. மறைந்த கலாநிதி என்.எம். பெரேரா ஞாபகார்த்த சவால் கிண்ணத்திற்கான மேற்படி Battle of the Maroons’ போட்டிக்கு இம்முறையும் இலங்கையின் முதன்மை தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா அனுசரணை வழங்குகின்றது

கொவிட் பெருந்தொற்று மற்றும் நாட்டில் நிலவுகின்ற தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக, மேற்படி பாடசாலைகளின் ஒன்றிணைந்த ஏற்பாட்டுக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த 92 வது Battle of the Maroons’ கிரிக்கெட் போட்டியானது பார்வையாளர்களுக்கு அனுமதியின்றி விளையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

92வது Battle of the Maroons கிரிக்கெட் போட்டி, Dialog Television அலைவரிசை இலக்கம் 140 இல் நேரடியாக ஒளிபரப்பப்படும், மேலும் ThePapare.com மற்றும் Dialog ViU app இல் LIVE stream மூலமாகவும் பார்வையிட முடியும்.

மேலும், பாடசாலை மாணவ பருவத்தினர் என்ற ரீதியில் போட்டியாளர்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கருதி இரு அணிகளது போட்டி அதிகாரிகளினதும் கண்காணிப்பின்கீழ் அனைத்து கொவிட் -19 கட்டுப்பாட்டு விதிமுறைகள் மற்றும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இம்முறை போட்டியில், ஆனந்த கல்லூரி அணிக்கு இடதுகை துடுப்பாட்ட வீரரான நெத்ம கருணாரத்னவும், நாலந்த கல்லூரி அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் தினேத் ஷெஹான் சமரவீரவும் தலைமை தாங்கவுள்ளனர்.

1996 ஆம் ஆண்டில் இலங்கை அணியின் சார்பாக உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்ட அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க (ஆனந்த கல்லூரி) மற்றும் இலங்கையின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவரான, மறைந்த பந்துல வர்ணபுர (நாலந்த கல்லூரி) போன்ற இலங்கையின் சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய வரலாற்றுப் பெருமையை இந்த இரண்டு கல்லூரிகளும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், தற்போது இந்த இரு கல்லூரிகளுக்கிடையிலான போட்டித் தொடர்களின் அடிப்படையில் ஆனந்த கல்லூரி 12 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறது, அதேவேளை நாலந்த கல்லூரி 06 போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளது. இதற்கமைய, 2003 ஆம் ஆண்டு Maroons Battle இல் ஆனந்த கல்லூரி வெற்றி பெற்றதன் மூலம், கலாநிதி என்.எம். பெரேரா ஞாபகார்த்த சவால் கிண்ணம் ஆனந்த கல்லூரியின் அதிபர் அலுவலகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

டயலொக் ஆசி ஆட்டா இலங்கை தேசிய கிரிக்கெட், கரப்பந்து , வலைப்பந்து மற்றும் ஈஸ்போர்ட்ஸ் அணிகளுக்கான பெருமைமிகு அனுசரணையாளர்களாக செயற்பட்டு வருவதுடன், ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம் , ஜூனியர் கரப்பந்தாட்டம், தேசிய ஜூனியர் மற்றும் சீனியர் வலைப்பந்து போட்டிகள், பாடசாலை ரக்பி , பிரிமியர் கால்பந்து போட்டிகள் மற்றும் பராலிம்பிக் உட்பட இராணுவ பரா விளையாட்டுக்கள், தேசிய பரா விளையாட்டுகள் மற்றும் உலக பாராலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் இலங்கை அணி ஆகிய அனைத்திற்கும் டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் அனுசரணை வழங்கி நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.