கொழும்பு Touch Parking Card செயற்றிட்டத்தின் உத்தியோகபூர்வ தொழில்நுட்பபங்காளராக Dialog அறிவித்துள்ளது
2019 ஜூன் 26 கொழும்பு
Tenaga Car Parks Pvt Ltd ஆனது கொழும்பு மாநகர சபையுடனான பொது தனியார் கூட்டிணைப்பின் மூலமாக அறிமுகப்படுத்தும் Touch Parking Card செயற்றிட்டத்தின் உத்தியோகபூர்வ தொழில்நுட்ப பங்காளராக இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குனரான, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி அறிவித்துள்ளது.Touch Parking Card ஆனது வாகன நிறுத்தல் ரசீதுகளுக்கான கட்டணத்தீர்வாக NFC (Near-field Communication) முறையை வழங்குகின்றது.மேலும் சேவையானது வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக eZ Cash மூலம் கட்டணத்தை செலுத்தி ரசீதில் இணைத்துக்கொள்ளவும் வாய்ப்பளிக்கின்றது. இது உயர் வசதியையும் இலகுவாக அணுகக்கூடிய பணமற்ற கட்டண பொறிமுறையையும் உறுதிப்படுத்துகின்றது.
Touch Parking Card இன் அறிமுகமானது வீதியோர வாகன நிறுத்த மானிகள் மற்றும் Tenaga Car Parks Pvt Ltd இனால் கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள POS உபகரணத்தின் தொழிற்பாட்டையும் கொழும்பு மாநகர சபையின் இணக்கத்துடன் தொடர்கின்றது. செயற்றிட்டத்தின் முதல் பாகமாக சேவையானது காலி முகத்திடலிலிருந்து வெள்ளவத்தை வரை காலி வீதி மற்றும் டுப்ளிகேஷன் வீதி வழியாக நடைமுறையில் இருக்கும். Touch card வாடிக்கையாளர்கள் நிறுத்த ரசீதுகள் கட்டணத்திற்காக அட்டையில் சேமிக்கப்பட்டுள்ள பெறுமானத்தை பயன்படுத்தவும் அல்லது Dialog தொலைபேசி மூலமாக #444# அழுத்தி நிறுத்தல் காலத்தை நீடிக்கவும் அல்லது இலங்கையின் முதல் மற்றும் பாரிய மொபைல் பண மற்றும் கட்டண சேவை வழங்குனரான eZ Cash செயலியை பயன்படுத்தவும் முடியும். செயற்றிட்டத்தின் இரண்டாம் பாகத்தின் போது சேவைகளை நாட்டின் முதலாவது மற்றும் ஒரேயொரு PCI-DSS சான்றிதழ் பெற்ற கட்டண சேவை செயலியான Genie இற்கும் விரிவுபடுத்த எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. மேலதிகமாக இந்த முன்னெடுப்பானது வாகன நிறுத்தல் சேவை வழங்குனர்களுக்கு வாகனங்கள் மற்றும் ரசீதுகள் பற்றிய தகவல்களை பேணும் வசதியையும் வழங்குகின்றது.
Dialog Axiata PLC இன் பிரதம டிஜிட்டல் சேவைகள் அதிகாரியான கலாநிதி நுஷாட் பெரேரா கருத்து தெரிவிக்கையில்,"இலங்கையின் டிஜிட்டல் பரிணாமத்தின் முக்கிய பங்காளிகளாக பணப்பரிமாற்றமற்ற, மிக திறனுள்ள மற்றும் இலகுவான வாகன நிறுத்தல் அமைப்பினை செயற்படுத்தவதற்கான முன்னெடுப்பின் தொழில்நுட்ப பங்காளிகளாக இருப்பதில் பெருமை அடைகின்றோம்.இந்த செயற்றிட்டமானது இலங்கையர்களுக்கு இலகுவான அணுகலுடனான, பாதுகாப்பான மற்றும் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட வாகன நிறுத்தல் கட்டணத்தீர்வை வழங்குதலை நோக்காக கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் வெற்றியை உறுதி செய்ய Tenaga Car Parks Pvt Ltd உடன் பங்கெடுப்பதில் பெருமை கொள்கின்றோம்."
Tenaga Car Parks Pvt Ltd இந்த நிர்வாக இயக்குனரான துமிந்த ஜயதிலக்க,"இலங்கையில் முன்னணியான வாகன நிறுத்தல் தீர்வுகள் மற்றும் போக்குவரத்து மேலாண்மை நிறுவனம் என்ற ரீதியில் நாம் எந்நேரத்திலும் இந்த துறையில் அதிசிறப்பான புதுமைப்படுத்தல்கள் மற்றும் தீர்வுகளை கொண்டுவர முயற்சித்துள்ளோம். இலங்கையின் டிஜிட்டல் பரிணாமத்தின் முக்கிய பங்காளரான டயலொக் ஆசிஆட்டாவை தொழில்நுட்ப பங்காளராக கொள்வதில் பெருமை அடைகின்றோம். அத்துடன் வாகன நிறுத்தல் துறையில் அதிசிறப்பான தொழில்நுட்பத்தை கொண்டு வருவதுடன் ஸ்மார்ட் நகரத்தை உருவாக்கும் அரசாங்கத்தின் நோக்கோடு இணங்கி செயற்படுவோம்" என கூறினார்.
Touch Parking Card ஆனது 200 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட கூடியதுடன் Dialog வாடிக்கையாளர் சேவை நிலையம் அல்லது கொழும்பு பகுதியிலுள்ள parking cards விநியோகிக்கும் இலங்கை அமுலாக்க அதிகாரிகளுடனான Touch விற்பனை நிலையங்களிலும் மீள்நிரப்பல் செய்து கொள்ள முடியும். மேலதிக தகவல்களுக்கு, 0115869551 மூலம் Tenaga Car Parks Pvt Ltd அல்லது 0112698529 மூலம் கொழும்பு மாநகர சபையினை தொடர்பு கொள்க.
Tenaga Car Parks (Pvt) Ltd பற்றி
Tenaga Car Parks நிறுவனமே வாகன நிறுத்தல் மற்றும் போக்குவரத்து மேலாண்மை தீர்வுகளை வழங்கும் இலங்கையின் முன்னணி நிறுவனமாகும். இந்நிறுவனமானது 100 சூரிய சக்தி வாகன நிறுத்தல் மானிகளை 250 மில்லியன் இலங்கை ரூபா முதலீட்டில் கொழும்பு மாநகர சபையுடனான பொது தனியார் கூட்டிணைப்பின் (PPP) கீழ் செயற்படுத்தியது.இந்த மானிகளானவை ஒரு முறை வாகனமானது நிறுத்தல் தளத்தில் நிறுத்தப்பட்டதும் மீண்டும் அவ்விடத்திலிருந்து அகலமுன் உரிமையாளர்கள் கட்டணத்தை செலுத்தக்கூடிய அமைப்பினை கொண்டுள்ளது. 20 வருடத்திற்கு மேலாக தொழில்மயமான நாடுகளில் இருந்த அனுபவத்துடன் Tenagaவானது மலேசியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் CALE, டயலொக் ஆசிஆட்டா மற்றும் Negete (Next Generation Technologies) உள்ளிட்ட சர்வதேச பங்காளர்களின் உதவியுடன் தனது சேவையயை நிலைநிறுத்தியுள்ளது.