டயலொக் அறக்கட்டளையின் மூலம் மட்டக்களப்பில் ஈஸ்டர் ஞாயிறு அன்று பாரிய அசௌகரியங்களில்பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் நீண்ட கால கல்விக்கான ஆதரவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2019 ஜுன் 12
(இடமிருந்து வலம்) Zion தேவாலயத்தின் போதகர் ரொஹன் மஹேசன் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை பிரதான நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹே, சர்வோதய அமைப்பின் நிர்வாக இயக்குனர் சமிந்த இராஜகருணா (சட்டத்தரணி) ஆகியோர் உறுதி மொழியினை பரிமாற்றிக்கொண்டார்கள். மேலும் படத்தில் (1வது வலது) டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாக அதிகாரி ஷியாம் மஜுத் அவர்களையும் காணலாம்.
டயலொக் அறக்கட்டளையின் மூலம் மட்டக்களப்பில் ஈஸ்டர் ஞாயிறு அன்று பாரிய அசௌகரியங்களில் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் நீண்ட கால கல்விக்கான ஆதரவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சர்வோதய மற்றும் டயலொக் அறக்கட்டளையின் ‘Rally to Care’ உடன் இணைந்து இந்த செயற்றிட்டமானது ஆரம்பிக்கப்பட்டது
டயலொக் அறக்கட்டளையின் செயற்றிட்டமாக, மட்டக்களப்பு Zion தேவாலயத்தில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று பாரிய அசௌகரியங்களில் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் நீண்டகால கல்விக்கு ஆதரவு வழங்குவதற்கான நிவாரண முயற்சிகள் ஜுன் மாதம் 9ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிவாரண பணிகள் பாரிய துயர சம்பங்கள் ஏற்பட்ட Zion தேவாலயத்திற்கு அருகில் 2019ஆம் ஆண்டு ஜுன் மாதம் 9ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. துயர சம்பவங்களில் பாதிக்கப்பட்ட இந்த தேவாலயத்தின் புனரமைப்பு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹே, டயலொக் அறக்கட்டளையின் Rally to Care முன்முயற்சியில் மட்டக்களப்பில் பாதிக்கப்பட்ட 71 பாடசாலை மாணவர்களுக்கு 19 வயது வரை நீண்ட கால கல்விக்கான உதவியினை வழங்குவதனை உறுதி செய்தார். கொழும்பு மாதிரி ஐக்கிய நாடுகள் சபை 2019 இன் நிறைவேற்று குழுவினால் பாரிய அசௌகரியங்களில் பாரிக்கப்பட்ட 71 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை பைகளும் பாடசாலை உபகரணங்களும் நிவாரணமாக வழங்கப்பட்டது.
Vision Care நிறுவனத்தினால் முழுமையான கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், பார்வை தொடர்பான பிரச்சினைகள் காணப்பட்டவர்களுக்கு அதே நாளில் இலவச மூக்கு கண்ணாடிகளும் Vision Care நிறுவனத்தினால் இலவசமாக வழங்கப்பட்டது. காணப்பட்டவர்களுக்கு அதே நாளில் மூக்கு கண்ணாடிகளுக்கான மருத்துவ சிட்டைகள் வழங்கப்பட்டதுடன் மூக்கு கண்ணாடிகளும் Vision Care நிறுவனத்தினால் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் நிவாரண பணிகள் யாவும், நாட்டின் நிவாரண உதவிகள், சமாதானம் மற்றும் நலன்புரி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் இலங்கையின் பரந்தளவில் உட்பொதிக்கப்பட்ட சமூக அடிப்படையிலான அபிவிருத்தி அமைப்பின் வலைப்பின்னலான சர்வோதய அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. மட்டக்களப்பு நிவாரண பணிகளின் ஆரம்ப நிகழ்வில் Zion தேவாலயத்தின் போதகர் வணக்கத்துக்குரிய ரொஷன் மஹேசன், மட்டக்களப்பு பிரதேசத்தின் ASP, G. குமாரசிறி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாக அதிகாரி ஷியாம் மஜுத், மற்றும் சர்வோதய அமைப்பின் நிர்வாக இயக்குனர் சமிந்த இராஜகருணா (சட்டத்தரணி) மற்றும் கள உத்தியோக இயக்குனர் இரவீந்திர ஆரியவிக்ரம உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டார்கள்.
மட்டக்களப்பு நிவாரணப் பணிகளானவை கட்டுவாபிடிய பிரதேசத்தில் சான்றிதழ் பெற்ற ஆலோசகர்களின் மூலமாக உள ரீதியாக பாரிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவதற்காக Rally to Care மூலம் ஆரம்பிக்கப்பட்ட Life Healing Centre இன் தொடர்ச்சி ஆகும். கடுவாபிடிய பிரதேசத்தில் நீண்ட கால கல்விக்கான உதவிகளும் மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி பாரிய அசௌகரியங்களில் பாதிக்கப்பட்ட 200 க்கும் அதிகளவான மாணவர்களின் நீண்ட கால கல்வி செயற்பாட்டிற்காகவும் உள ரீதியாக பாதிக்கப்பட்ட 250க்கும் அதிகளவான குடும்பங்களுக்குமான நிவாரணம், உடல் ஊனமுற்றவர்களுக்கான நிவாரணம் ஆகியவை Rally to Care பங்காளிகளான World Vision Lanka, Sarvodaya, My Doctor, Vision Care மற்றும் இரத்மலானை ஆடியோலெஜி மையம் ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகின்றது. Rally to Care தொடர்பான மேலதிக விபரங்களை தெரிந்துக்கொள்ள http://dialogfoundation.org/rallytocare எனும் இணையத்தளத்திற்கு விஜயம் செய்யுங்கள்