Body

டயலொக் அறக்கட்டளையின் Rally to Care முன்முயற்சியின் ஊடாக மட்டக்களப்பில் பாதிக்கப்பட்ட 66 குழந்தைகளுக்கு புலமைப்பரிசில் உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வானது ஆரம்பிக்கப்பட்டது

27 December 2019         Colombo

 

news-1

இடமிருந்து வலம் : சிசிற குமார – டில்ஷான் கொமியூனிகேஷன் பிரைவட் லிமிட்டட், சுராஜ் ரனசிங்ஹ - செஸ்மி கன்சாலிடேட்டட் பிரைவட் லிமிட்டடின் செயற்பாட்டு இயக்குனர், இந்திக வல்பிடிகல – துலன் என்டபிரைசஸ் பிரைவட் லிமிட்டட், சமிந் ராஜகருணா – சர்வோதய, நிர்வாக இயக்குனர், சுபுன் வீரசிங்ஹ - டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாக இயக்குனர், எம். உதயகுமார் - மட்டக்களப்பு அரசு முகவர் / மாவட்ட செயலாளர், அமலி நாணாயக்கார - டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும சந்தைப்படுத்தல் அதிகாரி, மிஷேல் மகேஷன் - சியோன் தேவாலயத்தின் பிரதிநிதி, மற்றும் ஹர்ஷ சமரநாயக - டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் வர்த்தக மற்றும் ஊடக பிரிவு சிரேஷ்ட பொது முகாமையாளர்

news-1

இடமிருந்து வலம் : சமிந் ராஜகருணா – சர்வோதய, நிர்வாக இயக்குனர், எம். உதயகுமார் - மட்டக்களப்பு அரசு முகவர் / மாவட்ட செயலாளர், சுபுன் வீரசிங்ஹ - டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாக இயக்குனர், அமலி நாணாயக்கார - டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும சந்தைப்படுத்தல் அதிகாரி

டயலொக் அறக்கட்டiயின் Rally to Care முன்முயற்சி மட்டக்களப்பில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று ஏற்பட்ட பாரிய துக்ககரமான சம்பவங்களால் பாதிக்கப்பட்ட 66 குழந்தைகளின் நீண்டகால கல்விக்கான புலமைபரிசில் உதவித்தொகை திட்டத்தை ஆரம்பித்தது.

டயலொக் வாடிக்கையாளர்கள், தனிநபர் நன்கொடையாளர்கள் (உள்@ர் மற்றும் வெளிநாட்டு), வணிக பங்காளர்கள் மற்றும் நிறுவனங்களின் தாராள ஆதரவுடன் நிறுவப்பட்ட Rally to Care முன்முயற்சி டிசம்பர் 13ஆம் திகதி பாசிக்குடா Amaya Beach Resort & Spa இல் எம். உதயகுமார் - மட்டக்களப்பு அரசு முகவர் / மாவட்ட செயலாளர், சுபுன் வீரசிங்ஹ - டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாக இயக்குனர், அமலி நாணாயக்கார - டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும சந்தைப்படுத்தல் அதிகாரி, சமிந்த ராஜகருணா – சர்வோதய, நிர்வாக இயக்குனர் மற்றும் சியோன் தேவாலயத்தில் பிரதிநிதி மிஷேல் மகேஷன் மற்றும் ஏனைய பங்காளர்கள் ஆகியோரின் முன்னிலையில் இந்த நிவாரணங்கள் வழங்கப்பட்டது. இந்த உதவித்தொகையானது குழந்தைகளுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதனையும் உறுதி செய்வதுடன், அறிவை விரிவுபடுத்துவதற்கும், அவர்களின் ஆர்வங்களைத் தொடரவும், ஒரு முன்ணுதாரண இலங்கையர்களாக வளரவும் ஒரு வாய்ப்பை வழங்குகின்றது.

இந்த முன்முயற்சியின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் குழந்தைகள் 19 வயதை எட்டும் வரை தொடர்ந்து வழங்கப்படுவதுடன் 4 மாதங்களுக்கும் ஒரு முறை வைப்பிலிடப்படும். அதில் 60% குழந்தைகளின் வங்கி கணக்கிலும் 40% பாதுகாவலரின் வங்கி கணக்கிலும் வரவு வைக்கப்படும்.

இந்த முயற்சியை போலவே மற்றொரு புலமைப்பரிசில் உதவித் திட்டமான “ஷில்ப திரிய” கொழும்பு உயர்மறைமாவட்டத்துடன் இணைந்து டிசம்பர் 1ஆம் திகதி கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் ஆரம்பிக்கப்பட்டது. கட்டுவாபிடிய பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட 185 குழந்தைகள் மற்றும் கொச்சிக்கடை பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட 102 குழந்தைகள் உட்பட மொத்தமாக 287 குழந்தைகளுக்கு நீண்டகால உதவித்தொகை வழங்கப்பட்டது.

அதன் படி ஈஸ்டர் ஞாயிறு அசம்பாவிதங்களில் பாதிக்கப்பட்ட 353 குழந்தைகளுக்கு Rally to Care முன்முயற்சி புலமைப்பரிசில் உதவித்தொகையினை வழங்கியுள்ளதுடன் அவர்கள் தங்களுடைய பாடசாலை கல்வியினை நிறைவு செய்யும் வரை நிதி தொகையினை வழங்குவததையும் உறுதி செய்துள்ளது.

Rally to Care அறக்கட்டளை World Vision Lanka, சர்வோதய, My Doctor, Vision Care மற்றும் ரத்மலானை ஓடியோலொஜி சென்டர் ஆகியவை இதில் பங்காளர்களாக இணைந்துகொண்டனர். இவ்வுதவித்திட்டம் இந்த அசம்பாவித சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்வர்களுக்கு வெளிநோயாளர் சிகிச்சை உதவி, பாரிய காயங்களுக்கு உட்பட்டவர்களுக்கான உதவி, குழந்தைகளுக்கு சிறந்த கல்வி நிதிஉதவித் திட்டம், சமூக மேம்பாட்டு உதவி வழங்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. Rally to Care முன்முயற்சி பற்றிய மேலதிக தகவல்களை http://dialogfoundation.org/rallytocare இணையத்தளத்தி;ன் ஊடாக பெற்றுக்கொள்ளலாம்