Body

டயலொக் Gaming ஆனது Game Hero - 3ம் Season இன் மாபெரும் இறுதிப்போட்டியை நிறைவு செய்தது

ஆகஸ்ட் 27th 2019         கொழும்பு

 

news-1

(இடமிருந்து வலம்) PG ஆகாஷ் காவிந்த பலந்தகம(6ம் இடம்), யசஸ் சச்சிந்த வர்ணகுலசூரிய(5ம் இடம்), ஆதில் ஃபஸால்(4ம் இடம்), மதூஷ சம்பத் பண்டார தென்னகோன் (3ம் இடம்), சந்தரு சமோத் கீரகல (முதலாம் இடம்), டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் உள்ளடக்க கையகப்படுத்தல் மற்றும் சேனல் முகாமைத்துவத்தின் தலைவர் ஜிஹார் ஜுஹைர், அனுரங்க ஆரியதாஸ(2ம் இடம்), ஹசித சுபோத விமலசிறி(7ம் இடம்), சிங்ஹபுரகே ஹேஷங்க(8ம் இடம்), ஹஷைன் மதூஷ விஜேரத்ன(9ம் இடம்) மற்றும் M பசன் நிர்மாண(10ம் இடம்).

இலங்கையின் முன்னணி சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் டயலொக் Gaming ஆல் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் Super Johns ன் Game Hero போட்டியின் 3ம் Season நடாத்தப்பட்டது, இது மொபைல் தொலைபேசி விளையாட்டு போட்டிதொடரில் இலங்கையில் வேறெங்கும் இல்லாதவாறு மிகப்பெரிய பரிசாக 3 மில்லியன் ரூபாவை வழங்குகிறது.

Game Hero என்பது சாதாரண மற்றும் தீவிர மொபைல் தொலைபேசி விளையாட்டு வீரர்களை கருத்திற்கொண்டு அவர்களுக்கு களமமைக்கும் வகையில் உருவாக்கிய மொபைல் தொலைபேசி விளையாட்டுத் தொடர் ஒன்றாகும். இதன்மூலம் அவர்களின் விளையாட்டுத்திறனை வெளிக்காட்டவும் பரிசுகளை வெல்லவும் வாய்ப்புகளை வழங்குகிறது. மேலும் பணப்பரிசை வெல்லக்கூடிய ஒரே மொபைல் தொலைபேசி விளையாட்டு போட்டித்தொடர் சந்தர்ப்பமும் இதுவே. இதன் இறுதிப்போட்டி 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி அன்று டயலொக் ஆசிஆட்டா கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.