Body
டயலொக், பதுளையில் ஆங்கிலம் மற்றும் தகவல் தொடர்பாடல் பயிற்சி பட்டறையுடன்தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தியது.
2019 ஒக்டோபர் 28 கொழும்பு




இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, நாடு முழுவதிலும் உள்ள குழந்தைகளின் தொழில்நுட்ப திறனினை ஊக்குவிக்கும் முகமாகவும் அறிவு திறனை வளர்ப்பதற்கும் தனது தொடர்ச்சியான முயற்சிகளுக்கு அமைய 2019 ஒக்டோபர் மாதம் 5ம் திகதி டயலொக், குழந்தைகளுக்கான ஆங்கிலம் மற்றும் தகவல் தொடர்பாடல் பயிற்சி பட்டறை ஒன்றை ஏற்பாடு செய்து நடாத்தியது.
இந்த பயிற்சிப் பட்டறையில் 100க்கும் மேற்பட்ட டயலொக் குழந்தைகள் பங்கு கொண்ட நிலையில், இந்த நிகழ்வானது ESOFT உடன் இணைந்து பதுளையில் உள்ள ESOFT மெட்ரொ கல்லூரியில் நடாத்தப்பட்டது. இந்த சமீபத்திய முயற்சி இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் பங்கேற்கவும் செயல்படுத்தவும் சிறு குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பதில் டயலொக் தனது தொடர்ச்சியான உறுதிப்பாட்டை பின்பற்றுகின்றது.