Body

டயலொக் மற்றும் சாம்சங் இணைந்து புதிய Galaxy A Series உடன் YouTube மற்றும் Dialog ViU Premium க்கு வரையறையற்ற டேட்டாவினை வழங்குகின்றது.

2019 ஒக்டோபர் 14        

 

news-1

 

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, மற்றும் இலங்கையில் முதற்தர ஸ்மார்ட்ஃபோன் சாம்சங் ஆகியவை இணைந்து ஒவ்வொரு புதிய Samsung Galaxy A Series ஸ்மார்ட்ஃபோன் கொள்வனவிற்கும்; YouTube மற்றும் Dialog ViU Premium க்கு வரையறையற்ற டேட்டாவினை வழங்குகின்றது.

டயலொக் 4G வாடிக்கையாளர்கள் 2019 ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31அம் திகதி வரை கொள்வனவு செய்யும் அனைத்து Galaxy A series தொலைபேசிகளுடனும் வரையறையற்ற YouTube மற்றும் Dialog ViU Premium சலுகையினை பெற்றுக்கொள்ள முடியும். மற்றும் இந்த கொடுப்பனவானது செயற்படுத்தப்பட்ட திகதியிலிருந்து 3 மாதங்களுக்கு செல்லுபடியாகும். புதிய Galaxy A series smartphone இல் டேட்டா நிறைவடையும் என்ற கவலைகள் எதும் இன்றி நீங்கள் விரும்பிய வீடியோ உள்ளடக்கங்களை பார்வையிட முடியும். மேலும் இந்த சாதனத்தினை கொள்வனவு செய்யும் போது 4G சிம் அட்டையானது இலவசமாக வழங்கப்படும்.

டயலொக் 4G வரையறையற்ற YouTube மற்றும் Dialog ViU Premium ஆகியவற்றின் தன்னிச்சையான படைப்பாற்றல் மற்றும் நேரடி உள்ளடக்கங்கள் போன்றவை புதிய Samsung Galaxy A இன் அனைத்து தொலைபேசிகளுக்கும் சரியான துணையாகும். வாடிக்கையாளர்கள் YouTube இல் பொழுதுபோக்கு மற்றும் கல்வி தொடர்பான உள்ளடக்கத்தின் Dialog ViU உள்ளடங்களாக, இலங்கையின் முதற்தர வீடியோ, Live TV App, உள்நாட்டு, பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியிலான புதிய வீடியோ உள்ளடக்கங்கள் உள்ளடங்களாக திரைப்படங்கள், உள்நாட்டு நாடகங்கள், ViU இன் அசல் உள்ளடக்கங்கள், மற்றும் கிரிக்கெட், Big match ரக்பி, கூடைப்பந்து, மற்றும் தமிழ், சிங்கள, ஆங்கில திரைப்படங்களையும் அனைத்து இலங்கையர்களின் விருப்பத்திற்கு அமைய பார் வையிட முடியும்.

நாட்டின் சிறந்த 4G வலையமைப்பு மற்றும் வீடியோக்களுக்கான முதற்தர வலையமைப்பு, இணையற்ற தடையற்ற பார்வை அனுபவத்தினை வழங்குகின்றது. இது Samsung Galaxy A series இல் உள்ள AMOLED திரையால் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது அனைத்து உள்ளடக்கத்தையும் உயிர்பிக்கின்றது. புதிய Samsung Galaxy A series ஒரு புதுமையான கெமரா, பெரிய திரை மற்றும் பற்றரி உள்ளிட்ட பிரீமியம் அதிநவீன மொபைல் தொழில்நுட்பத்தை கொண்டு வருகின்றது. இது பாவனையாளர்களின் வாழ்க்கை முறை, அனுபவங்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் சிறந்த முறையில் படம் பிடித்து காட்டுகின்றது. மேலும், பெரிய மற்றும் பிரகாசமான canvas இல் மிகச்சிறந்த அனுபவத்திற்கான கூர்மையான விபரங்கள், தெளிவான வண்ணங்களை வழங்கும் அதன் பிரமாண்டமான முடிவில் மூலம் பாவனையாளர்கள் சாதனத்தின் அதிசயமான சினிமா அனுபவத்தினையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இலங்கை சாம்சங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. Kevin SungSu YOU கருத்து தெரிவிக்கையில், இன்றைய இளைய தலைமுறையினர் பல மணி நேரங்களை வியக்க வைக்கும் அனுபவத்தில் செலவிடுகின்றார்கள். புதிய Galaxy A series சாதனங்கள் Infinity Display மற்றும் long-lasting பற்றிரியுடன் இது கட்டமைக்கப்பட்டுள்ளமையினால் இது தடையற்ற அனுபவத்தினை உறுதி செய்கின்றது. இதற்கு மேலும் மதிப்பினை கூட்டும் வகையில் இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் உடன் நாங்கள் இணைந்துள்ளமையினையிட்டு பெருமிதம் கொள்கின்றோம். இது ஒவ்வொரு வெற்றிகரமான சாதனத்தினையும் கொள்வனவு செய்யும் போது You Tube மற்றும் Dialog ViU இனை அணுகுவதற்கு 3 மாதங்களுக்கு வரையறையற்ற டேட்டாவினை வழங்குகின்றது. இது எதனுடனும் ஒப்பிட முடியாத சலுகையாகும். இது புதிய Galaxy A series இளம் தலைமுறையினரை மேலும் பலப்படுத்தும் என தனது கருத்தில் தெரிவித்தார்.

இந்த ஒன்றிணைவு பற்றி கருத்து தெரிவித்த டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை இயக்க அதிகாரி கலாநிதி ரெய்னர் டாய்ச்மேன்ää அனைவரும் வீடியோக்கள்ää தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்ää விளையாட்டு போட்டிகள் மற்றும் திரைப்படங்களை பார்க்க அதிக ஆர்வம் கொண்டுள்ளார்கள். ஆகையால் புதிய Galaxy A series இனை கொள்வனவு செய்யும் எங்களுடைய வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இணையற்ற சலுகைகள் அதாவது இலங்கையின் முதற்தர வீடியோ மற்றும் live TV app, இலங்கையின் பரந்த மற்றும் விடியோக்களுக்கு உகந்த 4G வலையமைப்பில் YouTube மற்றும் ViU ஆகிய இரண்டிற்கும் வரையறையற்ற டேட்டா ஆகியவற்றை வழங்குகின்றோம். இந்த கொடுப்பனவினை வாடிக்கையாளர்கள் MyDialog App இன் ஊடாக செயற்படுத்திக்கொள்ள முடியும். நீண்ட பிரயாணங்களின் போது வரையறையற்ற மற்றும் தடையற்ற பொழுதுபோக்குகளை அனுபவத்திற்கும் வாய்ப்பளிக்கின்றது.

Google Play Store இல் Dialog ViU app இனை டவுன்லோட் செய்து MyDialog மொபைல் App இல் “Dialog077” என்பதை Promo Code ஆக பதிவு செய்து 3 மாதங்களுக்கு இலவச YouTube மற்றும் 3 மாதங்களுக்கு Dialog ViU Premium க்கு இலவச பதிவினையும் செயற்படுத்திக்கொள்ள முடியும். வாடிக்கையாளர்கள் www.dialog.lk/promo எனும் இணையத்தளத்திற்கு சென்று எவ்வாறு செயற்படுத்துவது என்பதை பற்றிய விபரங்களையும் பெற்றுக்கொள்ள முடியும். இலவச YouTube மற்றும் Dialog ViU Premium கொடுப்பனவுகள் செயற்படுத்தப்பட்ட திகதியில் இருந்து 3 மாதங்களுக்கு (90 நாட்களுக்கு) செல்லுபடியாகும். வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டவுடன் SMS ஊடாக அல்லது MyDialog App இல் in-app அறிவித்தலின் ஊடாக உங்களுக்கு அறியத்தரப்படும்.

வாடிக்கையாளர்கள் புதிய Samsung Galaxy A series தொலைபேசியினை தெரிவு செய்யப்பட்ட டயலொக் வாடிக்கையாளர் சேவை நிலையத்தில், www.dialog.lk இணையத்தளத்தில் அல்லது wOw.lk இல் கொள்வனவு செய்ய முடியும். அனைத்து சாதனங்களையும் தம்ரோ, சிங்ககிரி, Softlogic விற்பனை நிலையங்கள், மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட Softlogic மொபைல் விற்பனையாளர்களிடமும் John Keells Office Automation இலும் சாம்சங் சின்னம் பதிக்கப்பட்ட நிலையங்களிலும் இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும். முன்னணி ஆன்லைன் பேர்ட்டல் மூலமாகவும் கொள்வனவு செய்துக்கொள்ள முடியும். வாடிக்கையாளர்களுக்கு புதிய Galaxy A Series தெடர்பாக மேலதிக விபரங்கள் தேவைப்படின் அலுவலக நேரங்களில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையில் சாம்சங் வாடிக்கையாளர் சேவை நிலையத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துங்கள்.