Body

e-Swabhimani டிஜிட்டல் சமூக தாக்க விருதுகள் 2019 இல் சேர்க்கை மற்றும் அதிகாரமளிப்பதற்கான உயர் கௌரவமிக்க விருதினை டயலொக் APPMAKER வென்றுள்ளது

2019 நவம்பர் 14         கொழும்பு

 

news-1

(இ-வ) துஷாந்த ரன்வல, Tech Evangelist, Ideamart, ஷனக விக்ரமஆராய்ச்சி, R&D Engineer, Ideamart மற்றும் Simato VAS Solutions Pvt LTD இன் இயக்குனர் Steve Ephraums.

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி வழங்கிய டெவலப்பர்கள் மற்றும் உள்ளடக்க வழங்குனர்களுக்கான தளமான Ideamart இன், Android app உருவாக்கும் தீர்வான ‘APPMAKER’, மதிப்பிற்குரியதொரு நடுவர் மன்றத்தின் தரப்படுத்தலின் மூலம் e-Swabhimani டிஜிட்டல் சமூக தாக்க விருதுகளில் சேர்க்கை மற்றும் அதிகாரமளிப்பதற்கான விருதினை வென்றுள்ளது.

APPMAKER ற்கு, e-Swabhimani டிஜிட்டல் சமூக தாக்க விருது வழங்கி அங்கீகரித்த இந்நிகழ்வை ICTA ஏற்பாடு செய்திருந்தது. ICTA ஆனது. Programming திறனறிவு இல்லாத எவருக்கும் 5 நிமிடங்களுக்குள் ஒரு android app இல் சில எளிமையான கிளிக்குகளை பயன்படுத்தி உருவாக்கும் வாய்ப்பினை வழங்குகின்றது. ICTA வழங்கும் e-Swabhimani விருதுகள் என்பது சமுதாயத்தை மேலும் உள்ளடக்கியதாகவும் திறமையாகவும் மாற்றுவதற்கு உதவுவதன் மூலம், புதிய சேவைகளை வழங்குவதன் மூலம் மற்றும் குடிமக்களை மேம்படுத்துவதன் மூலம் சமூகத்தில் நேர்மறையான தாக்கங்களை உருவாக்கும் அதிசிறந்ததும், முற்போக்குச் சிந்தனையுடையதும் மற்றும் புதுமையானதுமான உள்ளக டிஜிட்டல் தீர்வுகள் மற்றும் hi-tech தீர்வுகளை அங்கீகரிக்கும் ஒரு விருது வழங்கும் அமைப்பாகும்.

app உருவாக்கும் புத்தம்புதிய தளமான இத் தளத்தை, Simato VAS Solutions Pvt LTD உடன் இணைந்து தொழில் முனைவோரால் வளம்பெற்று முன்னேற்றம் கண்டுவரும் இளம் நிறுவனமான ideamart அறிமுகப்படுத்தியுள்ளது. இது டெல்கோ உட்கட்டமைப்பின் மேல் கட்டமைக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே Android app உருவாக்க தளமாகும். Simato Solutions ஆனது 2008 முதல் மொபைல் பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகள் (VAS) வணிகத்தில் ஈடுபட்டுள்ளதுடன் மொபைல் உள்ளடக்கம் மற்றும் சேவைகளை வழங்குவதிலும் முன்ணணியில் உள்ளது. எந்த வகையான programming முன் அனுபவமும் இல்லாத ஒருவர் மொபைல் app அல்லது வலைத்தளத்தை உருவாக்கும் செயன்முறையை எளிதாக்குவதற்காக Appmaker உருவாக்கப்பட்டுள்ளது.

APPMAKER பாவனையாளர்களுக்கு android app களை உருவாக்க முன்பே கட்டமைக்கப்பட்ட template களை பயன்படுத்தி அவற்றின் தேவைகளுக்கு ஏற்ப அவற்றின் app களை உருவாக்க மற்றும் தனிப்பயனாக்க உதவுகின்றது. இங்கு பாவனையாளர் வகைகள், பக்கங்கள் மற்றும் ஊடக உள்ளடக்கங்களை சேர்க்கலாம். ஜோதிடம், உடல் நலம் மற்றும் உடற்பயிற்சி, செய்தி மற்றும் மின் வணிகம் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டு நிகழ்வுகளுக்கு 13 வெவ்வேறு வகையான template களை இந்த தளம் வழங்குகின்றது. Application creator களை நிகழ்நேர உள்ளடக்கத்தை புதுப்பிக்கவும், பாவனையாளர்களுக்கு அறிவிப்புக்களை அனுப்பவும். (push notifications) telco உட்கட்டமைப்பை பயன்படுத்தி பயன்பாட்டை பணமாக்கவும் மற்றும் அவர்களின் பயன்பாட்டை Google Play Store இல் பதிவேற்றவும் APPMAKER அனுமதிக்கின்றது.

இந்த வெற்றி குறித்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் தலைமை டிஜிட்டல் சேவை அதிகாரி நு~hட் பெரேரா கருத்த தெரிவிக்கையில் ICTA வழங்கிய e-Swabhimani டிஜிட்டல் சமூக தாக்க விருதுகளின் சேர்க்கை மற்றும் அதிகாரமளித்தல் பிரிவின் கீழ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளமை எங்களுக்கு பெருமையளிக்கின்றது. தொழில்நுட்பம் மற்றும் சமூக முதலீட்டின் ஒருங்கிணைந்த வலிமை மூலம் உண்மையான சமூக தாக்கத்திற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான எங்கள் முயற்சியாகும். இலங்கையின் டிஜிட்டல் சார் கண்டுபிடிப்பாளர்களுக்கான தளங்களை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம். மேலும் பயன்படுத்த எளிதான ஆனால் APPMAKER போன்ற சக்தி வாய்ந்த கருவிகளின் மூலம் நேர்மையான சமூக மாற்றத்தை ஏற்படுத்தவதற்கான தீர்வுகளை உருவாக்க அவர்களுக்கு அதிகாரம் அளிப்போம் என மேலும் தெரிவித்தார்.

APPMAKER எவ்வதமான முற்பண கட்டணங்களும் இன்றி application creator கள் App இனை உருவாக்க முடியும். பணமாக்கும் கட்டத்தில் தளத்திற்கும் பயன்பாட்டினை உருவாக்கியவருக்கும் இடையிலான வருவாய் பகிர்வு விகிதம் 40:60 ஆகும். பயனர்கள் தங்கள் தனிப்பயன் Android app களை உருவாக்க Appmaker.lk ஐ பார்வையிடவும்.