Body

Dialog App Challenge, இலங்கையின் பாடசாலைகளுக்கிடையிலான முதலாவது school Appஉருவாக்கத்திற்கான இறுதி போட்டி

2019 ஏப்ரல் 16         கொழும்பு

 

news-1

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹே, வெற்றியாளர்களாகிய யாழ்ப்பாண கல்லூரி பரமேஷ்வரன் பிரவீனன் மற்றும் தர்ஷிகா பரமேஷ்வரன் ஆகியோருக்கு வெற்றி கோடயத்தை கையளிப்பதை படத்தில் காணலாம்.

news-1

இடமிருந்த வலம்- கலன மனுப்ரிய அவர்களின் தலைமையில் 3ம் இடத்தினை பெற்றுக்கொண்ட பண்டுவஸ்நுவர SWRD பண்டாரநாயக்க கல்லுர்ரி அணியினரையும் வெற்றியாளர்களான யாழ்ப்பாண கல்லூரி பரமேஷ்வரன் பிரவீனன் மற்றும் தர்ஷிகா பரமேஷ்வரன் மற்றும் ஷேஹான் விஜயதுங்கன அவர்களின் தலைமையில் 2ம் இடத்தினை பெற்றுக்கொண்ட கொத்மலை காமினி தசாநாயக்க தேசிய கல்லூரி அணியினரையும் படத்தில் காணலாம்.

இலங்கையின் பிரதான இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிடில்சி, டயலொக் Ideamart மற்றும் Dialog Home Broadband அணுசரனை வழங்கும் ‘Dialog App Challenge’ இன் மூலம் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் திகதி இலங்கையின் முதலாவது inter-school app challenge இல் யாழ்ப்பாண கல்லூரியிலிருந்து பரமேஷ்வரன் பிரவீனன் மற்றும் தர்ஷிகா பரமேஷ்வரன் ஆகியோர் ரூ.300,000 பெறுமதியான பரிசுகள் வென்றார்கள். கல்வி அமைச்சின் ஒத்தழைப்புடன் அனைத்து மாவட்டங்களிலும் சாதாரண மற்றும் மேற்பட்ட அளவிலான மாணவர்களிடையே மென்பொருள் மேம்பாட்டிற்கான ஆர்வத்தை வளர்ப்பதற்காகவும் தகவல் தொழில்நுட்பத்துடன் சாத்தியமான தொழில்துறை உருவாக்குவதையுமே நோக்கமாக கொண்டுள்ளது.

Dialog App Challenge, தொழில்நுட்பம் அடிப்படையிலான தீர்வுகளை அவர்களின் சமூகங்களில் உள்ள சிக்கல்களை தீர்க்க, நாடு முழுவதிலுமுள்ள 8 மாகாணங்களில் கல்வி வலயத்தில் ஆசிரியர்கள் இயக்குனர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கான விழிப்புணர்வு அமர்வுகளுக்கு வழிவகுக்கும் தயாரிப்பு வளர்ச்சிக்கும் மாணவர்களுக்கும் மாணவர்களுக்கிடையே கல்வி கற்க மாகாண மட்டத்தில் மாணவர்களுக்கான பயிற்சி பட்டறைகள் நடாத்தப்படுகின்றன. 8 மாகாணங்களையும் பிரதிநிதித்தவப்படுத்தும் வகையில் வெற்றிகரமாக 11 அணிகளுடன் 200 போட்டியாளர்கள் பதிவு செய்திருந்தார்கள். இந்த முன்முயற்சியை பூர்த்தி செய்ய ஒரு தயாரிப்பு மேம்பாட்டு திட்டம் தங்கள் யதார்த்தங்களை மேம்படுத்தவதற்கும் செயற்படுத்தவதற்கும் குழுக்களை ஆதரிப்பதாகவும் உள்ளது.

கல்வி இயக்குனர் (ICT) கல்வி அமைச்சர் பி.என். இலப்பெரும கருத்து தெரிவிக்கையில், புதுமை மற்றும் சமீபத்திய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உண்மையான உலக பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அறிவு மற்றும் திறனுடன் நாட்டின் எதிர்கால தலைமுறையினை வளர்த்தெடுப்பது மிகவும் முக்கியமானதாகும். Dialog App Challenge இலங்கையின் எதிர்காலத்திற்கான ஒரு சிறந்த தளத்தை வழங்குகின்றது. மேலும் இந்த முன்முயற்சியை ஆதரிப்பதையிட்டு பெருமிதம் கொள்கின்றோம்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் MIFE வியாபாரம் IOT, ideaMart தலைவர் விரங்க செனவிரட்ன கருத்து தெரிவிக்கையில் Dialog App Challenge ஆனது இலங்கையிலுள்ள இளைஞர்களுக்கிடையே திறமையை கண்டுபிடித்து வாய்ப்புக்களை ஆராய்ந்து வழிகாட்டல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குவதற்கான ஒரு தளத்தை வழங்குவதனை நோக்கமாக கொண்டுள்ளது. இலங்கையின் முன்னணி டிஜிட்டல் பரிமாற்றத்தில் ஒருவராக எதிர்கால தலைமுறைகளை வளர்ப்பதுடன் digital age அதன் உயரத்திற்கு நாட்டை ஊக்கவிக்க அறிவு மற்றும் திறமைகளுடன் அவற்றை உருவாக்குவது அவசியமாகும்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் புரோட்பாண்ட் மற்றும் நிலையான தொலைத்தொடர்பு பிரிவு தலைவர் நவீன் பீரீஸ் Dialog Home Broadband Dialog App Challenge மூலம் இலங்கை இளைஞர்களை அங்கீகரிப்பதையிட்டு பெறுமைக்கொள்வதுடன் டிஜிட்டல் தளத்தில் சிறப்பான முன்னேற தேவையான வளங்களை மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு வழங்குவதற்கும் நாங்கள் முயல்கின்றோம் என தனது கருத்தில் தெரிவித்திருந்தார்.

தங்களது பிரச்சினை அறிக்கை, முன்மொழியப்பட்ட தீர்வு, பயனர் நட்பு, தொழில்நுட்பத்தின் திறனை பயன்படுத்துதல், தயாரிப்பு முழுமை, மற்றும் விளக்க திறமைகள் போன்ற அளவுருக்களின் அடிப்படையில் அணிகள் மதிப்பீடு செய்யப்பட்டன. இந்த போட்டியில் சாம்பியன்களுக்கு 300,000 ரூபாய்க்கான பரிசுகளும் இரண்டாம் இரத்தினை பெற்றுக்கொண்டவர்களுக்கு 150,000 ரூபாய் பெறுமதியான பரிசுகளும் மூன்றாம் இடத்தினை பெற்றுக்கொண்டவர்களுக்கு 75,000 ரூபாய் பெறுமதியான பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும் போட்டியாளர்களில் பயனுள்ள ஆலோசனைகள் சனத்தொகை ஒருங்கிணைப்பு, சிறந்த ideamart தொழில்நுட்ப பயன்பாடு, சிறந்த பெண்களுக்கான அணி மற்றும் இன்னும் அதிகளவானவற்றுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.