Body

டயலொக் ஆசிஆட்டா மற்றும் Access ஆகியவை இணைந்து இலங்கையின் முதலாவது மும்மொழி AR மற்றும் 3D கற்றல் App ஆன Hologo வை அறிமுகப்படுத்துகிறது

19 ஏப்ரல் 2020         கொழும்பு

 

news-1

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி மற்றும் Access ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை இலங்கையின் முதலாவது மும்மொழி Augmented Reality மற்றும் 3D கற்றல் App ஆன Hologo வை அறிமுகப்படுத்துகிறது, இதில் உள்ள உள்ளடக்கங்கள் எவ்விதமான டேட்டா கட்டணங்களும் இன்றி டயலொக் வாடிக்கையாளர்களுக்கு 2020 மே 15 வரை கிடைக்கும். இந்த புதுமையான கல்வித் தளம் இலங்கையின் கல்வி முறைக்கு ஒரு தீர்வாகும், மேலும் இது ஒரு மும்மொழி, தனிப்பயனாக்கக்கூடிய மற்றும் ஒருங்கிணைந்த கற்றல் சுற்றுச்சூழல் அமைப்பை வழங்குவதற்கான முதல் மற்றும் ஒரே தளமாகும், இதன் மூலம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கல்வி அனுபவத்தை முழுமையாக மேம்படுத்துவதன் மூலம் விரிவான பாடத்திட்டங்களை முழுமையாக வழங்கிட முடியும்.

Hologo என்பது 3D மற்றும் Augmented Reality யில் உள்ளடக்கம் மற்றும் கல்வி அனுபவங்களின் தொடர்ச்சியாக வளர்ந்து வரும் நூலகமாகும், இதன் மூலம் அதிகளவான அனுபவங்களை பெற்றக்கொள்ள கூடியதுடன் அதிகளவான விடங்களையும் தெரிந்துக்கொள்ள முடியும். ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தொடர்ந்து கல்வி செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு புதிய கருவியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் புரட்சியுடன் கல்வி முறைகள் பெருமளவில் உருவாகவில்லை என்றாலும் - ஆசிரியர்களை மையமாகக் கொண்ட ஒரு தீர்வைக் கொண்டு ஆசிரியர்களை ஊக்குவிக்கும் அதே வேளையில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இலகுவாக பெற்றுக்கொள்ளக்கூடிய அதிநவீன கல்வி தொழில்நுட்பத்தை வழங்குவதை Hologo நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கற்றல் தளம் கேமிஃபிகேஷன் (gamification) மற்றும் ஆரோக்கியமான போட்டிச் சூழல்களின் தன்மையை கொண்டுவருவதற்கான ஒரு புதுமையான அணுகுமுறையை எடுத்துள்ளது, மேலும் சிறந்த வடிவமைப்போடு மாணவர்கள் மற்றும் பங்காளர்களுடன் வேடிக்கையாகக் கற்றுக் கொள்ளும் இணையற்ற பயனர் அனுபவங்களை அளிக்கிறது.

Hologo அறிமுக நிகழ்வின் போது, Access ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் ரன்ஷன் கோம்ஸ் கருத்து தெரிவிக்கையில் " Augmented Reality கல்வியில் மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது, ஏனெனில் இது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கற்றலை எளிதாகவும், பயனுள்ளதாகவும், வேடிக்கையாகவும் வழங்குகின்றது. விரிவுரைகள் மற்றும் வகுப்பறைகளில் AR இன் ஒருங்கிணைப்பு மாணவர்களின் இணையற்ற கவனத்தை ஈர்க்கிறது. இலங்கையில் Hologo ஐ விநியோகிப்பதற்கான உரிமத்தை நாங்கள் பெற்றுள்ளதில் மகிழ்ச்சியடைகிறோம், குறிப்பாக இந்த நேரத்தில், மாணவர்களுக்கு அத்தியாவசியமான, பயனுள்ள தொலைதூர கற்றல் அனுபவத்தைத் தொடர்ந்து வழங்கக்கூடிய அமைப்புகள் தேவைப்படும். AR இலங்கையில் கல்வியையும் அதன் முழு கற்றல் செயல்முறையையும் தொடர்ந்து மாற்றும் என்று நாங்கள் நம்புகிறோம். " என தெரிவித்தார்.

அறிமுகம் குறித்து, தனது கருத்துக்களை தெரிவித்த டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்ஹ, “இலங்கையின் முதல் மற்றும் ஒரே மும்மொழி AR மற்றும் 3D கற்றல் தளமான Hologo வின் வெளியீடு, டயலொக்கின் மற்றொரு படிக்கல்லாகும், இது எதிர்காலத்தை, இன்று தொடர்ந்து வழங்குவதற்கான எங்கள் நிறுவன நெறிமுறைகளை பிரதிபலிக்கிறது. இந்த புதுமையான தளம் மாணவர்களுக்கு பிரயோசனமான கற்றல் தளத்தை வழங்குகிறது, அதே நேரத்தில் ஆசிரியர்களுக்கு அவர்களின் மெய்நிகர் வகுப்பறைகளை உருவாக்கவும், அவர்களின் பாடங்களைத் தொடரவும் தனிப்பயனாக்கக்கூடிய மற்றும் வசதியான தளத்தை வழங்குகிறது. இந்த முயற்சியின் மத்தியில், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கற்றல் தொடர்ச்சியை எளிதாக்குவதற்காக, இந்த வெளியீட்டுடன் ஒரு படி மேலே சென்று, Hologo உள்ளடக்கங்களை அனைத்து டயலொக் வாடிக்கையாளர்களுக்கும் எவ்விதமான டேட்டா கட்டணங்களும் இன்றி 2020 மே 15 வரை இலவசமாக நீட்டிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ” என தெரிவித்தார்.

Hologo இனை, Apple App Store மற்றும் Google Play Store ஊடாக அனைத்து பாவனையாளர்களும் டவுன்லோட் செய்துக்கொள்ள முடியும். இந்த App ஆனது அனைத்து டயலொக் பாவனையாளர்களுக்கும் 2020 மே மாதம் 15ஆம் திகதி வரை இலவசமாக வழங்கப்படுகின்றது. 2020 ஜுன் 30 க்கு முன் அனைத்து உள்ளடக்கங்களும் பாடங்களும் விசேட அணுகலையும் முழு சேவையினையும் பெற்றுக்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு வருடாந்த கட்டணமாக ரூ.550 என்ற சிறப்பு விலையில் வழங்கப்படவுள்ளது.