Body

டயலொக் ஆசிஆட்டா அறிமுகப்படுத்தும் ‘Fun Blaster’ - 4G மொபைல் வாடிக்கையாளர்களுக்கு வரையறையற்ற Facebook; மற்றும் WhatsApp

06 ஜுலை 2020         கொழும்பு

 

news-1

டயலொக் அதன் வெற்றிகரமான பிளாஸ்டர் பக்கேஜ்களின் தொடர்ச்சியாக இன்னொரு அற்புதமான ‘Fun Blaster’ பக்கேஜினை இணைத்துள்ளது. – வரையறையற்ற மற்றும் எவ்விதமான டேட்டா கட்டணங்களும் இன்றி Facebook மற்றும் WhatsApp இனை இலவசமாக எங்கும், எந்நேரழும் பயன்படுத்த உதவுகிறது. Chat செய்தல், video க்களை பார்த்தல், அல்லது வேறு எவ்வகையான files களையும் பரிமாற்றலுக்கு டேட்டா கட்டணங்கள் இல்லை.

Facebook மற்றும் WhatsApp இனை வரையறையின்றி பயன்படுத்த விரும்பும் அல்லது அதிக டேட்டா கட்டணங்களைத் தவிர்க்க விரும்பும் 4G வாடிக்கையாளருக்கும் ‘Fun Blaster’ மிகவும் உகந்த பக்கேஜ் ஆகும். டேட்டா கட்டணங்கள் பற்றிய கவலைகள் இன்றி வாடிக்கையாளர்கள் chat செய்யவும், post செய்யவும், share செய்யவும் முடிவதுடன் வீடியோக்களை பார்வையிடவும் முடியும்.

இந்த ‘Fun Blaster’ பக்கேஜானது முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு வாரத்திற்கு 7 நாட்களுக்கு மிக குறைந்த கட்டணமான 47 ரூபாய்க்கும், முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு மாதத்திற்கு 107 ரூபாய்க்கும் வழங்குகின்றது. மேலும் இலங்கையில் முதன்முறையாக, டயலொக் ரூ.477 என்ற கட்டணத்திற்கு 6 மாதகால திட்டத்தினையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 3 வகையான பக்கேஜ்களிலும் வரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. மொபைல் தொலைபேசிகளில் SD (360p) தரத்தில் பாவனையாளர்கள் இப்போது வரையறையின்றி, buffer-free video பார்க்கும் அனுபவத்தையும் வழங்குகின்றது. இந்த Fun Blaster பக்கேஜினை பொருத்தமான தொகையை ரீலோட் செய்தும், #678# டயல் செய்தும், MyDialog App ஊடாகவும் அல்லது www.dialog.lk க்கு சென்று செயற்படுத்திக்கொள்ள முடியும்.

நிறுவனத்தின் நோக்கத்தின் ஒரு பகுதியாக இலங்கையர்கள் அனைவராலும் அணுகக்கூடிய மற்றும் வரையறையின்றி பயன்படுத்தக்கூடியதாகவும் பிளாஸ்டர் தர வரிசையில் இது புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட “4G Video Blaster” - ரூ.249க்கு டேட்டாவிற்கு முன்னுரிமை வழங்கும் வகையில் YouTube பாவனைக்கு வரையறையற்ற டேட்டாவினையும் ஏனைய இணையத்தள பாவனைகளுக்கு 3.5GB Anytime டேட்டாவினையும் கொண்டுள்ளது. “Triple Blaster” – அழைப்புகளுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் வரிகள் உள்ளடங்களாக ரூ.345க்கு வழங்கப்படுகின்றது. அதிகரித்த டேட்டா பாவனை குறித்து எவ்விதமான கவலைகளும் இன்றி வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பொழுதுபோக்கு தேவைகளை எளிதாக்கும் பயணத்தில் டயலொக் அடைந்த ஒரு மைல்கல்லாக Fun Blaster காணப்படுகின்றது.