Body

டயலொக் தொடர்ச்சியான ஊரடங்கு உத்தரவின் கீழ் உள்ள பகுதிகளில் உள்ள அனைத்து மொபைல் வாடிக்கையாளர்களுக்கும் இலவச நிவாரணமாக டேட்டா, அழைப்பு மற்றும் SMS ஆகியவற்றை தொடர்ந்து வழங்குகிறது

2020 ஏப்ரல் 28        கொழும்பு

 

தற்போதைய காலகட்டத்தில் நாடு முழுவதும் உள்ள இலங்கையர்கள் தொடர்ந்து இணைந்திருப்பதை உறுதி செய்வதற்கும், தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவின் கீழ் உள்ள பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் கட்டணத்தை செலுத்தவும் பயன்படுத்தவும் முடியாமல் இருப்பதன் காரணமாக அவர்களுக்கு மேலும் உதவுவதற்காக, இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இப்போது ஒரு சிறப்பு 7- நாள் சலுகையினை வழங்குகிறது. அதன் அனைத்து மொபைல் வாடிக்கையாளர்களுக்கும் 1 GB Anytime டேட்டா, D2D 250 SMS மற்றும் D2D 250 அழைப்பு நிமிடங்கள் அடங்கிய பக்கேஜினை தொடர்ந்து வழங்குகின்றது. மேலும் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாகவும், எந்நேரமம் இணைந்திருப்பதற்காகவும் e-Connect, e-Learn, e-Health, e-Tainment, e-Care மற்றும் e-Work solutions போன்றவற்றுக்கான தீர்வுகளையும் வழங்குகின்றது

முன்பை விட இப்போது கட்டாயமாக உள்ள நாடு தழுவிய இணைப்பை வழங்குவதற்கான உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்திய டயலொக், இந்த சேவை சலுகையை ஊடரங்கு உத்தரவு அழுலில் உள்ள பிரதேசங்களில் உள்ள அதன் அனைத்து மொபைல் வாடிக்கையாளர்களுக்கும் முற்றிலும் இலவசமாகவும், வாடிக்கையாளரின் இருப்பு அல்லது கட்டணத்தைப் பொருட்படுத்தாமல் விரிவுபடுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த இலவச சலுகையினை பெற்றிருந்தால் அதனை அவர்கள் 7 நாட்களுக்கு அனுபவித்திட முடியும். அவ்வாறு இல்லையெனில் ஊரடங்கு உத்தரவு காலம் முழுவதும் #006# டயல் செய்து ஒவ்வொரு 7 நாட்களுக்கு ஒரு முறையும் பெற்றுக்கொள்ள முடியும்.

வேலை, படிப்பு மற்றும் வீட்டில் பொழுதுபோக்கு ஆகியவற்றை கவலையின்றி மற்றும் இடையூறு இன்றி தொடர இவற்றை ஆதரிக்கும் வகையில் இந்த சிறப்பு சலுகை, டயலொக்கின் கோவிட் -19 தொடர்பான ஆதரவு சலுகைகளின் விரிவான தொகுப்பை நிறைவு செய்கிறது, மேலும் சலுகை வழங்களில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக சேவைகளுக்கும், அர்ப்பணிப்பு கற்றல் சேவைகளாக நெனச மற்றும் குரு ஆகியவற்றுக்கு முற்றிலும் இலவச அணுகலும், அனைத்து டயலொக் டிவி அலைவரிசைகளும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதுடன், ViU Movies மற்றும் Live TV app ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட கடன் எல்லையும் வழங்கப்பட்டுள்ளது. கோவிட் -19 தொடர்பான ஆதரவின் முழு தொகுப்பையும் www.dialog.lk/home (வாடிக்கையாளர்கள்;) மற்றும் business.dialog.lk/products-services/wfh/ (வணிகங்களுக்கு) மூலம் பார்வையிடலாம்.

மேலும் டயலொக் அரசாங்கத்தின் கட்டாய சமூக விலகல் நடவடிக்கைகளை ஆதரிக்கிறது மற்றும் ரீலோட் மற்றும் பில் கட்டணங்களை செலுத்தவும் மற்றும் பிற அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் வாடிக்கையாளர்கள் அதன் டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் தளங்களை பயன்படுத்துமாறு ஊக்குவிக்கிறது. வாடிக்கையாளர்கள் MyDialog app அல்லது dialog.lk மூலமும் கொள்ளவனவு செய்த அனைத்து மொபைல் முற்கொடுப்பனவு டேட்டா பக்கேஜ்கள் மற்றும் பிற்கொடுப்பனவு டேட்டா நீட்டிப்புகளுக்கு எந்நேரத்திற்குமான டேட்டாவை பெறுவார்கள்.

அதிகமான மக்கள் வீட்டிலேயே தங்கியிருப்பதாலும், ஆன்லைன் வசதிகளை தினசரி தேவைகளாக மாறியிருப்பதாலும் அதன் வலையமைப்புகள் வழக்கத்திற்கு மாறாக அதிக டேட்டா பாவனை தேவையை சந்தித்து வருவதாலும் அவை அனைத்தும் அதன் திறனுக்குள் இருப்பதாகவும் டயலாக் அறிவித்துள்ளது. அதிகரித்த பயன்பாட்டின் இந்த நேரத்தில் பயனர்கள் வழக்கத்தை விட மெதுவான வேகத்தை அனுபவிக்கக்கூடும், டயலொக் தனது வலையமைப்பை தொடர்ந்து மேம்படுத்துவதாக உறுதியளித்துள்ளது மற்றும் அதன் வாடிக்கையாளர்கள் நம்பகமான இணைப்பைப் பெறுவதை உறுதிசெய்ய தயாராக உள்ளனர். வீட்டில் சிறந்த அனுபவத்திற்காக, டயலொக் தனது Home Broadband ரவுட்டர்களை பயன்படுத்த ஊக்குவிக்கிறது. இது வீட்டில் இருந்து வேலை செய்வதற்கும் கல்வியினை தொடர்வதற்கும் பொழுதுபோக்குகளுக்கும் உகந்ததாகும். ஒரு சிறப்பு சலுகையான டயலொக் அனைத்து டேட்டா நீடிப்புகளுக்கும் எந்நேரத்திற்குமான டபுள் டேட்டாவை வழங்குகிறது. மேலும் அனைத்து புதிய வாடிக்கையாளர்களையும் 3 மாதங்களுக்கு இருமடங்கு டேட்டாவை வழங்கி வரவேற்கின்றது.