Body

டயலொக் இருப்பிட அடிப்படையிலான "கடல்" எனும் இலவச வானிலை எச்சரிக்கை மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை சேவைக்கு அனுசரணை வழங்குகின்றது

01 மார்ச் 2020         கொழும்பு

 

news-1

படத்தில் இடமிருந்து வலம்: பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் இராஜபக்~, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்கே, இலங்கை பிரதமர் கௌரவ மஹிந்த இராஜபக்~, மீன்வள மற்றும் நீர்வள அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா, மாநில மீன்வள மற்றும் உள்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் கௌரவ சனத் நி~hந்த மற்றும் போக்குவரத்து மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கௌரவ மஹிந்த அமரசிங்க, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும பேண்தகு நிலை பிரிவு தயாரிப்பு மேலாளர் திரு. தமித குணவர்தன,

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி "கடல்" எனும் இலவச முத்தரப்பு மற்றும் முழுமையான SMS மற்றும் குரல் செய்திகளை அடிப்படையாக கொண்ட வானிலை மற்றும் எச்சரிக்கை சேவையை கடலோர சமூகங்களில் உள்ள மீனவர்களுக்கு திணைக்களத்துடன் இணைந்து மீன்வள மற்றும் நீர்வள துறையால் உருவாக்கப்பட்டது.

கடலோர பகுதிகளில் உள்ள மொத்த மக்கள் தொகையில் கணிசமான அளவு மீன்பிடித்தல் மூலம் ஒரு வாழ்க்கையை உருவாக்குகின்றது. மற்றும் கணிக்க முடியாத வானிலை அவர்களின் வாழ்வாதாரத்திற்கு மோசமான விளைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த சமூகங்களுக்கு துல்லியமான தகவல்களையும் விழிப்பூட்டல்களையும் உடனடியாக பெறுவதற்கான தளத்தை வழங்குவதன் மூலம் மீனவர்களுக்கு ஏற்படும் அபாயங்களை குறைப்பதற்காக "கடல்" எனும் சேவையானது உருவாக்கப்பட்டுள்ளது. SMS மற்றும் குரல் செய்திகளின் மூலம் மீனவர்களுக்கு வானிலை மற்றும் ஏனைய எச்சரிக்கைகள் குறித்த இருப்பிட அடிப்படையிலான புதுப்பிப்புகளை வழங்க இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது SMS மற்றும் குரல் மூலம் பதிவு செய்யப்பட்ட மீனவர்களுக்கு சரியான நேரத்தில் வானிலை முன்னறிவிப்புக்களை வழங்குகின்றது. மேலும் சாத்தியமான வானிலை பேரழிவுகளுக்கு அவசர எச்சரிக்கைகள் (SMS மற்றும் குரல்) அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சேவை 2020 பெப்ரவரி 28ஆம் திகதி தங்காலை துறைமுகத்தில் இலங்கையின் பிரதமர் கௌரவ மஹிந்த இராஜபக்~ அவர்களால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. "கடல்"எனும் சேவை மீனவர்களுக்கு துல்லியமான மற்றும் இருப்பிட அடிப்படையிலான தகவல்களை வழங்குகின்றது. அங்கு உள்ளடக்கம் மீன்வள மற்றும் நீர்வள மேம்பாட்டு துறையினாலும் வானிலை ஆய்வு துறையிலும் வழங்கப்படுகின்றது.

இந்த கடல் எனும் சேவையின் அறிமுக நிகழ்வின்போது டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்கே கருத்து தெரிவிக்கையில், கடலோர மீனவ சமூகங்களின் உயிர்களை பாதுகாக்கும் முத்தொகுப்பு சேவையான "கடல்" எனும் சேவையின் மூலம் வசதிகள் வழங்கப்படுவதையிட்டு நாங்கள் பெருமிதம் கொள்கின்றோம். இந்த வானிலை எச்சரிக்கை மற்றும் எச்சரிக்கை சேவை இலங்கையின் மீனவர்களின் வாழ்க்கையை தொடர்ச்சியாக மேம்படுத்துவதற்கும் டயலொக் இன் நெறிமுறைகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றது. பேரழிவு அவசர எச்சரிக்கை வலையமைப்பு (DEWN) சேவை உட்பட நாம் முன்னர் இயக்கிய டிஜிட்டல் முறையில் உள்ளடக்கிய மற்றும் அணுகக்கூடிய தீPர்வுகளை போன்றது. முழு நாட்டிற்கும் முக்கியமான எச்சரிக்கைகளை வழங்குகின்றது.

இந்த சேவையினை மீள் வள சமூகத்திற்கு கொண்டு வருவதற்கு மீன்வள மற்றும் நீர்வளத்துறை டயலொக் உடன் கூட்டிணைந்ததையிட்டு பெருமிதம் கொள்கின்றது. பகல் படகு மீனவர்கள் மீன்வள சமூகங்களில் பெரும்பான்மையினராக காணப்படுகின்றமையினால் அவர்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது. முக்கியமான தகவல்களை வழங்குவதற்கு SMS மற்றும் குரல் அழைப்புக்கள் பயன்படுத்தப்படும் முதன் முறையாக இது கருதப்படுகின்றது என மீன்வள மற்றும் நீர்வளத் துறை இயக்குனர் பிரசன்ன கினிகே ஜனக குமார தெரிவித்தார்.

வானிலை தொடர்பான தகவல்களை வழங்குவதன் மூலம் இந்த சமூகங்களை பாதுகாப்பதற்கான கட்டளைகளை நிறைவேற்ற மீன்வளத்துறை போன்ற ஏனைய அரச நிறுவனங்களுக்கு வானிலை ஆய்வு துறை பெருமை கொள்வதுடன் தொழில்நுட்ப தளங்களை உருவாக்கிய டயலொக் நிறுவனத்திற்கு நாங்கள் நன்றிகளை கூற கடமைப்பட்டுள்ளோம்.

தகவல்கள் அவசியமான சமூகங்களுக்கு அவசியமான தகவல்களை வழங்குங்கள் பாவனையாளர்களுக்கு புவி இலக்கு விழிப்பூட்டல்களை அனுப்புவதன் மூலம் மிகவும் நம்பகமான தகவல்களை வழங்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகின்றோம் என காலநிலை மாற்றம் மற்றும் ஆராய்ச்சி பிரிவு இயக்குனர் அனு~h வருணகுலசூரிய தெரிவித்தார்.

இலவசமாக வழங்கப்படும் இந்த சேவைக்கு பதிவு செய்ய டயலொக் மொபைல் வாடிக்கையாளர்கள் 828 க்கு அழையுங்கள் அல்லது ACT என டைப் செய்து 828 க்கு SMS செய்யுங்கள். மேலும் MyDialog App ஊடாகவும் பதிவு செய்துக்கொள்ள முடியும்.