Doc990 சேவையானது லங்கா ஹொஸ்பிடல்ஸ் மருத்துவமனைக்கு முன்பதிவு வசதிகளை விரிவுபடுத்துகிறது.
2019 ஜூலை 5 கொழும்பு

(இடமிருந்து வலம்) லங்கா ஹோஸ்பிடல்ஸ் பி.எல்.சி, முதன்மை சந்தைப்படுத்தல் அதிகாரி - நிமல் ரத்னாயக்க, லங்கா ஹோஸ்பிடல்ஸ் பி.எல்.சி, குழு முதன்மை தகவல் அதிகாரி - கனிஷ்க குலசேகர, லங்கா ஹோஸ்பிடல்ஸ் பி.எல்.சி, குழு முதன்மை தகவல் அதிகாரி - பிரசாத் மெடவத்த, டிஜிட்டல் ஹெல்த் PVT, முதன்மை நிறைவேற்று அதிகாரி - அப்சரா விஜயவர்தன, டிஜிட்டல் ஹெல்த் PVT, தலைமை வியாபார அபிவிருத்தி அதிகாரி - டில்ஹான் ஜயதிலக்க, டிஜிட்டல் ஹெல்த் PVT, தொழில் அபிவிருத்தி முகாமையாளர் - நவோத ரத்னாயக்க,
இலங்கையின் முன்னணி டிஜிட்டல் சுகாதார நலன் சேவை வழங்குனரான Doc 990, லங்கா மருத்துவமனைகளில் அதன் முன்பதிவு சேவைகளை விரிவாக்குவதாக சமீபத்தில் அறிவித்தது. Doc 990 பாவனையாளர்கள் லங்கா மருத்துவமனைகளில் எளிதில் தங்கள் முன்பதிவுகளை செய்ய 990 என்ற எண்ணுக்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலமாகவோ, www.doc.lk என்ற இளையத்தளத்தின் மூலமாகவோ அல்லது Doc 990 மொபைல் App வழியாகவோ முன்பதிவுகளை செய்து கொள்ளலாம். (கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் Doc990 App ஐ தரவிறக்கம் செய்துகொள்ளலாம்)
Doc990 பாவனையாளர்கள் , இப்போது லங்கா மருத்துவமனையின் 600 க்கும் மேற்பட்ட ஆலோசகர்களைக் கொண்ட விரிவான வலையமைப்பை அணுகலாம். மேலும் பலவிதமான சிறப்புகளை உள்ளடக்கிய, விலை மலிவான மற்றும் உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சேவையினை அணுக முடியும். Doc990 இன் மருத்துவர்களை முன்பதிவுசெய்யும் இலகுவான இச்சேவையானது , தற்போது நாடு முழுவதும் 107 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் பெற்றிடமுடியும் என்பதோடு, சமூகத்தின் பல பிரிவினருக்கு விரிவான சுகாதார சேவைகளை பெறமுடிவதை உறுதி செய்கிறது.
இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பி.எல்.சி மற்றும் மூன்று முன்னணி தனியார் மருத்துவமனைக் குழுக்களான, ஆசிறி ஹோஸ்பிடல்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி, நவலோகா ஹோஸ்பிடல்ஸ் பி.எல்.சி மற்றும் சிலோன் ஹாஸ்பிடல்ஸ் பி.எல்.சி (Durdans) ஆகியன இலங்கையின் சுகாதாரத் துறைக்கு ஒரு டிஜிட்டல் முறையினை வழங்குவதன் மூலம் ஒருங்கிணைந்த மின் வணிகம் (e-commerce) , சுகாதார வழங்குனர்களுக்கான மருத்துவ நியமனம் போன்றவை இலங்கையின் டிஜிட்டல் சுகாதார பராமரிப்பு மதிப்பு சங்கிலியை விரிவுபடுத்துகிறது.