Body

டயலொக் அனுசரணையில் ஆசிய ரக்பி செவன்ஸ் இறுதிக் கட்டம் இந்த வார இறுதியில்

27 September 2019         Colombo

 

news-1

ஆசிய செவன்ஸின் கொழும்பு தொடருக்கான இலங்கை குழாம்,
(நிற்பவர்கள் இடமிருந்து) கவின் டிக்சன், ரீசா ரபாய்தீன், ஜனிந்து டில்ஷான், ஜேசன் திசானாயக்க, தன்ஷ தயான் (தலைவர்), தினுக் அமரசிங்க, தினுக் அமரசிங்க, சத்துர செனவிரத்ன, நிசோன் பெரேரா, இரோசன் சில்வா
(அமர்ந்து இருப்பவர்கள் இடமிருந்து) அனுராத ஹேரத், புத்திம பியரத்ன, சுதாரக்க திக்கும்புர, காவின்த கேசான்

அதிக விறுவிறுப்பினையும் உத்வேகத்தினையும் கொண்ட எதிர்பார்ப்பு மிக்க ஆசிய ரக்பி செவன்ஸ் போட்டிகள் இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குநரான டயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் செப்டெம்பர் 28 ஆம் மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

கடைசி இலங்கை சுற்றான ஆசிய ரக்பி செவன்ஸ் தொடர் Dialog Television, அலைவரிசை இலக்கம் 77 இல் நேரடி ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளதோடு ThePapare.com மற்றும் டயலொக் MyTV கைபேசி ஆப் ஊடாகவும் நேரடியாக காண முடியும். ஒக்டோபர் 28 சனிக்கிழமை பி.ப. 1.30 தொடக்கம் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளதோடு அடுத்த நாள் மு.ப. 10.00 க்கு போட்டிகள் ஆரம்பமாகும்.

ஆசியாவின் பலம்மிக்க அணியான ஜப்பான் தனது ஆண்கள் மற்றும் பெண்களுக்காக செவன்ஸ் பட்டத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு கடும் சவால் மிக்க ஹொங்கொங், சீனா, இலங்கை, தாய்வான், பிலிப்பைன்ஸ் மற்றும் ஏனைய எதிர்பார்ப்பு அணிகளுடன் போராடவுள்ளது. கொரியா மற்றும் சீனாவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி கொழும்பில் அதனை தொடர்வதற்கு எதிர்பார்த்துள்ளது.

இலங்கை தனது முதல் போட்டியில் 28ஆம் திகதி சனிக்கிழமை பி.ப. 2.50 க்கு தென் கொரியாவை எதிர்கொள்ளவுள்ளதோடு ஹொங்கொங்கிற்கு எதிரான இரண்டாவது போட்டி பி.ப. 6.38க்கு மின்னொளியில் நடைபெறவுள்ளது.

தேசிய செவன்ஸ் ரக்பி அணிக்கு Dialog Axiata அனுசரணை வழங்குவதோடு அது இலங்கை தேசிய கிரிக்கெட் அணி, கரப்பந்து மற்றும் வலைப்பந்து அணிகளுக்கும் பெருமையுடன் அனுசரணை வழங்குகிறது. நிறுவனமானது தங்கக் கிண்ண கரப்பந்து, தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட வலைப்பந்து தொடர்கள், ப்ரீமியர் லீக், பாடசாலை கிரிக்கெட் மற்றும் பராலிம்பிக் குழுவினால் நடாத்தப்படும் இராணுவ பரா விளையாட்டுகள், தேசிய பரா விளையாட்டு போட்டிகள் மற்றும் உலக பராலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான இலங்கை குழாம் ஆகியவற்றுக்கும் தனது அனுசரணையை வழங்குகிறது.