பாரம்பரிய மருத்துவத்திற்கு உதவி புரியும் மனிதாபிமான செயற்பாடு
21 October 2020 Colombo

ஒரு நாட்டின் பலத்தை அந்நாட்டில் வாழ்கின்ற மக்களின் பலத்தை கொண்டு மதிப்பிட முடியும். வறுமை எல்லோருக்கும் பொதுவானதாகும். ஆனாலும் வறுமையினையும், பற்றாக்குறையினையும் பொருட்படுத்தாது தமது கடைமையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல ஒருவர் தன்னை அர்ப்பணிப்பாராயின், அவர் பலம் வாய்ந்த ஒரு மனிதராவார். அவர் நாட்டுக்கு கடனற்றவர். பெருமைக்குரியவர்.
இவ்வாறான ஒருவர், டயலொக் அனுசரணையளிக்கும் மனிதாபிமான செயற்பாட்டின் ஊடாக அநுராதபுரம் திரப்பனை பிரதேசத்தில் இனங்காணப்பட்டார். அவர் சகல நோய்களுக்குமான ஆயர்வேத மருத்துவர் டி.பீ.ஜினதாஸ ஆவார்.
எமது பாரம்பரிய மருத்துவத்திலுள்ள மரபுகளை அவ்வாறே இன்றும் பின்பற்றி ஊரவர்களுக்கும், பிற பிரதேசத்தவருக்கும் சிகிச்சையளித்து வரும் இவர், புராதன வழங்கங்களில் ஒன்றான மருத்துவருக்கு நோயாளிகளால் வெற்றிலையில் வைத்து வழங்கப்படும் காணிக்கையை மனமகிழ்ச்சியோடு இன்றும் பெற்றுகொண்டு மருத்துவம் செய்யும் மருத்துவர் ஆவார்.
உரிஸ்பத்து ஒலியன்கே கெதர மருத்துவ பரம்பரையானது, இப்பிரதேசத்தில் மட்டுமல்ல இலங்கையில் பல பிரதேசங்களிலும் மருத்துவம் செய்த பரம்பரையாகும். இப்பரம்பரையில் ஐந்தாமவராக 1968 இல் ஆயுர்வேத மருத்துவம் தொடர்பாக கற்றுகொள்ள புறப்பட்ட ஜினதாஸ அவர்கள், இந்த சாஸ்த்திரத்தை மிகுந்த ஆர்வத்துடனும், மரியாதையுடனும் அனுகியதற்கான காரணம், அதனை தனது தொழிலாக மேற்கொள்வதற்காக மட்டுமல்ல, சமூக சேவையினையும் நோக்காக கொண்டாகும்.
ஆயுர்வேத மருத்துவத்தின் மகிமையை தனக்குள் தேக்கி வைத்து கொண்ட இவர், இம்மருத்துவத்தால் பிறர் பணம் உழைத்து கொண்டு இருக்கையில், சாதாரண மக்களின் நோய் நொடிகளை தீர்த்து அவர்களுக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருந்தார்.
ஆயுர்வேத மருத்துவத்தில் அனுபவமும் தேர்ச்சியும் பெற்ற பின், ஜினதாஸ அவர்கள் ஆயுர்வேத மருத்துவராக தன்னை பதிவு செய்து கொள்ள நினைத்தார். இதன்காரணமாக அவர், 1991 ஆம் ஆண்டு ஆயுர்வேத பரீட்சைக்கும் நேர்முக தேர்வுக்கும் தோற்றி, அதில் சகல நோய்களுக்குமான ஆயுர்வேத மருத்துவராக சிறப்பு சித்தி பெற்றார்.
நோயாளர்களின் நிலையை சோதித்து அவர்களுடன் உரையாடுவதன் மூலமாகவே நோயினை அடையாளம் கண்டு கொள்ளும் அசாத்திய திறமை கொண்ட ஜினதாஸ அவர்கள், குறைந்த வசதிகளுடன் தனது மருத்துவத்தை தொடரும் அதேவேளை, இம் மருத்துவ கலையை எதிர்கால தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதற்கும் அரும்பாடுபடுகின்றார். சகல நோய்களுக்குமான மருத்துவரான டி.பீ ஜினதாஸ அவர்கள் இங்கு பின்வருமாறு கருத்துரைத்தார். “ நான் 30 இலிருந்து 40 வருடங்களாக ஆயுர்வேத மருத்துவம் செய்து வருகிறேன். இதுவரையில் நான்கு சீடர்களையும் உருவாக்கியிருக்கிறேன். அதேபோன்று சகல நோய்களுக்குமான மருத்துவத்தையே நான் செய்து வருகிறேன். இவற்றையெல்லாம் நான் குறைந்தளவான வசதிகளுடனேயே செய்து வருகிறேன். குறிப்பாக மருந்துகளை செய்வதற்கும் மருந்துகளை களஞ்சியப்படுத்துவற்கும் என்னிடம் தனியாக அறைகள் கிடையாது. அதேபோன்று மருந்துகள் தயாரிக்கும் போது மருந்துகளை இடிப்பது மிகவும் சிரமமாகும். இன்றுவரை நான் கூலிக்குத்தான் மருந்து இடித்து கொள்கிறேன். இதற்கு இன்று இயந்திரங்கள் உள்ளன. அதேபோன்ற மருந்துகளை தயார் செய்து வைத்துகொள்ள வெண்கல பாத்திரங்கள் இன்று என்னிடம் இல்லை. இந்த வசதிகள் கிடைத்தால் நான் இன்னும் வெற்றிகரமான இத்துறையில் ஈடுபட முடியும். அதேவேளை, அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு மருத்துவம் செய்யவும் முடியும்.”
சமூக முன்னேற்றத்திற்காக தொடர்ந்தும் செயற்பட்டு வரும் டயலொக் நிறுவனம், தனது மனிதாபிமான செயல்பாட்டின் ஊடாக, இந்த ஆயுர்வேத மருத்துவர் தொடர்ந்தும் சிறப்பாக தனது மருத்துவ பணியை மேற்கொள்வதற்கான சூழலை உருவாக்கி தரும் பொருட்டு அவருக்கு உதவி செய்ய முன்வந்தது. இதில் முதலாவதாக, மனிதாபிமான செயல்பாட்டின் ஊடாக, இம்மருத்துவரின் வீட்டில் மருத்துவம் செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள கட்டிடம் பூர்த்தி செய்து கொடுக்கப்படும். அதுவரை இவரிடம் கைவசம் இல்லாத, நோயாளிக்கான படுக்கை, மருந்துகளை அரைக்கும் இயந்திரம், மருந்துகளை களஞ்சியப்படுத்துவதற்கான இறாக்கைகள், மருந்துகளுக்கான கண்ணாடி போத்தல்கள், நோயாளிகள் அமர்ந்திருப்பதற்கான இருக்கை வசதிகள் மற்றும் ஆயுர்வேத மூலிகை கன்றுகள் என்பனவற்றை வழங்கும் பணி டயலொக் நிறுவனத்தின் செயலணியினரின் ஒத்துழைப்பினால் மிகச் சிறப்பாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த அனைத்து வசதிகளோடும் முன்னரை விட வெற்றிகரமாக தனது பணியை இப்போது இவரால் தொடர முடியும்.
அறிவு எனப்படுவது உரிமையாகும். நிகழ் காலத்தின் அறிவாற்றல்தான் எதிர்காலத்தை வளமாக்குகிறது. இவ்வழியில் பயணிக்கும் ஜினதாஸ அவர்கள் தனது மருத்துவத்தை தாண்டி தனது அறிவையும் எதிர்கால சந்ததியினருக்கு எவ்வித கட்டணமும் அறவிடாமல் வழங்குவதற்கு முன்வந்துள்ளார். இதுவரையிலும் 10 மாணவர்களுக்கு தனது அறிவினை பெற்றுகொடுத்திருப்பதோடு, அதில் நால்வர் ஆயுர்வேத மருத்து பரீட்சையில் சித்தியடைந்து மருத்துவர்களாக கடைமையாற்றுகிறார்கள். இது தவிர இன்னும் இருவர் தற்போது இப்பரீட்சையில் தோற்றி வருகிறார்கள்.
பல வருடங்களாக சகல நோய்களுக்கும் மருத்துவம் செய்து, ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்களின் கண்ணீர் நிறைந்த முகத்தில் புன்னகை பூக்கச் செய்து, எங்கள் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவருக்கு, எங்களால் முடிந்த உதவியினை செய்வதற்கான நேரம் இதுவாகும்.