Body

தெற்காசியாவில் முதன் முறையாக டயலொக் ஐக்கெனிக்கில் நேரடியாக 5G அனுபவத்தைபெற்றுக்கொள்ள முடியும்

2019 ஏப்ரல் 2        

 

news-1

(வலமிருந்து இடம்) டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் பிரதான தலைமை நிறைவேற்ற சுபுன் வீரசிங்ஹே, இலங்கையின் மலேசியா உயர் ஸ்தானிகர் மேம்மையாளர் டான் யாங்க தாய், டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கௌரவ அஜித் P. பெரேரா, தொலைத்தொடர்பு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் கௌரவ ஹரின் பர்ணாந்து, ஆசிஆட்டா குழும Berhad நிறுவன நிறைவேற்று துணை தலைவர் மற்றும் தெற்காசிய பிராந்தியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கலாநிதி ஹன்ஸ் விஜயசூரிய மற்றும் டயலொக் ஆசிஅட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தொழில்நுட்ப அதிகாரி பிரதீப் அல்மேதா.

news-1

 

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனர் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, holographic remote music தயாரிப்பு, 360ᴼ 8K வீடியோ அழைப்பு, 360ᴼ 8K Live Virtual Reality செயற்படக்கூடிய வீடியோ ஸ்ட்ரீமிங் ஆகியவற்றுடன் holographic வீடியோ அழைப்பினை கொண்ட லைவ் 5G அனுபவ வெளியீட்டுடன் பிராந்தியத்தின் முதல் 5G பைலட் பரிமாற்றத்தை வெளியிட்டுள்ளது. AI வலுவூட்டப்பட்ட டிஜிட்டல் Twins பொறிமுறையினையும் ‘Robotic Arm’ 5G அனுபவத்தினையும் கொழும்பு வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

டயலொக், தெற்காசியாவின் முதலாவது நேரடி 5G இனை, தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ ஹரின் பார்னாண்டோ, டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கௌரவ அஜித் பி. பெரேரா மற்றும் மலேசியா மற்றும் இலங்கைக்கான உயர் ஆணையாளர் Tan Yang Thai ஆகியோரின் முன்னிலையில் ஏப்ரல் மாதம் 2ம் திகதி அங்குரார்ப்பம் செய்து வைத்தது. நேரடி 5G பைலட் பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்பங்கள் Huawei மற்றும் Ericsson 5G நிறுவனங்களினால் வலுவூட்டப்பட்டு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவுடன் இணைந்து இயக்கப்பட்டது.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துக்கொண்ட தொலைத்தொடர்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ ஹரின் பார்னாண்டோ கருத்தில் 5G மற்றும் உலக பயன்பாடுகளின் பல்வேறு திறன்களை காண்பிப்பதன் மூலம் எதிர்காலத்தை இனறே வழங்குவதன் மூலம் அவர்களின் உறுதிப்பாடானது சிறந்த முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. விரைவான இயக்கமயமாக்கலின் இந்த நாளிலும் வயதிலும் சிறந்த IT இலக்காக இருக்க வேண்டும் என்பதற்கான 5G படைப்புக்களின் திறனை பார்க்க எனக்கு வியப்பாக இருக்கிறது என தெரிவித்தார்.

டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கௌரவ அஜித் பி. பெரேரா தனது கருத்தில் இப்பிராந்தியத்தில் தொழில்நுட்ப அறிமுகம் மற்றும் விநியோகம் ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கை தொடர்ச்சியாக வழிநடாத்தப்படுகின்றது. இன்று வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை காண்பிப்பது உலக தொலைத்தொடர்பு நிலையத்தில் நாட்டின் தலைமைக்கு சான்றாக உள்ளது. மற்றும் சமூகத்தின் பன்முக பிரிவுகளுக்கான ஒரு செறிவான அனுபவத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் விரைவாக செயற்படுகின்றது என தனது கருத்தினை தெரிவித்தார்.

5G wireless வலையமைப்பு அறிமுகமானது 4வது தொழில்துறை புரட்சிக்கு வழிவகுக்கின்றது Bandwidth, Ultra Low Latency மற்றும் பாரிய இணைப்பு ஆகியவற்றை வழங்குதல் சாதாரண மக்களுக்கு அப்பாட்பட்ட தகவல் தொடர்புகளை இணைத்து இணைக்கப்பட்ட கணனிகளின் வலைப்பின்னலானது ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்வதன் மூலம் இணைக்க முடியும். மேலும் 3 Gbps க்கும் 5 Gbps க்கும் அதிகளவான வேகத்தினை கொண்ட 5G ஆற்றல் மற்றும் 100 MHz spectrum ஒரு மில்லி செக்கனில் அடையக்கூடிய குறைந்தளவிலான நேரத்தில் அதிகளவான திறன் ஆகியவை இன்டர்நெட் முழுவதும் மையமாக கொண்ட பயன்பாடு Internet of Things (IoT), Artificial Intelligence (AI), Mixed/Virtual Reality மற்றும் Robotics இந்த நிகழ்வில் டயலொக் ஆசிஆட்டா பில்எசி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்ஹே தனது கருத்தில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் முன்னிலையில் இருப்பது முதற்கொண்டு டயலொக் அறிநெறிகளில் ஒரு பகுதியாகும். மற்றும் தெறகாசியாவில் முதல் தடவையாக 5G செயலாற்றக்கூடிய தொழில்நுட்பங்களை நிரூபிப்பதையிட்டு நாங்கள் பெருமிதம் கொள்கின்றோம். Live 5G Showcase நிறுவனத்தின் எதிகாலத்தை தொடர்ந்து வழங்குவதற்கான ஒரு முன்மாதிரியின் சான்றாகும். இலங்கையர்களுக்கு இணைக்கப்பட்ட எதிர்காலத்தை தொடர விரும்புகிறோம் என தெரிவித்தார்.

ஏப்ரல் 3ம் திகதி முதல் 10ம் திகதி வரை கொழும்பு 2 இல் அமைந்துள்ள டயலொக் வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் https://social.dialog.lk/5g/ இல் பதிவு செய்வதன் மூலமும் 5G தொழில்நுட்ப பயன்பாடுகள் தொடர்பான சாத்தியக்கூறுகளின் எதிர்காலத்தை எதிர்கொள்ளல் தொடர்பான அனுபவங்ளை பெற்றுக்கொள்ள முடியும்.