டயலொக் மற்றும் இலங்கை கிரிக்கெட் இணைவில் T20 உலகக்கிண்ண 'ஸ்டிக்கர்' பிரசார பணிகள் முன்னெடுப்பு
ஒக்டோபர் 25, 2021 கொழும்பு
'அபே கொல்லோ' T20 உலகக்கிண்ண ஸ்டிகரை இலங்கை கிரிக்கெட்டின் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி உப்புல் நவரட்ண பண்டார அவர்கள் இலங்கை கிரிக்கெட் ரசிகர் ஒருவரது வாகனத்தில் ஒட்டுவதை காணலாம்.
இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட ஸ்டிக்கர் விநியோக பிரசாரத்தின் போதான சில காட்சிகளை காணலாம்.
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் அனுசரணையாளர்களும் இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களுமான டயலொக் ஆசிஆட்டா , இலங்கை கிரிக்கெட்டுடன் இணைந்து தேசிய கிரிக்கெட் அணியின் T20 உலகக் கிண்ண பிரசார பணிகளை முன்னிட்டு ரசிகர்களை அணிதிரட்டும் நோக்கில் நாடளாவிய ரீதியிலான 'ஸ்டிக்கர்' விநியோக பிரசாரமொன்றை தொடங்கியுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நமீபியாவிற்கு எதிராக நடைபெற்ற T20 உலகக் கிண்ண போட்டியின் ஆரம்பத் தோடு 'அப்பே கொல்லோ ' T20 உலகக் கிண்ணப் பாடலுடன் மேற்படி ஸ்டிக்கர் விநியோக பிரச்சாரமும் ஆரம்பமாகியது.
இந்த ஸ்டிக்கர் விநியோக பிரச்சார பணிகள் இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பமாகியதுடன் தகுதிகாண் சுற்றுப் போட்டிகள் முடிவடையும் வரையில் நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இப் பிரச்சார பணிகள் நடைபெறும். மேற்படி T20 உலகக்கிண்ண போட்டிகளுக்கான ஊடக அனுசரணையாளர்களாக 'சியத்த' ஊடக வலையமைப்பு உத்தியோகப்பூர்வ ஒலி - ஒளிபரப்பாளர்களாக செயற்படுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த இரண்டு நாட்களுள் மாத்திரம் சமூக ஊடகங்கள் - யூ டியூப்பில் இப்பாடல் 1 ஆம் இடத்தில் டிரென்டிங்கில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. டயலொக் பிராண்ட் அம்பாஸிடர்களான பாத்திய மற்றும் சந்துஷ் உட்பட ஒமாரியா, யொஹானி, சங்க தினெத், சஜித்தா, சானுக்க ஆகியோர் இப்பாடலை பாடியிருப்பதுடன் இப்பாடலின் தமிழ் மொழியிலான பாடலை மாதுவியும் சிறப்பு கலைஞர் ரோய் ஜெக்சனும் இணைந்து பாடியுள்ளனர் . பாடல் வரிகளை 'ட்ரைஎட்' அமைத்துள்ளது. இலங்கை அணி வீரர்களை வாழ்த்துவதற்காக ஒவ்வொரு இலங்கையர்களையும் ஒன்றிணைக்கும் நோக்கில் டயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் மேற்படி T20 உலகக் கிண்ணப் பாடல் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
'அப்பே கொல்லோ' T20 உலகக் கிண்ண பாடலுக்கான லிங்க் - https://www.youtube.com/watch?v=LH7eEN7SrYs