Body

Dialog Innovation Challenge இன் அடுத்தகட்ட இறுதிப்போட்டியாளர்களை டயலொக் அறிவிக்கிறது

மாபெரும் இறுதிப்போட்டி இச்சனிக்கிழமை ஒளிபரப்பாகிறது

2024 செப்டம்பர் 04         கொழும்பு

 

Dialog Customers Contribute to Little Hearts

மேலுள்ள புகைப்படத்தில் Dialog Innovation Challenge-இன் இரண்டாம் சுற்று இறுதிப்போட்டியாளர்கள்; முதல் நிரை - Cubic, BabyChart, இரண்டாம் நிரை - Shop2Message, WattWise

இலங்கையின் #1 இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, Dialog Innovation Challenge மாபெரும் இறுதிப்போட்டிக்கான அடுத்த நான்கு இறுதிப்போட்டியாளர்களையும் அறிவித்தது. இலங்கை மக்கள், வணிகம் மற்றும் சமூகங்களின் வாழ்வை நேர்மறையான விதத்தில் மாற்றியமைக்கும் பொருட்டு புத்தாக்கமிக்க டிஜிட்டல் தீர்வுகளை நாடளாவிய ரீதியில் கண்டறிவதே இந்த செயற்றிட்டத்தின் நோக்கமாகும். இந்த செய்தி உள்நாட்டு மக்களின் முக்கிய தேவைகளை தீர்த்து அர்த்தமுள்ள டிஜிட்டல் முன்னேற்றத்தை அளிப்பதற்காக டயலொக் காட்டும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இது எடுத்துக்காட்டுகிறது.

புதிதாக தெரிவான இறுதிப்போட்டியாளர்களில் Cubic எனும் IoT அடிப்படையிலான மொபைல் செயலி (App), BabyChart எனும் சிசு வளர்ச்சியை கண்காணிக்கும் நூலிற்கான ஒரு மாற்று டிஜிட்டல் தீர்வு, Shop2Message எனும் சிறு அளவிலான கடைகளுக்கு பண்டங்களை கடனுக்கு பெறுதல் மற்றும் தவணை முறை கட்டணங்களை சீரிய முறையில் பேணும் ஒரு செயலி, WattWise எனும் பயனர்களின் மின்சக்தி பாவனை குறித்து துல்லியமான தகவல்களை அளித்து அவர்களது மின்கட்டணங்களை வினைத்திறன்மிக்க முறையில் மேலாண்மை செய்ய செயற்கை நுண்ணறிவின் துணை கொண்டு இயங்கும் ஒரு செயலி ஆகியன அடங்கும்.

இவர்கள் இதற்கு முன் தெரிவான இறுதிப்போட்டியாளர்களான, SeaLanka-இன் செயற்கை நுண்ணறிவினால் இயங்கும் ஒரு மீன்பிடி வலயத்தை கணிக்கும் செயலி, BODO-வின் விடுதி (Hotel) முன்பதிவு மற்றும் முகாமைத்துவ மென்பொருள் அமைப்பு, AudiPhix-இன் ஒலித்திறன் செயலாக்கக் குறைப்பாட்டுக்கான செயலி, FlashGuard-இன் ஒளியுணர் வலிப்பு தடுப்புக்காக வடிவமைக்கப்பட்ட Smart கண்ணாடிகள், Smart Aqua-இன் இறால் வளர்ப்போருக்கான IoT தீர்வு ஆகிய அணிகளுடன் இணைந்துகொள்வர். ஒவ்வொரு இறுதிப்போட்டியாளரும் அவர்களது புத்தாக்கமான அணுகல், நிலைத்து வளரும் தன்மை (scalability), இலங்கையர்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே தெரிவு செய்யப்படுகின்றனர். இவர்களை தெரிவு செய்யும் நடுவர் குழாத்தில் துறையில் கைதேர்ந்த வல்லுனர்களான கலாநிதி. ரமேஷ் சண்முகநாதன், நிறைவேற்று துணைத்தலைவர் மற்றும் குழும பிரதம தகவல் அதிகாரி, John Keels குழுமம்; ஷஷி கண்டம்பி, தேசிய சேமிப்பு வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி; ஷெரின் காதர், Nations Trust Bank PLC இன் தலைவர்; ரேணுகா பெர்னாண்டோ, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம டிஜிட்டல் சேவைகள் அதிகாரி மற்றும் Dialog Finance பிஎல்சியின் தலைவர்; அசேல பெரேரா, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம தகவல் அதிகாரி; ரங்கா காரியவசம், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம தொழில்நுட்ப அதிகாரி, விரங்க செனவிரத்ன, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் தளங்களில் வணிக தலைவர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

போட்டி அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்கையில் பங்கேற்பாளர்களுக்கு டயலொக் அதன் பங்காளர்களுடன் இணைந்து ஒழுங்குபடுத்தும் இலக்குடன் கூடிய செயலமர்வுகளின் வழியாக அனுகூலங்களை பெற்றிட முடியும். இந்த செயலமர்வுகள், அவர்களின் தீர்வுகளை மேலும் மேம்படுத்தவும், தொலைக்காட்சி ஒளிபரப்புகளின் போது நிபுணர்களிடமிருந்து முக்கியமான பின்னூட்டங்களை பெறுதலையும் நோக்கமாகக் கொண்டே அளிக்கப்படுகின்றன. இறுதி சுற்றில் உள்ளவர்கள், ரூபாய் ஐந்து மில்லியன் பரிசுக்குவியல் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளுக்கான அணுகல், முன்னணி தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைப்புகளின் தொடர்ச்சியான வழிகாட்டுதல், மேலும் ரூ. 500 மில்லியன் DIF (Digital Innovation Fund) முதலீட்டு நிதியின் ஒரு பாகத்தை வெல்லும் வாய்ப்பு ஆகியவற்றிற்காகப் போட்டியிடுகின்றனர்.

பலத்த எதிர்பார்ப்புகளின் மத்தியில் Dialog Innovation Challenge மாபெரும் இறுதிப்போட்டி செப்டெம்பர் 7ந்திகதி சனிக்கிழமை பி. ப. 10:30 மணிக்கு TV தெரணவிலும், செப்டெம்பர் 8ந்திகதி ஞாயிற்றுக்கிழமை பி. ப. 6:30 மணிக்கு DTV Channel One-இலும் ஒளிபரப்பாகவுள்ளது. நம்மை வியப்பில் ஆழ்த்தும் அற்புதமான கண்டுபிடிப்புகளை களத்தில் காணத்தவறாதீர்கள்! மேலதிக தகவல்களுக்கு https://ic.dialog.lk ஐ பார்வையிடுங்கள்.