Body

டயலொக் ஆசியா ரக்பி செவன்ஸ் தொடர் 2021

கொவிட் -19 காரணமாக துபாயில் இடம்பெரும் ஆசியா 7S தொடரின் கொழும்பு லெக் தொடருக்கான ஸ்பான்சர்ஷிப்

November 1, 2021         Colombo

 

Qais A. Al Dhalal, President of Asia Rugby

கைஸ் ஏ. அல் தலால், ஆசிய ரக்பி தலைவர்

இலங்கையின் முன்னணி தொலைதொடர்பாடல் சேவைகள் வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பீஎல்சி ஆனது சர்வதேச அரங்கில் கால் பதித்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் 2021 நவம்பர் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளஇ அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற போட்டியான ஆசிய ரக்பி செவன்ஸ் தொடரின் துபாய் போட்டிகளுக்கு பிரதான அனுசரணை வழங்க முன்வந்துள்ளது. .

2015 ஆம் ஆண்டு முதல், கொழும்பு ரெஸ்கேஸ் மைதானத்தில் பாரம்பரியமாக விளையாடப்பட்டு வருகின்ற ஆசிய ரக்பி செவன்ஸ் தொடரின் இலங்கைப் போட்டிக்கு டயலொக் ஆசிஆட்டா அனுசரணை வழங்கியுள்ளது. ஆசியா ரக்பி செவன்ஸ் தொடரின் இலங்கை போட்டி கடைசியாக 2019 இல் கொழும்பில் விளையாடப்பட்டதுடன், கொவிட்-19 தொற்றுநோய் பரவ ஆரம்பித்ததில் இருந்து இது விளையாடப்படவில்லை. எனவே ஆசியா ரக்பி செவன்ஸ் தொடர் 2021 துபாயில் நடத்தப்பட உள்ளது, இது உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற ஆசியா முழுவதும் விளையாடப்படும் போட்டியின் மூன்று பாரம்பரிய சுற்றுக்களின் உச்சமாக இருக்கும்.

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் எதிர்வரும் நவம்பர் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள 2021 ஆம் ஆண்டுக்கான ஆசிய ரக்பி செவன்ஸ் தொடரின் அனுசரணையாளராக தொடர்ந்து ஆதரவளிக்கும்.

“ஆசிய ரக்பி செவன்ஸ் தொடர் 2021 போன்ற சிறப்பு மிக்க போட்டித் தொடரின் பிரதான அனுசரணையாளர்களாக செயற்பட இலங்கை நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை கௌரவ அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார். “ஆசிய ரக்பி, அதன் பிரதான அனுசரணையாளரான டயலொக் ஆசிஆட்டா மற்றும் எங்கள் சொந்த வீரர்கள் இந்தப் போட்டியில் களம் இறங்கத் தயராகும் நிலையில், அனைத்தும் சிறப்பாக அமையட்டும் என இச்சந்தர்ப்பத்தில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

"டயலொக் ஆசியா ரக்பி செவன்ஸ் தொடர் 2021க்கான ஆசிய ரக்பி மற்றும் டயலொக் இடையேயான அற்புதமான அனுசரணை ஒப்பந்தத்தை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று ஆசியா ரக்பியின் தலைவர் கைஸ் ஏ. அல் தலால் அவர்கள் கூறினார்.

“2015 ஆம் ஆண்டு முதல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய ரக்பி செவன்ஸ் தொடரின் கொழும்பு போட்டிக்கு டயலொக் அனுசரணை வழங்கி வருகிறதுஇ மேலும் அனுசரணை வழங்குவதற்கான வாய்ப்பை வழங்கிய ஆசிய ரக்பிக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும தலைமை நிர்வாக அதிகாரியான சுபுன் வீரசிங்ஹ அவர்கள் தெரிவித்தார்.

இலங்கை ரக்பி ரசிகர்கள் டயலொக் ஆசிய ரக்பி செவன்ஸ் தொடர் 2021 போட்டிகளை நேரலையாக ThePapare.com மற்றும் Dialog ViU மொபைல் App மூலம் கண்டு களிக்க முடியும்.