Body

“Best of டயலொக் ரிதி ரயக்” 31 ஆம் திகதி இரவு 8.30 மணிக்கு சுவர்ணவாஹியில்

2020 டிசம்பர் 30        கொழும்பு

 

Dialog Mobile Postpaid Power Plan

“Best of டயலொக் ரிதி ரயக்” வெளியீட்டு நிகழ்வின் போது பரிசுக்கான காசோலை வழங்கி வைக்கபட்ட தருணம். இடமிருந்து வலமாக - ரங்கன த சில்வா அவர்கள்; - நிகழ்ச்சி பணிப்பாளர், சுவர்ணவாஹினி, சுதேவ ஹெட்டிஆராச்சி – நிறைவேற்று பணிப்பாளர், ஊடக EAP வலையம், கி~{ கோமஸ் - சினெஸ்டார் மன்றத்தின் பணிப்பாளர் குழுவின் உறுப்பினர், மூத்த கலைஞர் ரவீந்ர ரன்தெனிய அவர்கள், அமலி நாணாயக்கார – குழும தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி - டயலொக் ஆசிஆட்டா, பிஎல்சி, கலாநிதி ஜயந்த தர்மதாஸ – சினெஸ்டார் மன்றத்தின் தலைவர், மூத்த கலைஞர் மாலினி பொன்சேகா அவர்கள், மூத்த நடன ஆசிரியர் சன்ன விஜேவர்தன அவர்கள், ஹர்ச சமரநாயக்க – சிரே~;ட பொது முகாமையாளர் - வர்த்தக மற்றும் ஊடக பிரிவு - டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி

வீரர்களையும், வில்லன்களையும், காதலர்களையும் வெள்ளித் திரையில் பிரதிபலிக்கச் செய்து, திரை வானில் மின்னிடும் நட்சத்திரங்களுக்கு பெரும் பலமாக இருந்து, இலங்கை இரசிகர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்திய சினெஸ்டார் மன்றம், டயலொக் நிறுவனத்தோடு இணைந்து வருடந்தோறும் வழங்கும் “டயலொக் ரிதி ரயக்” கலைநிகழ்ச்சி, இம்முறை “Best of டயலொக் ரிதி ரயக்” எனும் பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய கோவிட் 19 நிலைமையின் காரணமாக கடந்த நிகழச்சிகளை போன்று இந்நிகழச்சியினை நேரடியான நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யமுடியாமல் போனதால், கடந்த ஐந்து வருடங்களாக டயலொக் நிறுவனத்தின் அனுசரணையோடு இடம்பெற்ற ரிதி ரயக் நிகழ்ச்சிகளின் மனம் கவர் அம்சங்களும், இந்நிகழ்ச்சிகள் இடம்பெற்ற வேளையிலும் மற்றும் பயிற்சியின் போதும் கலைஞர்களுக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவங்களையும் பார்வையாளர்களோடு பகிர்ந்து கொள்ள உள்ளதோடு, குறிப்பிட்ட நிகழ்வை குறிப்பிட்ட கலைஞர்களே சமர்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்கவர் மற்றும் கேளிக்கை நிறைந்த “Best of டயலொக் ரிதி ரயக்” டிசம்பர் 31 ஆம் திகதி இரவு 8.30 மணிக்கு சுவர்ணவாஹினி தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிப்பரப்புச் செய்வதற்கு ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை இரசிகர்களுக்கு புதிய அனுபவத்தையும், தமது விருப்பத்துக்குரிய கலைஞர்களை பற்றி தெரிந்து கொள்ளவும், அவர்களின் மனம் கவர் கலைநிகழ்ச்சியை கண்டு இரசிக்கும் வாய்ப்பை பெற்று தரும் வகையிலும் வடிவமைக்கப்பட்ட “டயலொக் ரிதி ரயக்” கலை நிகழ்ச்சியானது, இலங்கை கலைநிகழச்சிகளில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துகொண்ட தனித்துவமிக்க கலைநிகழ்ச்சியாகும். “டயலொக் ரிதி ரயக்” கலை நிகழச்சியானது, குறிப்பாக வருடத்தின் சிறந்த கலைநிகழ்ச்சிகளின் பட்டியலில் முதலிடத்தை பெற்றுகொண்டுள்ளதோடு, ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 31 ஆம் திகதி இரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுகொண்ட ஒரே ஒரு தொலைக்காட்சி கலைநிகழ்ச்சியாகும்.

கோவிட் 19 உலகளாவிய தொற்று காரணமாக இம்முறை இந்நிழ்ச்சி நேரடியாக இடம்பெறவில்லை என்றாலும் டயலொக் நிறுவனமானது திரை நட்சத்திரங்களின் சுகாதாரம் மற்றும் ஆயுள் காப்புறுதிக்கான நன்கொடை தொகையான 3 மில்லியன் ரூபாய்களை சினெஸ்டார் மன்றத்திடம் வழங்கியது. தேசிய திரைப்படத் தொழிற்துறைக்கும், மக்களின் இரசனைக்கும் இவர்கள் வழங்கும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இந்த நன்கொடையானது, டிசம்பர் 15 ஆம் திகதி நவலோக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது சினெஸ்டார் மன்றத்திடம் வழங்கி வைக்கப்பட்டது. அத்தோடு, டயலொக் நிறுவனமும் சினெஸ்டார் மன்றமும் இணைந்;து, நாட்டில் மகிழ்ச்சி கடலை உருவாக்கிய உரிமையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 300 கலைஞர்களுக்கான டயலொக் நிறுவனத்தின் சிறப்பு பாராட்டு பரிசுகளும் குறியீட்டு முறையில் வழங்கி வைக்கப்பட்டன.

கலைநிகழ்ச்சிக்கும் அப்பாற்பட்ட இந்த சமூக நலத்திட்டம் தொடர்பாக முதுபெரும் கலைஞர் ரவீந்ர ரன்தெனிய அவர்கள் இவ்வாறு கருத்துரைத்தார். “பிறரை எண்ணி நாம் கருமம் ஆற்ற வேண்டும் என்று இந்த உலகளாவிய தொற்று எமக்கு பாடம் புகட்டியுள்ளது. இதனை நடைமுறைபடுத்திய நிகழ்ச்சியாக நான் “டயலொக் ரிதி ரயக்” நிகழ்ச்சியை கருதுகிறேன். திரை நட்சத்திரங்களுக்கு தெம்பூட்டும் இந்நிகழ்ச்சியை டயலொக் நிறுவனத்தின் ஆதரவோடு எம்மால் கண்கவர் விதத்திலும், கவர்ச்சிகரமாகவும் செய்வதற்கு வாய்ப்பாக இருக்கின்றது. இதனடிப்படையில், 350 க்கும் மேற்பட்ட எமது சக கலைஞர்கள் நன்மையடைந்துள்ளார்கள். இச்செயற்பாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து எப்போதும் எம்மோடு ஒத்துழைக்கும் டயலொக் நிறுவனத்திற்கு அனைத்து கலைஞர்களின் சார்பாகவும் நான் எனது நன்றியினை தெரிவத்துகொள்கிறேன்”

சினெஸ்டார் மன்றத்தின் பணிப்பாளர்கள் குழுவின் உறுப்பினர் கி~{ கோமஸ் இந்நிகழ்ச்சி தொடர்பாக பின்வருமாறு கருத்து தெரிவித்தார். “ இலங்கை இரசிகர்களின் மனம் கவர் கலைஞர்களின் திறமையினை மக்கள் மத்தியில் கொண்டு சென்று அதனூடாக அவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை பெற்றுதரவே நாங்கள் டயலொக் ரிதி ரயக் நிகழ்ச்சியினூடாக எதிர்ப்பார்க்கிறோம். இவ்விடத்திலே நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புவது என்னவென்றால், டயலொக் நிறுவனமானது தனது நிறுவன வரையறைகளுக்கும் அப்பாற் சென்று, நிகழ்ச்சி இடம்பெறாத இந்த தருணத்தில் கூட திரை நட்சத்திரங்களின் வாழ்க்கையினை கருத்தில் கொண்டு தனது நிதியினை சினெஸ்டார் மன்றத்திடம் ஒப்படைத்துள்ளது. இது வணிகத்தை தாண்டிய சகோதர உறவின் உயர்ச்சியாகும். அதற்காக, இலங்கை வாழ் திரைப்பட இரசிகர்கள் அனைவரின் சார்பிலும், சினெஸ்டார் மன்றத்தின் சார்பிலும் நான் எனது நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்.”