Body

டயலொக் ஆசிஆட்டா ‘Top 50’ WIM இன் தொழில்முறை மற்றும் தொழில் பெண்கள் விருதுகளுக்கு 2வது ஆண்டாகவும் அனுசரணை வழங்குகின்றது.

பெண்கள் தங்கள் முழு திறனை அடைய ஊக்குவிக்கின்றது.

ஜனவரி 25, 2022         கொழும்பு

 

Award for Game Changer of the Year

Good Life X Founder நிறுவனர் பிரதம நிறைவேற்று அதிகாரி ரந்துல டி சில்வாவிற்கு, - டயலொக் எண்டர்பிரைஸ் குழு தலைமை அதிகாரி நவின் பீரிஸ் அவர்களால் இந்த ஆண்டின் Game Changer க்கான விருது வழங்கப்பட்டது.

மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் தொழில்துறைகளில் உள்ள அதி திறன் கொண்ட தலைவர்களை இணங்கண்டு கொண்டாடும் வகையில், இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, 11வது பதிப்பான 'Top50' Professional மற்றும் Career Women விருதுகளுக்கு மீண்டும் பிளாட்டினம் அனுசரணையாளராக பெண்கள் மேலாண்மை (WIM) மற்றும் IFC-DFAT பெண்கள் வேலை திட்டத்தின் கீழ் உள்ள சர்வதேச நிதி கழகத்துடன் கைகோர்த்துள்ளது..

மரபுகளை அங்கீகரித்தல் மற்றும் மதிப்பிடுதல் என்ற வகையில் மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், வங்கி மற்றும் நிதி, விருந்தோம்பல், ஊடகம், சட்டம், மற்றும் விநியோகச் சங்கிலி போன்ற பல்வேறு தொழில்களில் சாதனை படைத்த 470 க்கும் மேற்பட்ட வெற்றியாளர்களை விருது வழங்கும் அமைப்பு அங்கீகரித்துள்ளது. ‘Top50’ நிபுணத்துவ மற்றும் தொழில்சார் பெண்கள் விருதுகள், ஊழியர்கள், தொழில்முனைவோர் மற்றும் வணிகத் தலைவர்கள் என வெற்றிகரமான மாற்றத்தைக் கொண்டு வருவதில் பெண்கள் வகிக்கும் குறிப்பிடத்தக்க பங்கை நிரூபிக்கிறது. பாலின சமத்துவம் என்பது சமூக மற்றும் தார்மீக கட்டாயம் மட்டுமல்லாது வணிக முன்னேற்றத்ததையும் நிரூபிக்கிறது.

டயலொக் நிறுவனத்தில் பெண்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றிபெற அவர்களுக்கு தேவையான ஆதரவான தளங்களை வழங்குவதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதன்படி, பெண்களின் நலன் மற்றும் வலுவூட்டலுக்கான டயலொக் நிறுவனத்தில் அர்ப்பணிப்புக்கு இலவச, மும்மொழி தளமான தோழி (Yeheli.lk/Thozhi.lk) ஒரு எடுத்துக்காட்டு ஆகும், இது இலங்கையின் ஒரே தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் ஆலோசனை சேவையாகும். பாதுகாப்பான மற்றும் நம்பகமான முறையில் இந்த தளத்தில் உள்ள நிபுணர்கள் மூலம் பல முக்கியமான தலைப்புகளைப் பற்றி அறியந்துக்கொள்ள முடியும். இலங்கையின் மகளிர் தேசிய கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை தேசிய கூடைப்பந்து, சிரேஷ்ட கூடைப்பந்து மற்றும் கனிஷ்ட கூடைப்பந்து அணிகளின் பெருமைமிகு ஆதரவாளராக டயலொக் திகழ்வதுடன், இந்நிறுவனம் தேசிய மற்றும் கனிஷ்ட கூடைப்பந்து போட்டிகளோடு நெருங்கிய தொடர்பையும் கொண்டுள்ளது. வர்த்தக தூதர்களான உமரியா சின்ஹவன்சா, ஸ்டீபனி சான்சோனி மற்றும் சாமரி அட்டப்பட்டு ஆகியோருடன் இணைந்து பெண்களுக்கும் அதிகாரமளிக்கும் கலாச்சாரத்தை உருவாக்குகிறது.

மார்ச் 2011 இல் WIM ஆல் தொடங்கப்பட்ட, The Professional மற்றும் Career Women Awards’ ஊடகங்கள் மூலம், அவர்களின் தொழில், வணிகம் அல்லது அன்றாட வாழ்வில் வியக்க வைக்கும் சாதனைகள் மூலம் தங்களைச் சுற்றியுள்ளவர்களை ஊக்குவிக்கும் குறிப்பிடத்தக்க பெண்களின் சாதனைகளைக் கொண்டாடுகிறது. ஆண்டு விழாவானது பெண்கள் சமமாக கொண்டாடப்படும் ஒரு எழுச்சியூட்டும் மற்றும் உணர்ச்சிகரமான விருது விழாவாகும்.