Body

நாட்டின் நாளைய வெற்றியாளர்களை வலுப்படுத்த “டயலொக் பெருஞ்சமர் பருவம்” தொடங்கியது

2024 பிப்ரவரி 29         கொழும்பு

 

“Dialog Big Match Season” launched to Power Champions of Tomorrow

முன் வரிசை: அந்தந்த பாடசாலைகளை சேர்ந்த அணித்தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் 2 ஆம் வரிசை இடமிருந்து வலமாக: அந்தந்த பாடசாலைகளை சேர்ந்த பொறுப்பாசிரியர்கள், உப அதிபர்கள், அதிபர்கள், உப காப்பாளர்கள் மற்றும் காப்பாளர்கள், இவர்களுடன் டயலொக் அதிகாரிகள்

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, நாட்டின் நாளைய வெற்றியாளர்களுக்கு வளமூட்டும் தமது டயலொக் பெருஞ்சமர் பருவம் முன்னெடுப்பை வெளியிட்டனர். பாடசாலை கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் தோன்றிய இது, பள்ளி மைதானங்களில் துளிர்விடும் நாட்டின் நாளைய கிரிக்கெட் நட்சத்திரங்களை அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி அடியெடுத்து வைக்க தேசிய அளவிலும் சர்வதேச மட்டத்திலும் கொடிகட்டி பறக்கச்செய்யும் உந்துசக்தியாய் விளங்குகிறது.

மார்ச் மாதம், இலங்கையின் பாடசாலைகளில் பயிலும் மாணவர்களும் பழைய மாணவர்களும் கிரிக்கெட் மீது தாம் கொண்ட தீராக்காதலை கொட்டித்தீர்க்க ஒன்றுகூடுவதற்கு பெயர்பெற்ற மாதம். இந்த பருவத்தில் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி ஏழு பெருஞ்சமர்களுக்கு பெருமைமிகு அனுசரணையாளராக உள்ளது, 14 பாடசாலைகள், இவை ஒவ்வொன்றும் இலங்கையின் செழுமைமிக்க, திறமை வாய்ந்த, அர்ப்பணிப்பு மிகுந்த கிரிக்கெட் பாரம்பரியத்தின் எடுத்துக்காட்டுகளாகும்.

"பெருஞ்சமர் பருவம் இலங்கையின் விளையாட்டு பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும், இந்த பெரும் கிரிக்கெட் கொண்டாட்டத்தை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இது எதிர்காலத்தில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வெற்றியாளர்களை உருவாக்குகிறது," என்று டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி லசந்த தேவரப்பெரும கருத்து தெரிவித்தார். மேலும் தொடர்ந்த அவர் "அனைத்து அணிகளுக்கும், வீரர்களுக்கும் உற்சாகமூட்டும் கிரிக்கெட் பருவத்திற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, மார்ச் 7 முதல் 9ம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறும் உலகளவில் இரண்டாவது நீண்ட பெரிய போட்டியான 145வது Battle of the Blues' போட்டிக்கு தொடர்ந்து 19வது முறையாக அனுசரணை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது. கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் கொழும்பு புனித பேதுரு கல்லூரி இடையே நீடிக்கும் போட்டியை வெளிப்படுத்தும் 90வது ‘Battle of the Saints' போட்டிக்கும் நிறுவனம் தனது அனுசரணையை வழங்குகிறது. இந்த இரண்டு முன்னணி கத்தோலிக்க பள்ளிகளுக்கிடையேயான இந்த மோதல் மார்ச் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறும். வட பிராந்தியத்திற்கு தங்கள் ஆதரவை நீட்டிக்கும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இரண்டு முக்கியமான பெருஞ்சமர்களை ஆதரிக்கும். யாழ்ப்பாண மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாண பரி. யோவான் கல்லூரிகளுக்கு இடையேயான வடக்கின் சமர் என அழைக்கப்படும் 117வது ' Battle of the North ' மற்றும் புனித பற்றிக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாண கல்லூரி இடையேயான பொன்னணிகளின் சமர் என அழைக்கப்படும் Battle of the Golds ஆகியனவே அவை. இவற்றில் Battle of the North மார்ச் 7, 8, 9 ஆம் திகதிகளில் யாழ்ப்பாண மத்திய கல்லூரி மைதானத்திலும், 107வது Northern Battle of the Golds மார்ச் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் புனித பேட்ரிக் கல்லூரி மைதானத்திலும் நடைபெறும்.

மார்ச் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் டிரினிட்டி கல்லூரி தனது சொந்த மண்ணை சேர்ந்த போட்டியாளர்களான புனித அந்தனி கல்லூரியை 105வது Upcountry Battle of the Blues போட்டியில் டயலாக் அனுசரணையுடன் எதிர்கொள்ளும் நிலையில், அமைதியின் வடிவமான கண்டியின் மலைகள் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பில் அதிரும். டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி மேற்கு மாகாணத்தில் இரண்டு Battles of the Golds போட்டிகளுக்கு தனது அனுசரணையை நல்குகிறது. மொரட்டுவ புனித செபஸ்டியன் கல்லூரி மற்றும் மொரட்டுவ பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கல்லூரி இடையேயான மோதலும், பாணந்துறை ஸ்ரீ சுமங்கல கல்லூரி மற்றும் மொரட்டுவ மகா வித்தியலாயம் இடையேயான மோதலும் இதில் அடங்கும். மொரட்டுவவில் நடைபெறும் 74வது Battle of the Golds மார்ச் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் பி. சாரா மைதானத்திலும், பாணந்துறையில் நடைபெறும் 72வது Battle of the Golds மார்ச் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மொரட்டுவ டீ சொய்ஸா மைதானத்திலும் நடைபெறும்.

இந்த கொண்டாடப்படும் போட்டிகள் எதிர்கால விளையாட்டு நட்சத்திரங்களுக்கான தளமாக அமையும். வீரர்கள் இந்த உற்சாகமூட்டும் பயணத்தைத் தொடங்கும் நிலையில், டயலாக் ஆசிஆட்டா பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது. விறுவிறுப்பான போட்டி மற்றும் வெற்றிகரமான பயணத்தை மாணவர்கள் மத்தியில் எதிர்பார்க்கிறது.

நேயர்கள் Dialog Television 126வது அலைவரிசையான ThePapare TVயில் அல்லது ThePapare.com அல்லது Dialog ViU app மூலம் நேரலை ஒளிபரப்பு மூலம் அனைத்து போட்டிகளையும் உயர் துல்லியத்தில் (HD) பார்க்கலாம்.

டயலொக் ஆசிஆட்டா இலங்கை தேசிய கிரிக்கெட், கரப்பந்து, வலைப்பந்து மற்றும் ஈஸ்போர்ட்ஸ் அணிகளுக்கான பெருமைமிகு அனுசரணையாளராக செயற்பட்டு வருவதுடன், இலங்கை பகிரங்க கொல்ஃபிற்கு பிரதான அனுசரணையாளராக திகழ்வதுடன், பராலிம்பிக் விளையாட்டுகளில் தேசிய பரா விளையாட்டுகளுக்கும் உலக பரா விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் இலங்கை அணிக்கும் அனுசரணை அளிக்கிறது. இவற்றுடன் நாளைய வெற்றியாளர்களை வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம், தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட வலைப்பந்து போட்டிகள், பாடசாலை ரக்பி ஆகியவற்றிற்கு தொடர்ந்து அனுசரணை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.