டயலொக் " எதிர்காலம் இன்றே" கனவுகளை நனவாக்கி, 2025 ஆம் ஆண்டை வரவேற்கும் முகமாக இலங்கையின் முதல் ட்ரோன் நிகழ்ச்சியை நடத்தியது.
2025 கொழும்பு 02 கொழும்பு
இலங்கையின் #1 இணைப்பு வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, 2025 ஆம் ஆண்டின் வரவேற்புக்கான நாட்டின் முதல் ட்ரோன் கவுண்ட்டவுன் நிகழ்ச்சியை நடத்தி, சாதனைப் படைத்துள்ளது. ITN-னின் 31ஆம் இரவுத் திருவிழாவுடன் இணைந்து கொழும்பின் காலி முகத்திடல் (Galle Face Green) பகுதியில் நட ந்த, இந்த கண்கொள்ளாக் காட்சி, 400 ட்ரோன்களால் கொழும்பு வானத்தை ஒளியூட்டியதுடன், 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளவர்களுக்கும் காட்சி அளிக்கப்பட்டது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை 150,000 இற்கும் மேற்பட்ட நேரடி பார்வையாளர்கள் கண்டு மகிழ, 1.2 கோடி இலங்கையர்களையும் ஈர்த்தது. இது டயலொக்கின் ‘எதிர்காலம் இன்றே’ என்ற வாக்குறுதிக்கேற்ப நவீன அனுபவங்களை வழங்கும் பங்களிப்பை வெளிப்படுத்தியது. நிகழ்வு பார்வையாளர்களை மெய்சிலிர்க்கச் செய்ததுடன், ஊடகங்களிலும் சமூக வலைதளங்களில் தன்னியக்கமாக நூற்றுக்கணக்கான காணொளி மற்றும் தகவல் பதிவுகளை உருவாக்கவும் வழிவகுத்தது.
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழு முதன்மை சந்தைப்படுத்தல் அதிகாரி லசந்த தேவரப்பெரும கூறுகையில், இலங்கையர்களுக்காக எப்போதும் புதுமைகளைக் கொண்டுவர முயற்சி செய்யும் டயலொக், 31ஆம் இரவு டிரோன் நிகழ்ச்சியின் மூலம், அசாதாரண மற்றும் எதிர்காலத்தை நோக்கிய அனுபவங்களை வழங்குவதில் முன்னிலை வகிக்கிறது. 2025 ஆம் ஆண்டை வரவேற்கும் தருணத்தில் மக்களிடையே ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம்.” என்று கூறினார்.
இந்த ட்ரோன் நிகழ்ச்சி, தொழில்நுட்பத்தின் அதிசயமாகும். இது சரியான பொறியியல் துல்லியத்தையும் சாகசமான கலை நுணுக்கத்தையும் இணைத்து டயலொக் நிறுவனத்தின் டிஜிட்டல் புதுமை மற்றும் பொழுதுபோக்குத் துறைகளில் முன்னோடித்தன்மையை எடுத்துக்காட்டும் நிகழ்ச்சியாக அமைந்தது. நிறுவனங்களுக்கு ஒரு முன்னோடியாகவும், இலங்கையர்களின் வாழ்வையும் தொழில்களையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் உயர்தர தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கான Dialog-ன் அர்ப்பணிப்பு இந்த மறக்கமுடியாத நிகழ்வை சாத்தியமாக்கியது.
இந்த நிகழ்ச்சி, எல்லைகளை மீறி முன்னேறிக்கொண்டிருக்கும் டயலொக்கின் முன்னோடித் தன்மையையும், புதுமைமிக்க முயற்சிகள் மூலம் இலங்கை எதிர்காலத்தை நோக்கி பயணிக்க அதன் உறுதிப்பாட்டையும் வலியுறுத்தியது.