டயலொக் உலகளாவிய வாடிக்கையாளர் சேவை தினத்தினை கொண்டாடியது
வாடிக்கையாளர் சேவை வழங்குனர்களையும், வாடிக்கையாளர் விசுவாசத்தையும் பாராட்டும் வகையில் பல சலுகைகளை வழங்கியது
ஒக்டோபர் 07, 2021 கொழும்பு
இலங்கையின் முன்னணி தொலைத் தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி தனது வாடிக்கையாளர்கள், அவர்களின் அனுபவம், மற்றும் வாடிக்கையாளர் சேவை வழங்குனர்களின் முக்கியத்துவத்தினை அங்கீகரிப்பதற்காக சர்வதேச வாடிக்கையாளர் சேவை தினத்தில் பல செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தது..
Customer Experience Professionals Association (CXPA), ஒரு இலாப நோக்கற்ற சர்வதேச நிறுவனமாகும். இது வாடிக்கையாளர் சேவை துறையின் முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக செயற்படும் ஒரு நிறுவனமாகும். வாடிக்கையாளர் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது, இது வாடிக்கையாளர் சேவை துறையின் வழங்குனர்களால் மேற்கொள்ளப்படும் தனித்துவமான பாத்திரங்களின் செயற்பாடுகளை ஊக்குவிக்கிறதுடன், மேலும் சமூகம் முழுவதும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது. வாடிக்கையாளர் சேவை வழங்குனர்களின் அர்ப்பணிப்பு சேவையினை பாராட்டுவதற்காக டயலொக் குழுவில் ஊழியர்களுக்கிடையே நன்றி தெரிவிக்கும் சிறப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டது. நிறுவனத்தின் ஊழியர்கள் தங்கள் சக ஊழியர்களின் சேவைகளுக்கு பாராட்டு தெரிவிப்பதற்கான வாய்ப்பும் கிடைத்தது. 200 க்கும் மேற்பட்ட சேவை வழங்குனர்களுக்கு தங்களுடைய சேவையினை பராட்டும் வகையில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. மேலதிகமாக PUBG (PlayerUnknown's Battlegrounds Gaming) Gaming போட்டியையும் நடாத்தியதுடன் வெற்றியாளர்களுக்கு பெறுமதிமிக்க பரிசுகளையும் வழங்கியது.
மேலதிகமாக, டயலொக் தனது விசுவாசமான வாடிக்கையாளர்களை பாராட்டி டேட்டா கொடுப்பனவுகள், ஆன்லைன் போட்டி நிகழ்வுகள், கிளப் விஷன் அங்கத்தவர்களுக்கான பிரத்தியேக சலுகைகள் மற்றும் டயலொக் வாடிக்கையாளர் சேவை நிலையங்களில் பெறுமதி மிக்க பரிசுகளையும் வழங்கியது
இது குறித்து கருத்து தெரிவித்த டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழும தலைமை வாடிக்கையாளர் சேவை அதிகாரி சாண்ட்ரா டி சோய்சா, “எங்கள் 17 மில்லியன் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வெல்ல முடிந்ததில் நாங்கள் பெருமைப்படுகிறோம். எங்கள் விசுவாசமான வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே டயலொக் என்ற வர்த்தக நாமத்தின் மிகப்பெரிய பலம். இந்த வாடிக்கையாளர் நாளில், எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களையும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இரவும் பகலும் உயர்தர, திருப்திகரமான அனுபவத்தை வழங்க அர்ப்பணித்துள்ள எங்கள் ஊழியர்களையும் நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம். 'இதயப்பூர்வமான சேவையை' வழங்க எங்கள் ஊழியர்களின் உற்சாகமும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் டயலொக்கின் வெற்றியின் அடையாளங்களில் ஒன்றாகும்.