Body

டயலொக் எண்டர்பிரைஸ், VDOmeet ஊடாக அதன் வணிக வாடிக்கையாளர்களுக்கு வீடியோ ஆலோசனை சேவைகளை எளிதாக்குகிறது

2021 ஜனவரி 4         கொழும்பு

 

news-1

கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான நாட்டின் போராட்டத்தை ஆதரிக்கும் அதன் தொடர்ச்சியான முயற்சிகளில், இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் கார்ப்பரேட் சொல்யூஷன்ஸ் பிரிவான டயலொக் எண்டர்பிரைஸ்,, VDOmeet ஊடாக வீடியோ அழைப்புகளை இலகுவாக மேற்கொள்வதற்கான தளத்தினை ஆதரிக்கின்றது. VDOmeet பாவனையாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வீடியோ மூலம் ஆலோசனை சேவைகளை மேற்கொள்ள வழிவகுக்கின்றது.

பாவனையாளர்கள் தங்கள் VDOmeet மூலமாக தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு LINK இனை அனுப்பி வாடிக்கையாளர்கள் அதனை க்ளிக் செய்வதன் மூலம் வீடியோ அழைப்பில் இணைந்துக்கொள்ள முடியும். மேலும் நேரடியாக சந்திப்பதன் அவசியத்தை கணிசமானளவில் குறைக்கின்றது. எந்தவொரு முன் கணினி நிறுவலும் அமைப்பும் இல்லாமல் இது செயற்படக்கூடியது. இந்த தொலைத்தொடர்பு தீர்வை எந்தவொரு மொபைல் web browser ஊடாகவும் அணுகக்கூடியதாக உள்ளதுடன் பாவனையாளர்கள் அழைப்புகளைப் பதிவுசெய்யவும், ஸ்கிரீன் ஷாட்களை எடுக்க அல்லது 30 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களைக் காணவும் உதவுகிறது. தேவைப்பட்டால் அதை தங்கள் cloud சேமிப்பகத்தில் பதிவிறக்குவதற்கான தெரிவினையும் வழங்குகின்றது. வாடிக்கையாளர்கள் VDOmeet க்கு http://vdomeet.lk/ வழியாக பதிவு செய்யலாம்.

கோவிட்-19 தொற்றுநோய் நாட்டில் தகவல்தொடர்புகளை அணுகும் முறையை விரைவாக மாற்றியுள்ளது. தொழில் வல்லுனர்களுக்கும் நிறுவனங்களுக்கும் சேவை செய்வதோடு மட்டுமல்லாமல், கல்வித் துறையை இலகுவான வசதிகளுடன் VDOmeet மேலும் செயல்படுத்துகிறது. இது ஆசிரியர்களுக்கும் கல்வித்துறை ஊழியர்களுக்கும் தங்கள் மாணவர்களின் கற்றல் தொடர்ச்சியை உறுதிப்படுத்த அனுமதிக்கிறது, அதே நேரத்தில் மருத்துவ வல்லுனர்களுக்கும் சுகாதாரத் துறையினருக்கும் ஒரு சாத்தியமான, நிலையான டெலிஹெல்த் (telehealth) தீர்வை வழங்குகிறது. தொற்றுநோய்க்கான டயலொக்கின் செயற்றிட்டங்களில் ஒரு முக்கியமான முன்முயற்சி மட்டுமல்லாமல், தொலைத் தொடர்புத் துறையின் டிஜிட்டல் உருமாற்ற பயணத்திற்கு VDOmeet பெறுமதி சேர்க்கும் வகையாக அமைந்துள்ளது.

மேலதிக விபரங்களுக்கு http://vdomeet.lk/ க்கு செல்லுங்கள்