Body

Simsyn நிறுவனத்துடன் Dialog Enterprise இணைந்து இலங்கையிலுள்ள நிறுவனங்களுக்கான PABX தீர்வுகளை அறிமுகம் செய்கிறது.

ஜூன் 03, 2021         கொழும்பு

 

news-1

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான Dialog Enterprise, 3CX நிறுவனத்துக்கான இலங்கையின் Platinumதர பங்காளரான Simsyn உடன் இணைந்து அனைத்து விதமான இலங்கை நிறுவன வாடிக்கையாளர்களுக்கும் ஒரு நிகரற்ற தொகுக்கப்பட்ட தனியார் தானியங்கி கிளை பரிமாற்ற (PABX) தொடர்பாடல் தீர்வை அறிமுகம் செய்துள்ளது. நிறுவனங்களுக்கான தொடர்பாடல் சேவைகளை வழங்குவதில் 25 ஆண்டுகளுக்கும் மேலான தேர்ச்சியுடன், Dialogன் வலுவான நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதன் மூலம், இந்த தீர்வானது நிறுவன தகவல்தொடர்புகளின் அனைத்து தேவைகளையும் திறம்பட பூர்த்தி செய்கிறது, மேலும் இந்த அதிநவீன, முழு அளவிலான ஒருங்கிணைந்த தகவல்தொடர்பு (UC) Cloud தளம் டயலொக் ஆசிஆட்டாவின் சிறந்த இணைப்புடன் வழங்கப்படுகின்றது.

Dialog Enterprise இன் IDC Cumulus cloudல் உள்நாட்டில் செயல்படுத்தப்படும் இந்த தளம் அனைத்து தரமான PABX அம்சங்களுக்கும் மேலாக காணொளி வழி கலந்துரையாடல், அழைப்பு பதிவு மற்றும் சமூக வலைத்தள ஒருங்கிணைப்பு API போன்ற சேவைகளையும் வழங்குகின்றது. நிறுவனங்கள் 3CX PABX மற்றும் தொடர்பு மைய சேவைகளுக்கு Dialog Enterprise வழியாக சந்தாதாரர் ஆகலாம். இதன் மூலம் தொலைதூர வேலை பார்த்தலின் இன்றைய தடைக்கற்களை சரிசெய்ய ஒரு பரந்துபட்ட பணியாளர் தளத்துடன் வேறுபட்ட சாதனங்களின் தொகுப்பையும், மாறுபட்ட இணைப்பு பயன்முறைகளையும் இணைத்துக்கொள்ள முடிவதால் தங்கள் பணியாளர்கள் எங்கிருந்தும் வேலை செய்ய முடியும் (WFA).

இந்த சேவைத்தளமானது பலனளிக்கும் ஒருங்கிணைப்புகள், அதிகபட்ச சேவை நேரம், பல்வேறு விலை திட்டங்களுடன் சேவை விரிவாக்கல் வசதி மற்றும் குறைந்தபட்ச முதலீடு ஆகியவற்றுடன் அறிமுகம் செய்யப்படுகின்றது. மேலும், நிறுவன வாடிக்கையாளரிற்கு சிறப்பு நிபுணத்துவ தேவையில்லாமலே தீர்வானது எளிதில் நிர்வகிக்கப்படுகிறது. எந்தவொரு மூலதன செலவினமும் இல்லாமல், நிறுவனங்கள் இப்போது வன்பொருள் செயலிழப்புகள், இயற்கை பேரழிவுகள் மற்றும் இதுபோன்ற எதிர்பாரா இழப்புக்கள் பற்றி கவலைப்படாமல் XaaS (எதுவும் ஒரு சேவையாக) பெற்றுக்கொள்ள முடியும். எனவே, உங்கள் கவனமானது, உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சேவையில் மட்டுமே இருக்க முடியும், இதன் மூலம் சேவை தரத்தையும் செயல்திறனையும் பன்மடங்கு அதிகரிக்கலாம்.

இன்றைய காலத்தின் புதிய வழமை மற்றும் வணிக மாற்றத்துடன் தொடர்ந்து, இந்த நிறுவன இணைப்பு தீர்வானது வாடிக்கையாளர்களுக்கு பரந்த வலையமைப்பு, ஒருங்கிணைந்த தொடர்பு (நிலையான மற்றும் மொபைல்), 24x7 சேவையை விரைவான மற்றும் வினைத்திறனான தீர்வுடன் கூடுதல் செலவின்றி வழங்கும். எனவே, இலங்கையில் அனைத்து விதமான நிறுவன வாடிக்கையாளர்களினதும் அனைத்து HPABX (அலுவலக தொடர்பு சேவை) மற்றும் HCC (வாடிக்கையாளர் தொடர்பு சேவை) தேவைகளையும் திறம்பட பூர்த்தி செய்ய Dialog Enterprise மற்றும் Simsyn ஆகியவை தயார்நிலையில் உள்ளன.

தீர்வுகள் தொடர்பான மேலதிக தகவல்களை business.dialog.lk தளத்திற்கு சென்று பார்வையிடுவதூடாக அல்லது 0777 887 887ற்கு அழைப்பு விடுப்பதினூடாக அறிந்துகொள்ளலாம்.