Dialog அறிமுகப்படுத்தும் ‘Divinci - Futureverse இல் நடைபெறும் இலங்கையின் முதல் Metaverse ஓவியக்கண்காட்சி’
2023 ஏப்ரல் 23 கொழும்பு
இலங்கையின் முதன்மை தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான Dialog Axiata PLC ஆனது தனித்துவமான டிஜிட்டல் ஓவியங்களை ‘Futureverse’ இல் காட்சிப்படுத்தும் இலங்கையின் முதல் Metaverse ஓவியக்கண்காட்சியான ‘Divinci’ ஐ அறிமுகப்படுத்துகிறது. ‘Futureverse’ உங்களை புது உலகில் மூழ்கடிக்கும், ஊடாடல்மிக்க, அனுபவங்கள் நிறைந்த நாட்டின் முதல் Metaverse ஆகும்.
ஊடாடல் மிக்க, மெய்நிகர் நிகழ்வுகளை mixed reality சூழலில் தொடர்ந்து நடாத்துவதன் மூலம் அனுபவங்களின் புதிய எல்லைகளை கடக்கும் விதமாக நடைபெறும் இந்த முன்னெடுப்பினூடாக எதிர்காலத்துக்கு தயாராகி வரும் நாட்டின் படைப்பாளர் சமூகத்தின் அபிவிருத்திக்கு கைகொடுப்பதும் டிஜிட்டல் ஓவிய ரசிகர்களுக்கு இதுவரை இல்லாத புதியதொரு அனுபவத்தை வழங்குவதுமே Dialog இன் நோக்கமாகும். ஓவியர்களுக்கு உழைப்பதற்கு ஒரு புதிய வழியை வழங்குவதன் மூலமும் எதிர்காலத்தில் சேகரிப்பாளர்களுக்கு, தாம் விரும்பிய தனித்துவமான டிஜிட்டல் கலை வேலைப்பாடுகளை சேகரிக்கவும் வழிவகுப்பதன் மூலம் ஓவியத்துறையில் புதியதொரு புரட்சிக்கு வித்திடும் Divinci, டிஜிட்டல் ஓவிய வெளியில் வளர்ச்சிக்கும் புத்தாக்கத்திற்கும் தளமமைப்பதன் மூலம் இலங்கையர்களுக்கு தொழில்நுட்பத்தின் எல்லையில்லா சக்தியை கற்றுக்கொள்ளவும் வாய்ப்பை வழங்குகிறது.
Dialog இனால் வெளியிடப்பட்ட ‘Futureverse’, உங்களை புது உலகில் மூழ்கடிக்கும், ஊடாடல்மிக்க, அனுபவங்கள் நிறைந்த நாட்டின் முதல் Metaverse ஆகும். இது ஒரு மெய்நிகர் உலகம், பயனர்கள் இங்கே விருப்பத்திற்கேற்ப தமது avatar (மெய்நிகர் உரு) ஐ வடிவமைக்க முடியும். அத்துடன் Dialog இன் பொருட்கள் மற்றும் சேவைகளை அணுகுதல், நண்பர்களுடன் அளவளாவுதல், நிகழ்வுகளுக்கு செல்லுதல், விளையாடுதல் மற்றும் இன்னும் பல விடயங்களை நீங்கள் இங்கே செய்யலாம். VR மற்றும் XR ஆகிய மெய்மறக்க செய்யும் தொழில்நுட்பங்களின் உதவியுடன் உங்களுக்கு முடிவிலா அனுபவங்களையும் சாத்தியங்களையும் அள்ளி வழங்கும் Futureverse ஆனது ஒரு எல்லையற்ற இராஜ்ஜியம் ஆகும்.
Divinci ஐ அணுக இத்தளத்தை பார்வையிடுக https://divinci.dialog.lk/frame.html