Body

டயலொக் அனுசரணையில் தேசிய வலைப்பந்து அணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கோலாகலமான வரவேற்பு

2024 நவம்பர் 5         கொழும்பு

 

Dialog Customers Contribute to Little Hearts

பட விபரம்: டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும சந்தைப்படுத்தல் பிரிவின் உப துணைத்தலைவர் அஷானி சேனாரத்ன அவர்கள், தேசிய வலைப்பந்து அணித்தலைவி துலங்கி வன்னிதிலகவை பண்டாரநாயக்க சர்வேதச விமான நிலையத்தில் வரவேற்கிறார்

இலங்கையின் #1 இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் அனுசரணையில் இலங்கை தேசிய வலைப்பந்து அணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது. பெங்களூரில் நடைபெற்ற ஆசிய வலைப்பந்து வெற்றிக்கிண்ணத்தில் அசாத்திய திறனை வெளிக்காட்டிய அணியினருக்கு இக்கௌரவம் அளிக்கப்பட்டது.

இம்முறையும் இலங்கை அணியினர் கிண்ணத்தை வெல்வர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிக நெருக்கமான இறுதிப்போட்டியில் 64-67 என்ற கணக்கில் நூலிழையில் கிண்ணத்தை சிங்கப்பூர் அணியிடம் தவறவிட்டனர். ஒரு தசாப்தத்தின் பின்னர் முதன்முறையாக சிங்கப்பூர் வெற்றி வாகை சூடிய இத்தொடரில் 2018 முதல் தோல்வி காணாத அணியாக திகழ்ந்த இலங்கை இரண்டாம் இடம் பிடித்தது. 2022 இன் பின்னரும் வெற்றிகரமாக கிண்ணத்தை தம்வசம் வைத்துக்கொண்ட அணி, இம்முறை போட்டித்தொடரில் மிகுந்த வலிமைமிக்க அணியாக திகழ்ந்தது. இலங்கை அணியினர் வெறுமனே 3 புள்ளிகளால் வெற்றிக்கனியை சுவைக்க தவறினாலும் போட்டித்தொடர் முழுவதும் தமது அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வண்ணமே இருந்தனர். தொடர்ந்து ஆறாவது முறையாகவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணியின் வீரியமான ஆட்டம், களத்தில் எதிரணியினரை திக்குமுக்காடச் செய்தமை குறிப்பிடத்தக்கது.

டயலொக், 2018 முதல் இலங்கை வலைப்பந்துக்கு திடமான ஆதரவாளராக திகழ்ந்து வருகிறது. தேசத்தின் பெருமைக்கு வளமூட்டி மகளிர் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் நிறுவனம் அளித்து வரும் அனுசரணை, அணியை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியது. பாலின சமத்துவமும் விளையாட்டில் பெண்களுக்கான வாய்ப்புகளும் காக்கப்படும் வகையில் உள்ளிணைக்கைமிக்க (inclusive) விளையாட்டுக்கலாச்சாரத்தை இலங்கையில் வளப்படுத்த வேண்டுமென டயலொக் காட்டும் பாரிய அர்ப்பணிப்பை அணி மீது நிறுவனம் காட்டும் ஈடுபாடு பிரதிபலிக்கிறது.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும சந்தைப்படுத்தல் பிரிவின் உப துணைத்தலைவர் அஷானி சேனாரத்ன அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “ஆசிய வலைப்பந்து வெற்றிக்கிண்ணம் 2024 இல் இலங்கை தேசிய வலைப்பந்து அணியின் வெற்றிகளை கண்டு நாம் மிகுந்த பெருமை கொள்கிறோம். அவர்கள் இரண்டாம் இடம் பிடித்தமை அவர்களது கடின உழைப்பு, பேரார்வம், நாடளாவிய ரீதியில் ரசிகர்களின் இணையற்ற ஆதரவு ஆகியவற்றுக்கு சான்றளிக்கிறது. டயலொக் தொடர்ந்தும் விளையாட்டில் பெண்களுக்கு ஊக்கமளித்தல், பல்வகைத்தன்மை மற்றும் உள்ளிணைக்கையை மேம்படுத்தலில் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறது. வலைப்பந்து அணியுடனான எமது பங்காண்மை இம்மதிப்புக்களை எடுத்துக்காட்டுகிறது. இந்த அணி இன்னும் பல உயரங்களை எட்டிப்பிடிக்க நாம் தொடர்ந்தும் ஆதரவளிப்போம்” என்றார்.

வலைப்பந்துக்கு ஆதரவளிப்பதை போலவே டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, தேசிய கிரிக்கெட், கரப்பந்து மற்றும் Esports அணிகளின் நீண்டகால ஆதரவாளராகவும், இலங்கை கோல்ஃப் ஓபன் போட்டியின் பிரதான அனுசரணையாளராகவும் திகழ்கிறது. தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் நடக்கும் போட்டிகளில் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உதவுவதற்காக, இலங்கை வலைப்பந்து சம்மேளனம் மற்றும் தேசிய பாராலிம்பிக் குழு போன்ற அமைப்புகளுக்கு அனுசரணை வழங்குவதன் மூலம் பல்வகைமை, சம உரிமை மற்றும் அனைவரையும் உள்ளிணைக்கும் விளையாட்டுச் சூழலை ஊக்குவித்து வருகிறது. மேலும், எதிர்கால வெற்றியாளர்களை உருவாக்குவதற்கான தனது திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்துப் போட்டி, தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவு வலைப்பந்து போட்டிகள், மற்றும் பாடசாலை ரக்பி போட்டிகளுக்கும் டயலொக் நிறுவனம் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது.