Body

டயலொக் Dream Music Fest’ க்கு 2வது ஆண்டாகவும் அனுசரணை வழங்குகியது

பெப்ரவரி 08, 2022         கொழும்பு

 

Dream Music Fest

தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொழுதுபோக்கு துறையின் மறுமலர்ச்சிக்கு ஆதரவளிக்கும் அதே வேளையில், காலவரம்பற்ற இசை மற்றும் சமகால இசையால் பொழுதுபோக்கு நிறைந்த மற்றொரு இரவை கொண்டுவர, இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இரண்டாவது ஆண்டாகவும் ‘Dream Music Fest’ க்கு அனுசரணை வழங்கியது.

இந்நிகழ்வானது பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி நெலும் பொகுன மஹிந்த ராஜபக்க்ஷ திரையரங்கின் வெளிபகுதியில் இடம்பெற்றது. Gypsies, Daddy, 2Forty2, Doctor யோஹானி மற்றும் லுனு உட்பட, சித்ரால், பாத்ய சந்தூஷ், சனுக, செனக, ரய்னி மற்றும் ஜெயஸ்ரீ உள்ளிட்ட 7 முக்கிய கலைஞர்களுடன், பிரபலமான உள்ளூர் இசைக் குழுக்களின் நட்சத்திர வரிசையை பார்வையாளர்களால் அனுபவிக்கக்கூடியதாக இருந்தது. Dream Music Fest இன் நட்சத்திரக் குழு, இலங்கையின் இசை ஜாம்பவான் சுனில் பெரேராவிற்கு சிறப்பு அஞ்சலி செலுத்தி கௌரவித்தது. இந் நிகழ்வானது அனைத்து வயதினரையும் மகிழ்விக்கும் வகையில் மேற்கத்திய மற்றும் உள்ளூர் இசை வகைகளை கொண்டிருந்தது.

நிகழ்வு முகாமைத்துவ சங்கம் மற்றும் ஊடக பங்குதாரரான தெரண தொலைக்காட்சியின் ஒத்துழைப்புடன் இடம்பெரும் இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வகுக்கப்பட்டுள்ள அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளும் தகுந்த முறையில் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்வு இடம்பெரும் இடம் முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டிருந்ததுடன் அனைத்து நுழைவாயில்களிலும் வெப்பநிலை பரிசோதனை கருவிகள் வைக்கப்பட்டு கைகளை கழுவுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் உரையாற்றிய இலங்கை நிகழ்வு முகாமைத்துவ சங்கத்தின் தலைவர் நிஷான் வாசலதந்திரி “தொற்றுநோயின் பின்விளைவுகளில் இருந்து வலுவாக மீண்டு வருவதற்கு எங்களுக்கும் முழு துறைக்கும் தொடர்ந்து ஆதரவு அளித்ததற்காக டயலொக் ஆசிஆட்டா பிஎல்சிக்கு நிகழ்வு முகாமைத்துவ சங்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உள்ளூர் பொழுதுபோக்குத் துறையை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டு, இந்த நிகழ்விற்காக தங்களுக்குரிய சேவைகளை வழங்கிய அனைத்து கலைஞர்கள், இசைக்குழுக்கள் மற்றும் உபகரண வழங்குனர்களுக்கும் நான் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.