Body

டயலொக் அனுசரணையில் தேசிய கனிஷ்ட வலைப்பந்து வெற்றிக்கிண்ணம் 2023

2024 பிப்ரவரி 15         கொழும்பு

 

Dialog Powers Junior National Netball Championship 2023

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் வர்த்தகநாமம் மற்றும் ஊடக துணைத்தலைவர் ஹர்ஷ சமரநாயக்க அவர்கள் அனுசரணையை இலங்கை வலைப்பந்து சம்மேளனத்தின் தலைவர் விக்டோரியா லக்ஷ்மியிடம் கையளிக்கிறார். இவர்களுடன் புகைப்படத்தில் (இ) டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தலைவர் முஹம்மட் கஸாலி, (வ) இலங்கை வலைப்பந்து சம்மேளனத்தின் பொருளாளர் பத்மினி ஹொரங்கே, இலங்கை வலைப்பந்து சம்மேளனத்தின் செயற்குழு உறுப்பினர் சம்பா குணவர்தன

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இலங்கையின் விளையாட்டுத்துறையில் இளம் திறமைசாலிகளை வளப்படுத்தும் தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் முகமாக டயலொக் தேசிய கனிஷ்ட வலைப்பந்து வெற்றிக்கிண்ணத்திற்கு மூன்றாவது முறையாக அனுசரணை வழங்கவுள்ளதை பெருமிதத்துடன் தெரிவித்துக்கொள்கிறது. அண்மைய நாட்களில் உலக வலைப்பந்து அரங்கில் இலங்கை அணி சூடிய வெற்றிவாகைகள் எல்லாம் இந்த அனுசரணை எதிர்கால வலைப்பந்து நட்சத்திரங்களை உருவாக்க அளிக்கும் டயலொக் ஆசிஆட்டாவின் ஈடுஇணையற்ற அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.

இந்த போட்டித்தொடர், இலங்கை வலைப்பந்து சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு பெப்ரவரி 17 மற்றும் 18ந்திகதிகளில் கொழும்பு டி. எஸ். சேனாநாயக்க கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளை பெப்ரவரி 18ந்திகதி அன்று நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. டயலொக் தேசிய கனிஷ்ட வலைப்பந்து வெற்றிக்கிண்ணம் 2023 ஆனது 20 வயதுக்குட்பட்ட வீராங்கனைகளுக்கு மத்தியில் வருடாந்தம் நடைபெறும் இப்போட்டித்தொடர்களில் திறமைசாலிகளை இனங்கண்டு அவர்களை அடுத்த கட்டத்துக்கு இட்டுச்செல்ல பயிற்சிகள் அளிக்கப்படும். தேசிய இளையோர் அணியை தேர்ந்தெடுப்பதில் இப்போட்டித்தொடர் இன்றியமையாத பங்கை வகிக்கிறது. இந்த அணி எதிர்வரும் ஆசிய இளையோர் வெற்றிக்கிண்ணம் மற்றும் 2025 உலகக்கிண்ணம் ஆகியவற்றில் போட்டியிடும்.

தேசிய கனிஷ்ட வலைப்பந்து வெற்றிக்கிண்ணத்துக்கு அனுசரணை வழங்குவதில் ஒரு அங்கமாக பெப்ரவரி 18ந்திகதி ந. ப. 12:00 முதல் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளை thepapare.com வழியே நேரலையாக ஒளிபரப்ப டயலொக் திட்டமிட்டுள்ளது. மேலும், இறுதிப்போட்டியானது பி. ப. 04:30 முதல் Dialog Television அலைவரிசை இலக்கம் 63 இல் நேரலையாக ஒளிபரப்பப்படும்.

“இறுதியாக கனிஷ்ட வீராங்கனைகளை இனங்கண்டு தேசிய அணிக்கு தேர்ந்தெடுக்க ஆரம்பித்ததிலிருந்து தேசிய அணி சடுதியான முன்னேற்றத்தை கண்டுள்ளது” என இலங்கை தேசிய வலைப்பந்து சம்மேளனத்தின் தலைவி லக்ஷ்மி விக்டோரியா அவர்கள் தெரிவித்தார். மேலும் தொடர்ந்த அவர் “இலங்கை தேசிய வலைப்பந்து சம்மேளனம் மற்றும் அதன் வீராங்கனைகளை சர்வதேச மட்டத்தில் விளையாட தொடர்ந்தும் ஆதரவளித்து வரும் டயலொக்கிற்கு நான் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றார்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் வர்த்தகநாம மற்றும் ஊடக துணைத்தலைவர் ஹர்ஷ சமரநாயக்க அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “தேசிய கனிஷ்ட வலைப்பந்து வெற்றிக்கிண்ணத்திற்கு தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் அனுசரணை அளிப்பதன் மூலமாக விளையாட்டில் பெண்களை ஊக்குவிப்பதிலும் இளம் திறமைசாலிகளை வளப்படுத்துவதிலும் நாம் காட்டும் அர்ப்பணிப்பை எண்ணி நாம் பெருமிதம் கொள்கின்றோம். 2023 தேசிய கனிஷ்ட பிரிவு போட்டிகள் வெறுமனே ஒரு முக்கியமான திறமைக்காண் தளமாக மட்டுமின்றி நாட்டில் மகளிர் விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கும் டயலொக் காட்டும் அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறது. விறுவிறுப்பான போட்டிகள்ஐ காணவும் தேசிய மட்டத்தில் வலைப்பந்தை மேம்படுத்தவும் நாம் ஆவலாக உள்ளோம்” என்றார்.

டயலொக் ஆசிஆட்டா இலங்கை தேசிய கிரிக்கெட், கரப்பந்து, வலைப்பந்து மற்றும் ஈஸ்போர்ட்ஸ் அணிகளுக்கான பெருமைமிகு அனுசரணையாளராக செயற்பட்டு வருவதுடன், இலங்கை பகிரங்க கொல்ஃபிற்கு பிரதான அனுசரணையாளராக திகழ்வதுடன், பராலிம்பிக் விளையாட்டுகளில் தேசிய பரா விளையாட்டுகளுக்கும் உலக பரா விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் இலங்கை அணிக்கும் அனுசரணை அளிக்கிறது. இவற்றுடன் நாளைய வெற்றியாளர்களை வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம், தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட வலைப்பந்து போட்டிகள், பாடசாலை ரக்பி ஆகியவற்றிற்கு தொடர்ந்து அனுசரணை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.