Body

பாரா மெய்வல்லுனர் வெற்றிக்கிண்ணம் 2024 இற்கு அனுசரணை வழங்குகிறது டயலொக்

2024 கூடும் 09         கொழும்பு

 

Dialog Customers Contribute to Little Hearts

இலங்கையின் #1 இணைப்பு வழங்குனரும், இலங்கை விளையாட்டுப் போட்டிகளின் சிறந்த ஊக்குவிப்பாளருமான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இலங்கையின் மாற்றுத்திறனாளி விளையாட்டுக்களின் உத்தியோகபூர்வ நிர்வாக அமைப்பான தேசிய பாராலிம்பிக் குழுவின் (NPC) ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்படும் 2024 தேசிய பாரா மெய்வல்லுனர் வெற்றிக்கிண்ணத்திற்கு அனுசரணை அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த NPC உடன் இணைந்த 45ற்கும் மேற்பட்ட விளையாட்டு கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 600க்கும் மேற்பட்ட வீரர்களை ஒன்றிணைக்கும் இப்போட்டி, இலங்கையில் மாற்றுத்திறனாளி மெய்வல்லுனர்களுக்காக ஏற்பாடு செய்யப்படும் முதன்மை மெய்வல்லுனர் வெற்றிக்கிண்ணம் ஆகும். இது மே 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. தேசிய பாராலிம்பிக் குழு (NPC) பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர் மற்றும் அறிவுசார் குறைபாடுடையோர் ஆகிய மூன்று மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகளை வழங்குகிறது.

டயலொக், NPC இன் பெருமைமிக்க அனுசரணையாளர் ஆகும். இது இலங்கையில் மாற்றுத்திறனாளி விளையாட்டுக்களுடன் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் முதன் முதலில் 2000 ஆம் ஆண்டில் இலங்கை பாராலிம்பிக் குழுவினருக்கு நிதியுதவி வழங்கியது, அதைத் தொடர்ந்து 2004, 2008, 2012, 2016 மற்றும் 2020 ஆண்டுகளிலும் தேசிய பாரா மெய்வல்லுனர் வெற்றிக்கிண்ணத்திற்கு நிதியுதவி வழங்கியது. இந்த கூட்டாண்மை, உலக அரங்கில் இலங்கை பாரா வீரர்கள் வெற்றிவாகை சூடிட உகந்த சூழலை உருவாக்குவதற்கு உந்துகோலாய் திகழ்ந்து வருகிறது. குறிப்பிடத்தக்க சாதனைகளாக பாராலிம்பிக் போட்டிகளில் ஒரு தங்கம் மற்றும் 3 வெண்கல பதக்கங்கள், உலக பாரா மெய்வல்லுனர் வெற்றிக்கிண்ணத்தில் 2 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்கள், மற்றும் காமன்வெல்த் விளையாட்டுகளில் ஒரு வெள்ளி பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு மேல், ஆசிய பாரா விளையாட்டுகளில் இலங்கை வீரர்கள் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர், கடந்த ஆண்டுகளில் மொத்தமாக 9 தங்கம், 18 வெள்ளி மற்றும் 22 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர்.

NPC உடனான இந்த கூட்டிணைவு, இதுபோன்ற நிதியுதவிகள் மூலம் மற்றும் உதவி தொழில்நுட்பம் வழியாக மாற்றுத்திறனாளிகளை சுயமேம்பாடடைய செய்வதற்கு நிறுவனம் தொடர்ச்சியாக ஆற்றி வரும் அர்ப்பணிப்புடன் இசைகின்றது. கடந்த ஆண்டுகளில், டயலொக் நிறுவனம், தேவைக்கேற்ப சைகை மொழி பெயர்ப்பு வழங்கும் சேவையான DeafTawk, ரத்மலான செவித்திறன் மையம், யாழ்ப்பாண பேச்சு மையம் போன்ற முன்னெடுப்புகளுடனும், சமீபத்திய நடவடிக்கையாக மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதாக அணுகக்கூடிய வகையில் dialog.lkஐ புதுப்பித்தலுடனும் இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளது. டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, MAS ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, சமீபத்தில் டயலொக் MAS இணைப்பு திட்டத்தை தொடங்கியது. மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களை ஆதரிப்பதற்காக, அவர்களுக்கு நிறுவன சூழல்களில் மதிப்புமிக்க அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்காக இந்த முன்னெடுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, தேசிய கிரிக்கெட், கரப்பந்து மற்றும் Esports அணிகளின் நீண்டகால ஆதரவாளராகவும், இலங்கை கோல்ஃப் ஓபன் போட்டியின் பிரதான அனுசரணையாளராகவும் திகழ்கிறது. தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் நடக்கும் போட்டிகளில் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உதவுவதற்காக, இலங்கை வலைப்பந்து சம்மேளனம் மற்றும் தேசிய பாராலிம்பிக் குழு போன்ற அமைப்புகளுக்கு அனுசரணை வழங்குவதன் மூலம் பல்வகைமை, சம உரிமை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரையும் உள்ளிணைக்கும் விளையாட்டுச் சூழலை ஊக்குவித்து வருகிறது. மேலும், எதிர்கால வெற்றியாளர்களை உருவாக்குவதற்கான தனது திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்துப் போட்டி, தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவு வலைப்பந்து போட்டிகள், மற்றும் பள்ளி ரக்பி போட்டிகளுக்கும் டயலொக் நிறுவனம் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது.