Body

மீன்பிடி சமூகத்தை வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளுடன் மேம்படுத்துவதற்காக டயலொக் “கடல்” எனும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜுன் 08, 2021         கொழும்பு

 

news-1

இலங்கையின் தொலைதொடர்பு துறையில் சமீபத்திய தீர்வுகளை அறிமுகப்படுத்துவதற்கான அதன் பணியின் மற்றொரு கட்டமாக இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இலங்கையின் வாழ்க்கையையும் வணிகங்களையும் பலப்படுத்துகிறது. ' கடல் ' என்று பெயரிடப்பட்ட இந்த சேவை, ஒரு நாளில் மூன்று மொழிகளிலும் SMS மற்றும் குரல் அழைப்பின் மூலம் இலவச வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளை வழங்குகிறது.

அனைத்து டயலொக் வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாகக் வழங்கப்படும் 'கடல்' சேவை, வானிலை ஆய்வுத் துறைக்கும், மீன்வள மற்றும் நீர்வளத் துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பாகும். 'கடல்' சேவை கடல் மற்றும் வானிலையின் சவால்களை சமாளிக்க முயற்சிக்கும் மீன்பிடி சமூகத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சிறப்பு சேவையாகும். இந்த சேவைக்காக பதிவுசெய்த மீனவர்களுக்கு தாங்கள் கடலுக்குச் செல்லும் பகுதிகளுக்கு தினசரி வானிலை முன்னறிவிப்புகளை அனுப்புவார்கள். 'கடல்' சேவைக்கு பதிவுசெய்துள்ள மீனவர்கள் மீன்வள மற்றும் நீர்வளத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட முக்கியமான தகவல்கள் வானிலை முன்னறிவிப்புகள், கணிக்க கூடிய வானிலை மற்றும் பேரழிவு எச்சரிக்கைகளை தினசரி அடிப்படையில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் குரல் செய்திகளாகவும் SMS மூலமாகவும் பெற்றுக்கொள்கின்றார்கள். தினசரி குரல் மற்றும் SMS செய்தி சேவைக்கு பதிவு செய்துள்ள மீனவர்களுக்கு அவசர அழைப்புகள் நேரடியாக கிடைக்கும்.

தினசரி குரல் மற்றும் எஸ்எம்எஸ் செய்தி சேவைக்கு பதிவு செய்துள்ள மீனவர்களுக்கு அவசர அழைப்புகள் நேரடியாக கிடைக்கும். 'கடல்' சேவை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து ஆறு மாதங்களுக்குள், பதிவு செய்யப்பட்ட பகுதிக்கான வானிலை முன்னறிவிப்புகள் கணிசமான எண்ணிக்கையிலான மீனவர்களின் உயிரைக் காப்பாற்ற உதவியுள்ளது. இதைக் கட்டியெழுப்ப, ' கடல்' TV' எனும் சமீபத்திய ஒரு துணை சேவை அறிமுகப்படுத்தப்பட்டது, வானிலை, பாதுகாப்பு, மாசுபாடு மற்றும் நிலையான மீன்பிடித்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முன்னறிவிப்புகள் மற்றும் அவசரகால வானிலை எச்சரிக்கைகள் கடற்கரையில் உள்ள முக்கிய துறைமுகங்களில் டிஜிட்டல் திரைகளில் ஒளிபரப்பப்படுகின்றன.

இலவச தினசரி வானிலை எச்சரிக்கைகள் மற்றும் அவசர காலநிலை எச்சரிக்கைகளைப் பெற்றுக்கொள்ள 'கடல்' சேவைக்கு பதிவு செய்ய மூன்று எளிய வழிகள் உள்ளன. Dialog வாடிக்கையாளர்கள் 828க்கு அழைப்பினை ஏற்படுத்தி இந்த சேவையினை பதிவு செய்துக்கொள்ள கூடியதுடன் “ACT”என டைப் செய்து 828 க்கு SMS செய்தும் அல்லது MyDialog App ஊடாகவும் இந்த சேவையினை பதிவு செய்துக்கொள்ளலாம்.